மோதல் வலயத்திற்குச் சென்று நேரடியாக நிலைமையை பான் கீ மூன் பார்வையிடுவார்

ban_ki_moon_.jpg இலங்கையின் மோதல் வலயத்திற்கு ஊடகங்களுடன் விஜயம் மேற்கொள்ளப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக பான் கீ மூன் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

ஜெனீவாவில் நிருபர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், மோதல் வலயத்திற்கு நான் விஜயம் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அந்தப் பகுதி விடுவிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரச அதிகாரிகள் எனக்குத் தெரிவித்துள்ளனர். நேரடியாக அங்கு சென்று நிலைமையை நானே பார்வையிட விரும்புகிறேன். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் கலந்தாலோசிக்கவுள்ளேன் என்று பான் கீ மூன் தெரிவித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

Show More
Leave a Reply to Kusumbo Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kusumbo
    Kusumbo

    நிச்சயம் பார்வையிடுவார் பின் வெளியே வந்து சொல்வார் அங்கு எவருமே கொல்லப்படவில்லை புலிகளைத்தவிர என்று. இவர் என்று தன் சொந்த மூளையில் கதைத்தவர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

    Reply