பிரபாகரன் உயிரிழக்கவில்லையென்று சர்வதேச மட்டத்தில் சிலர் பிரசாரம்: அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் – அமைச்சர் யாப்பா

yappa.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள். எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக சிவிலியன்களை புலிகள் கொலை செய்தனர். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர்.

இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது. எப்போதும் நிம்மதியற்ற வகையிலேயே காலத்தை கழித்தோம். ஆனால், தற்போது எதிர்கால சந்ததியினருக்கு நாம் அதனை விட்டு வைக்கவில்லை. இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். 

Show More
Leave a Reply to DEMOCRACY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    இவ்வாறுதான் உதயன் பத்திரிகையாளர் வித்திக்கு ஆதரவாக பேசுபவர்கள் கைகள் ரத்தக்கறை படிந்தது. அவர்களுக்கும் இதேகதிதான் எனக்கூறினார் கோத்தபாய. கடைசியாக வித்தியை விடுதலை செய்தனர்!

    Reply
  • KUNALAN
    KUNALAN

    //அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்.// யாப்பா.
    வாய்க்கொழுப்பு சீலையால வடியிறது என்று சொல்வது இதைத்தானோ..?

    குணாளன்

    Reply
  • rooto
    rooto

    இது காந்தீயம். இதையே மற்றவர்கள் கூறினாள் அது பயங்கரவாதம். வாழ்க ஜனநாயகம்!! அப்ப இன்னமும் தமிழ் மக்களை ஒழித்துகட்டும் படலம் முடியவில்லை. புலி முடிஞ்சு எனி புலி ஆதரவாளர்கள் எண்டு கொழும்பில இருக்கிற சனத்தையெல்லாம் கொண்டு முடிச்சாபிறகுதான் அடுத்த நடவடிக்கையோ?? வடக்கில ஊர்களுக்கு எல்லாம் இராணுவ பெயர்வைக்க போறாங்களாம்? அப்ப நம்மட டக்ளஸ்க்கு சிக்கபோகுதே????

    Reply
  • palli.
    palli.

    ஜயோ யப்பா பிரபாகரனையும் புலியையும் ஒழித்து கட்டி விட்டோம் (உங்கள் பார்வையில்) ஆகவே எனி எந்த தமிழனென்றாலும் அமத்தி வைத்து பேன் பாக்கலாம் என கனவு காண்பது தெரிகிறது. உங்களுக்கு மூக்கு அரிப்பு எடுத்தால் சொல்லுங்கோ ……தருகிறோம் மூக்கில் விட்டு தும்முங்கோ சாமி. அதை விட்டு இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம். நாம் கருத்து சுகந்திரம் உள்ளநாட்டில் சுவாசிக்கிறோம்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இலங்கைத் தமிழர்கள் “தமிழர்” என்ற பதத்திற்கு, “அரசியல் அர்த்தமோ”, அல்லது “வியாபார அர்த்தமோ” கொண்டிருப்பதும், அவைகளுக்கு ஆதரவாக, “காட்டுக் கத்தல்” கத்துகிறவர்களைப் பின்பற்றி, விசிலடிப்பதாலுமே யாப்பா போன்றோர்கள் தைரியமாக பேசமுடிகிறது. ஏனென்றால், அவர் இவைகளை நடைமுறை ரீதியாக ஒழித்துக் கட்டிய ஒரு நிறுவனத்தின் சார்பாக பேசுகிறர். “தமிழர்” என்ற பதம் சமுதாய ரீதியான அர்த்தம் கொண்டது- அதில் யாப்பாவுக்கும் பொருப்பு உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இன்டர் போலால் தேடப் படுகிற திரு.செல்வராஜா பத்மநாதன், தற்போது “மன அழுத்தத்துடன்” பேசுவது நகைப்பிற்குறியது. கட்ட பொம்பன், ஓமர் முக்தார், திப்பு சுல்தான், பாகா ஜெட்டின், நேதாஜி, போன்றோர்களின் முடிவை வரலாற்றில் அறிந்த போதும், அதை அப்படியே “பிரதியாக்கம்(நகல் போலி)” செய்வதும், “உண்ர்ச்சிகளை கிளப்புவதும்” வியாபாரிகளின் தேவையற்ற விளையாட்டுகள். இலங்கை பிரச்சனையில் இலங்கைக்கேதிரான ஆதங்கங்கள் முவைக்கப் பட வேண்டும். குழப்பமான மன அழுத்தங்கள் இல்லாத, வே.பாலக்குமார், லாரன்ஸ் திலகர், யோகரத்தினம் யோகி, ஆகியோர் எங்கே?. மர்மங்களை வெளிச்சத்தின் முன் வைக்க வேண்டும். இணர்ச்சிகளை கிளப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் ஒன்றும் கேணயன்கள் இல்லை.

    Reply
  • thevi
    thevi

    யாப்பாவின் இந்த பேச்சு கண்டனத்திற்குரியது. மீண்டும் ஒரு அழிவிற்கு பின்னையார் சுழி போடாமல் நாட்டை சரிசெய்ய பழக வேண்டும்.

    Reply