படையினரின் தாக்குதலில் பலியான பிரபாகரனின் உடலை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று பார்வையிட்டதோடு அது பிரபாகரன்தான் என அடையாளம் காட்டினார்.
புலிகள் இயக்கத்தில் முன்னாள் கிழக்குத் தளபதியாக இருந்த கருணா அம்மான் பிரபாகரனின் நெருங்கிய சகாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
keeri
பாம்பின் கால் பாம்பறியும்.
Nila
கருணா துரோகிக்கே துரோகம் செய்த இரட்டைத்துரோகி யார்? ஒட்டு மொத்தமாக தமிழினத்துரோகி யார் என தனிமையில் இருந்து சிந்தித்தால் புரியும். சகோதர இயக்கங்கள் என தன்னினத்தையே கொன்று;பின் தன்னினப்பிள்ளைகளை பிள்ளை பிடிகாரர்கள் போல் பலாற்காரமாகப் பிடித்து அழித்து; தன்மக்களையே தான் வாழக்கேடயமாக்கி அழித்து;தன்மக்களின் பொருள்பண்டங்களை அபகரித்து; அனைவரையும் அகதியாக்கி; இன்று கடசியாய் எம்மினத்தை எதிரி எள்ளிநகையாடுமாறு செய்து எம்மையும் எம் இனத்தையும் 2தலைமுறைக்கு விடுதலையை எண்ணமுடியாது ஆக்கி; எம்மை எதிரியின் கையில் கொடுத்துச் சென்ற பிரபாகன் துரோகியே. அந்தத் துரோகிக்கே துரோகம் செய்த துரோகியை என்ன வென்று சொல்வது?
msri
பி.பி.சி; சொல்லுது> பிரபாகரன் போல் தென்படும் சடலத்தை இலங்கைத் தொலைக்காட்சி காண்பித்ததென்று> அப்ப கருணா அம்மான் காட்டினது வேறையோ? ஒண்ணுமே புரியல்லே மகிந்தாவின் ஆட்சியிலே?
போராளி
பிரபாகரன் 19/05/1981ல் பாண்டிபஜார் சண்டையில் பிரபல்யமாகி, முதன்முறையாக (இந்திய)பொலிசாரிடம் பிடிபட்டு தமிழகத்தின் ஆதரவைப் பெற்றார். இரகசியமாக ராமச்சந்திரனின் உதவியையும் பெற்றார்.
தற்போது இருபத்தெட்டு வருடங்களின் பின்னர் அதே 19/05/2009ல் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தினால் புவியெங்கும் பிரபல்யமாகிவிட்டார். எனவே,வெளினாடுகள் இரகசியமாக அவருக்கு ஆதரவு கொடுக்குமா என்றுபொறுத்திருந்து பார்ப்போம்.
chandran.raja
பகைமுடிக்க புறப்பட்ட தோழர் சீறிசபாரெட்ணமும் அவரின் போராளிகளும் கொல்ப்பட்ட அதே மாதத்தில் பன்னிரண்டு நாட்கள் பிந்தியதாக பிரபாகரன் அதே முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். சிறீசபாரெட்ணத்தின் மரணத்திற்கு விசில்லடித்தவர்கள் இன்று பிரபாகரனுக்கு மெளனஅஞ்சலி செலுத்துகிறார்கள். எப்படியென்றாலும் இருபத்திமூன்று ஆண்டுகள் கூடுதலான காலங்களே! இது தமிழ்இனத்தின் மந்த வளர்ச்சியின் அறிகுறியா?.
பார்த்திபன்
இலங்கை இராணுவத்தால் ஏற்கனவே பிரபாகரன் சுடப்பட்டதாக அரசு புரளிகள் தான் சொல்லியுள்ளது. ஆனால் இன்று அதிகாலை தான் பிரபாகரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சுடப்பட்டிருக்கின்றார்கள். இத்தகவலை இன்றைய பிபிசி செய்தியில் இராணுவத் தளபதியே ஒத்துக் கொண்டிருக்கின்றார். அத்துடன் கருணாவும் பிரபாகரனின் உடலத்தைப் பார்த்து உறுதிப்படுத்தியும் இருக்கின்றார். அத்துடன் கருணாவுடன் தயா மாஸ்டரும் உறுதிப்படுத்த சென்றுள்ளார். இவர்கள் இராணுவத்தினருடன் சென்று பிரபாகரனின் உடலைப் பார்ப்பதை சில இணையத்தளங்களில் வந்துள்ளது. அதில் கருணா தன் முந்நாள் தலைவரைப் பார்த்து கண் கலங்கி நிற்கும் படமும் உள்ளது. அருகில் தயா மாஸ்டரும் சோகத்தடன் பார்த்து நிற்கின்றார்.
palli.
பார்த்திபன் திரைகதை சரியாகதான் இருக்கிறது .ஆனால் மூலக்கதை இல்லையே.
thevi
சில படங்களில் பிரபாகரனின் உடல் சேறுடன் வெறும் உள்ளாடையுடன் காணப்படுகின்றது. ஒரு படத்தில் கண்ணாடி அணிந்த ஒரு நபர் காணப்படுகின்றார். அவர் இலங்கையராக தெரியவில்லை. ஒரு படத்தில் தூரத்தில் இளஞ் சிவப்பு நிறத்தில் ஒரு ஒற்ரறச் செருப்பு காணப்படுகிறது. சில படங்களில் பிரபாகரனின் கண்கள் திறந்தபடி உள்ளன். சில படங்களில் ஒரு கண் மூடியும் ஒரு கண் பாதி திறந்தபடியும் உள்ளன. சில படங்களில் பிரபாகரன் இராணுவ உடை அணிந்துள்ளார். வெறும் உள்ளாடை மட்டுமே உள்ளது. ஒருவர் இறந்தால் உடனடியாக அவரின் கண்களை மூடி விடுவார்கள். நேரம் தாமதித்தால் இறந்தவரின் கண்களை மூடுவது சிரமம் என கூறுவார்கள். மூன்று பேர் இறந்து கிடக்கும் படங்களில் ஒருவர் சூசை மாதிரி உள்ளது. படங்களிலும் தண்ணீர் பின்னணியுள்ளது. பிரபாகனின் தலையில் சாறம் போடப்பட்டுள்ளது. அது யாருடையது? எங்கிருந்து வந்திருக்கும்? தலையில் போடப்பட்டிருப்பது தெளிவாக தெரியவில்லை. சிறிய கைக்குட்டையாகவும் இருக்கலாம்.மேலும் ஒரு படத்தில் பிரபாகரனின் முகத்தில் சிறிய நரைமுடிகள் காணப்படுகின்றன. சில படங்களில் முகம் நேர்த்தியாக சவரம் செய்யப்பட்டுள்ளது.
பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார். இலங்கை அரசிற்கே வெளிச்சம்! காலையில் வெளியிடப்பட்ட படம் சுடப்பட்ட உடனே எடுக்கப்பட்டிருக்குமா? எது முதலில் நடந்தது?
palli.
இதுதாண்டா குழப்பமோ.
பார்த்திபன்
பல்லி, இதற்கு மூலக்கதையோ, திரைக்கதையோ எழுதுவதற்கு இது ஒன்றும் திரைப்படமில்லையே?? பிரபாகரனின் உடலம் என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. ஆனால் அரசு பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் பற்றி முன்பு சொன்னதும் அதே நேரம் இராணுவப் பேச்சாளர் அதனை மறுத்ததும் முரன்பாடானது. ஆனால் இன்று எது உண்மை என்பதை இராணுவம் தெளிவு படுத்தியுள்ளது. அதைப் பல்லி ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என நான் சொல்லவரவில்லை. அப்புறம் நான் பல்லிக்கு பல்லு விளக்க வருவதாக பல்லி நினைத்து விடலாம். ஆனால் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் சில தினங்களில், இது பிரபாகரனின் உடல் தான் என்று பல்லியும் பின்னோட்டம் விடும்.
நண்பன்
பிரபாகரனை காட்டிக் கொடுத்தது அவரது வைத்தியர் றீகன் என ஒரு செய்தி தெரிய வருகிறது. எது எப்படியோ எல்லோருக்கும் நெற்றி பொட்டுக்கு அருகே முகத்திலேயே சூடு விழுந்துள்ளது.
கேபீ நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்கள் எனும் பதத்தை பாவித்துள்ளார்.
உலக நாடுகளோடு நடந்த பேச்சு வார்த்தை காரணமாக படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட அனைவரும் சரணடைந்த பின் தனித் தனியாக விசாரணையின் பின் கொல்லப்பட்டு வருகிறார்கள் போல் தெரிகிறது.
ஒன்று நேற்று பிரபாகரன் கொல்லப்பட்டார் எனும் செய்தியை பிரசுரித்து விட்டு, அதன் தாக்கத்தை பார்த்து விட்டு இன்று கொலை செய்திருக்க வேண்டும். அல்லது கேபீயின் அறிக்கையை பார்த்து விட்டு கைதாகி இருந்த பிரபாகரனை இன்று போட்டுத் தள்ளியிருக்க வேண்டும்.
BC
//கேபீ நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்கள் எனும் பதத்தை பாவித்துள்ளார்.//
இராணுவம் போய் கதைத்து தேநீர் அருந்திவிட்டா சுட்டது?
Hg
Prabha a Coward, Says Karuna
NATIONAL Integration Minister Vinayagamurthy Muralitharan who was at one time a close aide of LTTE leader Velupillai Prabhakaran said yesterday that the latter was always a coward, and it had now been proven.
Mr. Muralitharan flew to Mullaitivu last evening to identify the body of Prabhakaran. He confirmed that it was Prabhakaran’s body.
“I told the media several times that Prabhakaran was a coward. He never went to the battle front. He encouraged a lot of his cadres to swallow cyanide or carry out suicide attacks. Nevertheless, he never did it. Even at the last moment, he had tried to escape into the jungle with a small team when the army attacked him,” Mr. Muralitharan who is informally known as Karuna Amman said.
He said that the fate that befell most other terrorist leaders befell Prabhakaran as well, and it was a reality.
“The entire country has now been liberated from terrorism. It is a blessing for the nation. Tamil people have now realized it,” he said.
Mr. Muralitharan was the LTTE’s eastern commander in the past, and he broke away from the organization in 2004 following a rift with the leadership. He also participated in peace talks during the previous UNP regime representing the LTTE. – (Courtesy: Daily Mirror)
Ahil
மொத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முடிவே எடுத்துவிட்டீர்களா? தேவியின் பின்னூட்டத்தின்படி காணப்படும் ஒவ்வொ புகைப்படங்களும் ஒவ்வொரு போஸில் உள்ளன. அப்படியாயின் எந்தப்படம் பிரபாவின் உண்மைப்படம் என்று எவராவது உறுதிப்படுத்துவீர்களா? கருணா போய் அடையாளம் காட்டினாராம். போய் இத பிரபாகரன் இல்லை என்று சொன்னால் அவரது பதவி போய்விடும். அது சரி உயிரோடு இருக்கும்போதும் ஒரு தலைவனைக் காட்டிக்கொடுத்தான் செத்தபின்பும் காட்டிக்கொடுத்த பெருமையைப் பெற்றிருக்கிறார். நாலு பேருக்கு சொல்லித்திரிய அவருக்குப் பெருமையாயிருக்கும்.
பார்த்திபன்
அகில்,
காலையில் காட்டிய பிரபாகரனின் படம் சீருடையுடனேயே காட்டினார்கள். அதில் அவரின் கண்கள் திறநந்தபடியே உள்ளன. பின்பு கருணாவும் தயா மாஸ்டரும் வந்து அடையாளம் காட்டும் போதும் பிரபாகரனின் கண்கள் திறந்தபடியே தானுள்ளது. அதன் பின்பு பிரபாகரனை கிட்டத்தட்ட 90 வீதம் நிர்வாணப்படுத்தியுள்ளார்கள். அப்போது எடுத்த படங்களில் தான் கண்கள் ஓரளவு மூடியிருக்கின்றன.(இராணுவமே பீன்பு கண்களை மூடி விட்டிருப்பார்கள்)தேவி குறிப்பிட்டது போல் இராணுவத்தினருடன் நீலச்சேட்டில் நிற்பவர் வெளிநாட்டினர் போல் தெரியவில்லை. அவரும் சிங்கள இராணுவம் தான். சிவில் உடையில் நிற்பதனால் அப்படி யோசித்திரு்பார். மேலும் இந்தப் படங்களிலும் கருணாவும் தயா மாஸ்டரும் உள்ளனர். நிர்வாணப்படுத்திய படங்களைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாகவிருக்கின்றது. இராணுவம் தமது ஆத்திரத்தைக் காட்ட இப்படிச் செய்திருக்கலாம். அதனால் இராணுவத்தினருக்குத் தான் இழிவு.
thevi
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் எந்த நிலையில் கொல்லப்பட்டார் என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
எவாறாயினும் இனி நாம் எமது மக்களின் மீள் குடியேற்றம் உட்பட ஏனைய விடயங்களில் கவனமும் ஆதரவும் செலுத்துவதே நமது உடனடி கடமையாகும்.