நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த சுதந்திர நாட்டைக் கட்டி எழுப்புவோம் – மஹிந்த ராஜபக்ஷ

mahinda-rajapaksha.jpgநாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த சுதந்திர நாட்டைக் கட்டி எழுப்புவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். புலிகளிகள் ஆக்கிரமித்த பிரதேசங்கள் அனைத்தையும் படையினர் மீட்டெடுத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று காலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக தமிழ் மொழி மூலமான விசேட உரையொன்றை ஆற்றிய போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது.

சபாநாயகர் அவர்களே இது எமது நாடு. நாம் பிறந்த நாடு. நாம் ஒரு தாய் மக்களாக இங்கு வாழ வேண்டும். இங்கு இன மத குல பேதம் எதுவும் இருக்க முடியாது. கடந்த முப்பது வருட காலமாக எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்த மக்கள் தொகை ஏராளம். சிங்கள, தமிழ்,  முஸ்லிம் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். எல்.ரீ.ரீ.ஈ உடன் செய்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல.

எல்.ரீ.ரீ.ஈ யின் பிடியில் இருந்து எமது சகோதர தமிழ் மக்களைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும். அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க எமது படை வீரர்கள் உயிர் தியாகம் செய்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யைத் தோல்வியுறச் செய்து நாம்பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றியாகும். எமது தாய் நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் வெற்றியாகும்.

இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களைப் பாதுகாப்பதும் எமது பொறுப்பாகும். அது எனது கடமை. இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் அச்சமின்றி சந்தேகமின்றி பாதுகாப்பாகவும் சம உரிமையோடும் வாழ வேண்டும். இதுவே எனது நோக்கமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியையடுத்து சிங்கள மொழியில் உரை நிகழ்த்தினார்.அதன்போது அவர் தெரிவித்ததாவது.

பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்டுள்ளோம். இதன் பின்னர் நாட்டின் ஒவ்வொரு அங்குள நிலப் பரப்பிலும் மக்கள் அதிகாரம் பெற்ற பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட சட்டம் மட்டுமே அமுல்படுத்தப்படும். சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மூன்றில் ஒரு பங்கிலான நிலப்பகுதியில் இவ்வாறான சட்டத்தை செலுத்த முடியாத நிலை தோன்றியிருந்தது. 2005 ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்ற வேளையில் வடக்கு கிழக்கில் புலிகளின் பொலிஸ் வங்கி மற்றும் நீதிமன்றங்களும் இருந்தன. புலிகளின் பாராளுமன்றம் ஒன்று மட்டுமே இல்லாதிருந்தது. நாம் தற்போது அவை அனைத்தையும் நிறந்தரமாகவே இல்லாமல் செய்துள்ளோம்.

நாட்டின் ஒவ்வொரு அங்குள நிலப்பரப்பிலும்  அதாவது 65332 சதுரக் கிலோமீடடர் பரப்பளவிலும் நாட்டின் அரசியலமைப்பு வியாபிக்கும் வகையிலேயே இன்றைய பாராளுமன்ற அமர்வை இன்று நாம் கூட்டியுள்ளோம். இந்த மகிழ்ச்சியை சபா நாயகருக்கு இங்கு கூடியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மற்றும் அதன்பின்னரான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இன்று அனுபவிக்க முடியும்,

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • kithi
    kithi

    ஏசாயா 2:22
    நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

    Reply
  • Tamil
    Tamil

    25 வருட கால இழப்புகளின் பின் எமக்கு உள்ளது நம்பிக்கை ஒன்றுதான் நம்புவோமாக…

    Reply
  • மாயா
    மாயா

    மகிந்த இனி நாட்டில் 2 வித மக்கள் மட்டுமே இருப்பார்கள். ஒன்று நாட்டை நேசிக்கும் மக்கள். மற்றது நாட்டை நேசிக்காத குறிப்பிட்ட சில மக்கள். வேறு எந்த இனமோ – மதமோ – பிரிவோ இந்த நாட்டில் இனி இருக்காது என்றார். சொன்னதை செய்தால் அது மகிந்த சிந்தனையின் உச்சம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் மகிந்த இன மத மொழி பேதமற்ற ஒன்றுபட்ட இலங்கையை எல்லோருக்கும் சம வாய்ப்புடன் இதய சுத்தியோடு கட்டியெழுப்ப முன் வந்தால், நாமும் இதய சுத்தியோடு அதற்கு பாடுபடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக சிங்கள மக்களும், தமிழ் மக்களும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்தே ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்ப முடியும். அதற்கு எம்மினத்தில் இனி வரும் புதிய அரசியல் தலைமைகள் அவற்றை உளப்பூர்வமாக உணர்ந்து எம் இனத்திற்கும் உணர வைக்க வேண்டும். முக்கியமாக ஐரோப்பிய நாடுகளிலுள்ளது போல் பாடசாலைகளிலேயே கட்டாயமாக எம் நாட்டின் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளை எல்லா சமூகத்தினரும் கற்க வேண்டும். எந்த இனமும் இலங்கையின் எந்தப் பாகத்திலும் அச்சமின்றி வாழும் நிலை வர வேண்டும். அதுபோல் அரசியல் கட்சிகள் தனியவே ஒரு இனத்தையோ மொழியையோ அடையாளப்படுத்துவதாக இல்லாமல் எல்லா இனமக்களையும் உள்வாங்கும் தேசியம் சார்ந்த கட்சிகளாக உருவாக வேண்டும். இவற்றையெல்லாம் நாம் இணைந்து சிந்திபப்போமென்றால் விடிவு வெகு தூரத்தில் இல்லை.

    Reply
  • மாயா
    மாயா

    பார்த்திபனின் எண்ணம் யதார்த்தமானது. இதுவே நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்தும். சாதிக்கொரு கட்சி மொழிக்கொரு கட்சி தேவையற்றது. அனைவரும் இந் நாட்டு மக்கள் என்பதை வலியுறுத்த வேண்டும். முதலில் தமிழர்கள் இந்திய மாயையிலிருந்து விடுபட வேண்டும். இல்லாவிட்டால் அங்கு போல் சாதிக் கட்சி அரசியலும் சேர்ந்துவிடும்?

    Reply