இலங்கையில் உடனடியாக அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமிழ் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தமிழர் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு காணப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களது உரிமைகளும் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Rohan
தாங்கள் இலங்கை போனால் உங்களுக்குக் கதவைத் தான் காட்டுவர்கள், ஐயா. இலங்கை என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது என்று சொன்னவரல்லவா நீங்கள். அழிவது வஙகாளி அல்ல, தமிழன் தானே, உங்களுக்கு என்ன வலி?