ஒரு வாரகாலத்திற்கு வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைகழகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது

jaffna_university.jpgவன்னியில் இடம்பெறும் அதிகரித்த மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளதால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வன்னி மாணவர்கள் கல்விகற்க முடியாத மனநிலை காரணமாக வரும் ஒரு வாரகாலத்திற்கு வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைகழகழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

தமது பெற்றோர்கள் மற்றும் உறவுகளது மரணம் காரணமாக எமது பல்கலைகழக மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். தமது உறவுகள் எங்கிருக்கின்றனர், எப்படி இருக்கின்றனர் என்று பெரும் கவலையுடன் இருப்பதனால் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இன்றுமுதல் வகுப்புக்களை இடைநிறுத்துவதென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமக முன் காலாண்டு இடைப்பரீட்சைகளையும் பின்னர் நடத்தும்படி பீடங்களிடம் வலியுறுத்துகின்றோம். மாணவர்களது வகுப்புக்கள் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதால் வகுப்பினை இடைநிறுத்துவதென முடிவெடுத்த மாணவர்களே,உங்களிற்கே இந்த நிலையென்றால் அந்த வன்னியில் அவலங்களில் மாட்டுப்பட்டு உடலாலும் மனதாலும் தளர்ந்து உறவுகளையும் இழந்து வந்திருக்கும் அந்த மக்களையும் நினைத்துப் பாருங்கள். முடிந்தால் இந்த ஒரு வாரத்தில் அந்த மக்களுக்குச் சென்று ஏதாவது உதவி செய்யுங்கள். அதனால் நீங்களும் அந்த மக்களும் ஆறுதல் பெறுவீர்கள்.

    Reply