ஷூ மற்றும் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு, பொதுக் கூட்டம் போன்றவற்றில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம், பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் மீது காலணிகள் வீசப்பட்டன. இச்சம்பவங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பு வீசும் அளவுக்கு அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் காலணியால் குறி பார்க்கப்பட்ட சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் செருப்பு வீச்சுக்கு ஆளானார். ஆனால் கர்நாடகத்தில் அவரது மகன் ராகவேந்திராவும், அவர் சார்ந்த பாஜகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
kamal
ஷூ மற்றும் செருப்பு வீச்சு எல்லாம் ஒரு சிற்றின்பம்தான். தர்மம் வெல்லும்.
msri
வை.கோ.வைத்தியர் ராமதாசு போன்றவர்களுக்கும் செருப்பு வீச்சு நடந்திருந்தால்> இவர்களும் வென்றிருப்பார்களோ?
நண்பன்
//msri on May 17, 2009 4:34 pm வை.கோ.வைத்தியர் ராமதாசு போன்றவர்களுக்கும் செருப்பு வீச்சு நடந்திருந்தால்> இவர்களும் வென்றிருப்பார்களோ?//
இந்த புத்தியால வந்த வினைதான் இப்படி அங்க எல்லாம் நடக்குது. இனியாவது மனுசரா திருந்த பாருங்கோ?
msri
தலைப்பையும் விடயத்தையும் கணக்கில் எடுத்தே> பின்னூட்டம் எழுதியுள்ளேன்! இதை விளங்கும் நுன் அறிவு நண்பனுக்கு இல்லாமை கண்டு வருந்துகின்றேன்! தமிழ் உணர்வாளர்களின் தோல்வி உங்களுக்கும் பேரதிர்ச்சியோ?
நண்பன்
//msri on May 17, 2009 9:33 pm தலைப்பையும் விடயத்தையும் கணக்கில் எடுத்தே> பின்னூட்டம் எழுதியுள்ளேன்! இதை விளங்கும் நுன் அறிவு நண்பனுக்கு இல்லாமை கண்டு வருந்துகின்றேன்! தமிழ் உணர்வாளர்களின் தோல்வி உங்களுக்கும் பேரதிர்ச்சியோ?//
தமிழ் உணர்வாளர்களின் தோல்வி எதிர்பார்த்தது. தமிழ் உணர்வோடு கூட ஒற்றுமையாக 3வது அணியொன்றை உருவாக்குவதை விட்டு கலைஞரிடமும் ஜெயிடமும் பிரிந்து செல்லும் அளவுக்கு அவர்களது ஒற்றுமை இல்லாமல் போன போதே அவர்களது நம்பகத் தன்மை போய்விட்டது. அதிர்ச்சி எமக்கல்ல? எதிர்பார்த்தவர்கள்???