தமிழகத்திலும், புததுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை..
தமிழகத்திலும், புதுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டமி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த இந்த கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு சூட்டப்பட்ட மகுடமாகும்.
விருதுநகர் தொகுதியில், எனது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கூட்டணியின் நலன் காக்கவும், ஈழத் தமிழர் துயர் துடைக்கவும், இந்திய ஜனநாயகத்திற்கு வலுவூட்டவும், முன்பை விட முனைப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.
ramanathan
கோமணமும் இழந்த முழு பேயனின் கருத்து இது முட்டாள்களுக்கு விழுந்த அடி
அனஸ்
ஜெயலலிதா ஒரு சதத்தைதானும் நம்பி இந்த தேர்தலில் செலவளிக்கவில்லை. அவருக்கு தெரியும் தான் தோல்வி என்று. அது தெரிந்தும் வைகோ இப்படி சொல்கிறார் என்றால் அது அவரது இயலாமை மட்டும்தான் வேறில்லை.
accu
ஐயா வைகோ அவர்களே! மீசை முழுவதும் மண் ஒட்டியிருக்கிறது. அதை துடைக்காமலே விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கிறீர்கள். உங்கள் கூற்றுப்படி பணத்துக்காக விலைபோபவர்களா உங்கள் தமிழ்நாட்டு மக்கள்? (உங்களைப் போலவே). அப்படிப்பட்டவர்களின் ஆதரவுடனா எமக்குத் தமிழீழம் பெற்றுத்தரப்போவதாக பூச்சாண்டி காட்டினீர்கள்?. இனியென்ன இலங்கையில் திருவிழா முடிந்துவிட்டது. இலாப நட்டங்களை கணக்குப் பார்த்தபின் கடையைக் கட்டிக்கொண்டு மலேசியா,மொரீசியஸ் என நல்ல இடமாக கடைதிறக்கலாமா என சிந்தியுங்கள். முதலீட்டுக்கு வாய் இருக்குத்தானே.
thurai
தலைவணங்காத் தமிழனே தோல்வியைக் கண்டுகலங்காதே.
புறப்படு எம் தலைவனைக்காக்க.
உனைக் கண்டதுமே சிங்கள இராணுவம் வன்னியை விட்டு ஓடிவிடும்.
துரை
பார்த்திபன்
தாங்கள் வெற்றியீட்டியிருந்தால் வேறு விதமாகச் சொல்லியிருப்பீர்கள். இன்று விழ்ச்சி கண்டு விட்டதால் ஏதோவெல்லாம் புலம்புகின்றீர்கள். உண்மையில் நீங்களும் உங்கள் கூட்டணியும் அறுவடை செய்திருப்பது ஏற்கனவே நீங்கள் விதைத்த வினையென்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்திய அரசியலையும் இலங்கைத் தமிழர் பிரைச்சினையையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எப்படியெல்லாம் போட்டுக் குளப்பினீர்கள். ஆனால் தமிழக மக்கள் குளம்பவில்லை, தெளிவாகவே தங்களைப் போன்றோருக்கு பாடம் புகட்டியுள்ளனர்.
kosompo
வைகோவே! அம்மாவின் வாரிசவே! இன்னுக்குப்பின் முரணாகச் செயல்படுவதும் கதைப்பதுதான் ஜனநாயகமோ? முதல்சொல்கிறீர் ஊழளலால் ஜனநாயகம் செத்துவிட்டது என்றீர் அடுத்து பந்தியில் சொல்கிறீர் ஜெயலலிதாவுக்கு விழுந்தவாக்குகளால் ஜனநாயகம் முடிசூடியது என்றீர். செத்தது எப்படி ஐயா முடிசூடும்? உமது நாட்டில் எப்ப ஊழல் இல்லாமல் இருந்தது. தேர்தலில் நிற்பது ஊழல் செய்வதற்குத்தானே
நண்பன்
//அனஸ் on May 16, 2009 1:36 pm ஜெயலலிதா ஒரு சதத்தைதானும் நம்பி இந்த தேர்தலில் செலவளிக்கவில்லை. அவருக்கு தெரியும் தான் தோல்வி என்று. அது தெரிந்தும் வைகோ இப்படி சொல்கிறார் என்றால் அது அவரது இயலாமை மட்டும்தான் வேறில்லை.//
புலிகளின் இணைய தளங்களில் பார்த்தீர்களாக்கும்? அவையும் செத்த மாதிரி ஆகிட்டுது. அம்மாவுக்கு புலிகள் ஒரு தொகை கொடுத்தவையாம். அதை சுருட்டிக் கொண்டு இருந்துட்டா. பாவம் வாங்கிக் குடுத்த டாக்குத்தரும் வைத்தெரிச்சல் கோவந்தனும் (வைகோ) துண்டும் இல்லாமல் நடுத்தெருவில நிக்கினம். அம்மாவுக்கு எப்படியும் வெற்றி. அதுதான் வானத்திலயிருந்து பொட்டலம் போட தோத்தும் சொன்னவர்.
கலைஞருக்கு துண்டு போர்த்தின திருமா, புலிகளுடைய திட்டு வாங்கியும் வெற்றி பெற்றுள்ளார். இனியும் சுடுபட்ட பூனை அடுப்படியை நாடாமல் இருக்கும்?
அனஸ், தீபம் தொலைக் காட்சியில் நீங்கள்தானே அரசியல் வல்லுனர். படையினர் சுற்றி வளைத்துள்ள முல்லைத் தீவுக்கு ஒரு சுனாமி அடித்தால் அந்த மக்கள் செத்துப் போவார்கள் என்று டீவியில நீங்கள் எதிர்வு சொன்னதை கேட்டு வாய்விட்டு உங்களோட சேர்ந்து அழுதோம். இனி கவலைப்படாதேங்கோ எல்லாரும் இராணுவ பகுதிக்கு வந்துட்டாங்கள். நீங்க சொன்ன மிகுதி பகுதி உங்கள் தீபம் போலவே எரியுதாம்.
Kulan
ஈழத்தமிழ்மக்களின் தலைவிதியைத் தாம்தான் நிர்ணயிப்பது என்று கங்கணம்கட்டிய புலிகள் இங்கேயும் ஒருவிடயத்தை நன்கு படிக்கவேண்டும். ஜெயலலிதா வெல்வார் என்று கருதி நடேசன் அவர்கள் அதிமுக வுக்காகப் பரிந்துரைத்தார் அப்போ பின்னோட்டம் விட்டோம் கவனமாகக் கதைக்க வேண்டும் என்று. உங்களது ஒவ்வொரு சொல்லும் தமிழனின் தலைவிதியை நிர்ணயிப்பதாகவே அமையும். இனி எந்த முகத்துடன் கருணாநிதியைச் சந்திப்பீர்கள். பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் என்றும் வாய்திறக்கும் போது அவதானமாக இதுக்க வேண்டும்.