இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்: மனோ

mano-2.jpg“இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் எனும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்த வலய பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் விபரங்களை அரசு இரகசியமாக வைத்திருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதைக் காரணம் காட்டி அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் கம்பஹா, கண்டி போன்ற பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களின் விலாசம் மற்றும் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முகாம்களில் பல மக்கள் சிக்கியுள்ளதால் தமது உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா? இல்லையா? என இலட்சகணக்கான மக்கள் பதறுகின்றனர். அவர்களுடைய வேதனையை தொலைபேசி வாயிலாக எமக்கு கூறுகிறார்கள்.எனவே முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் உள்ள மக்களின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும்” என்றார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Thambiah Sabarutnam
    Thambiah Sabarutnam

    உயிரழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்ய வேண்டும் என்ற எளிய ஆலோசனையைக் கூடச் சொல்லாமல் மாய்மாலம் செய்கிறார்கள்

    Reply
  • மாயா
    மாயா

    நடைமுறை சாத்தியமானதை மனோ சொல்கிறார். இதை உடனடியாக அரசு செயல்படுத்த முடியாவிட்டாலும், முகாம்களுக்குள் இருப்பவர்கள் அவர்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ளக் கூடிய விதத்திலான வழி வகைகளையாவது செய்ய வேண்டும். உதாரணத்துக்கு தொலைபேசி அல்லது கடித தொடர்புகள் மூலமாகவாவது அதை செய்ய உதவலாம்.

    சிறைகளுக்கோ அல்லது புனர்வாழ்வு மையங்களுக்கோ கொண்டு செல்லப்படுவோர் செஞ்சிலுவை சங்க பதிவுக்குப் பின் கொண்டு செல்லுதல் சிறந்தது. அது அனைவர் மனங்களிலும் அரசின் மேல் நம்பகத் தன்மையை கொண்டு வரும். இவற்றை அரசோடு இணைந்துள்ள தமிழ் கட்சித் தலைவர்கள் அரசிடம் வலுயுறுத்தலாம். அத்தோடு அவர்களது விபரங்களை அக் கட்சிகள் பெற்று குடும்பத்தவர்களுக்கு தெரிவிக்கலாம். இதை EPDP , PLOTE , EPRLF மற்றும் கருணா போன்றவர்கள் செய்யலாம்.TNA யை மறந்து விடுவோம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இச்செயல்முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டதை ஏன் மனோகணேசன் அறியவில்லையா?? முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் வந்த போது இதனை அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால் திடீரென இலட்சக்கணக்கில் மக்கள் வரத் தொடங்கியதால், இதில் சிரமங்கள் அரசிற்கு ஏற்பட்டிருக்கலாம். எனிவரும் காலங்களில் மீண்டும் இதை அரசு நடைமுறைப்படுத்தும் என்று நம்புவோம்.

    Reply
  • rohan
    rohan

    பார்த்திபன்,
    அரசு வெளியிட்ட பட்டியல்களை நாம் எங்கே பார்க்க முடியும் என்று சொல்வீர்களா?

    Reply