தப்பிச் செல்ல முயன்ற சூசையின் குடும்பத்தினர் கடற்படையினரால் கைது!

sri_lanka_navy_logo.pngபடகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார். புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான படகை கடற்படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோதே சூசையின் குடும்பத்தினர் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

சூசையின் மனைவி,  அவரது மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். சூசை இன்னமும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருப்பதாக சூசையின் குடும்ப உறுப்பினர்கள் படையினரிடம் தெரிவித்துள்ளனர். எந்தவொரு புலி உறுப்பினருக்கும் கடல் மூலம் தப்பிச் செல்ல முடியாதவாறு கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க கூறினார். 

Show More
Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • www.navy.lk
    www.navy.lk

    Vigilant Naval troops on close coastal patrol captured a Fibre Glass Dinghy with Sea Tiger Leader Soosai’ s family members who were desperately attempting to escape disguised as refugees today (15th of May 2009) around 0300 hrs in the seas of Mullaithivu. The FGD had eleven (11) persons on board with Soosai’s Wife Sathyadevi, Daughter Sivanesan Mani Arasu, Son Sivanesan Sindhu, Sister-in- Law C Thavarasa (58), Elder Brother’s Son Silanbarasa and a top Sea Tiger Leader Rooban’s Wife N Sivanesan (25). A large sum of cash amounting to Rs. 575,000/= and a hoard of jewellery weighing approximately 2 and ½ Kilograms which were being smuggled were also found in their possession.

    This shows how luxurious life they had been living amassing money while subjecting tens of thousands of innocent Tamil civilians to untold hardships violating all norms of civilized life. The alert Naval troops deployed in the first defence barrier of the Naval Cordon which has been imposed in the North-eastern seas had made the swift move capturing the prized catch.

    The incident is a clear indication of LTTE Sea Tigers’ total disarray of defences due to the unrelenting heavy onslaught being carried out by the SLN against the terror outfit. They have now shrunk to a point of no-return due to the SLN’s tactical maneuvers , even being unable to provide protection to their ever-diminishing top leadership.

    Reply
  • padamman
    padamman

    எக்கசக்க பணம் நகையுடன் தான் கடற்படையினரால் கைது செய்யபட்டு உள்ளனர் இன்னும் பணத்தை என்னி முடியவில்லை எனநம்பகமாக தெரியவருகிறது.

    Reply
  • murugan
    murugan

    தேசியப்பட்டியல் எம்பி ஆகக் கூடும். அவர்களுக்கு எங்கு போனாலும் ராஜவாழ்க்கைதான்.

    Reply
  • thurai
    thurai

    பிறந்த மண்ணும், கட்டிய பெண்ணும் இரண்டு கண்கள் என்பதை பொய்யாக்கி விட்ட புலிகள்.

    மண்ணை காக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை,கட்டிய பெண்ணைக் கூட கைவிட்டு விட்டார்களே புலியின் தலைவர்கள்.

    துரை

    Reply
  • rony
    rony

    பிரித்தானியாவுக்கு அனுப்பி வையுங்கள். உண்ணாவிரதத்திற்கு இன்று சனம் தேவைப்படும் அல்லவா?

    Reply
  • padamman
    padamman

    சூசைக்கு இப்போது சந்தோசமக இருப்பார் தனது குடும்பம் தப்பி விட்டுது என்று

    Reply
  • murugan
    murugan

    சாதாரண புலி உறுப்பினர்களை சீர்திருத்த முகாம் அனுப்பி சிறை வைக்கும அரசு சத்தியதேவிக்கும் பிள்ளைகளுக்கும் விஜபி உபசாரம் செய்யும்.

    Reply
  • suman
    suman

    ஆச்சரியமாக இருக்கிறது.முக்கிய தளபதிகளும் அவர்களின் குடும்பத்தவர்களும் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்று கூறினார்கள்.இப்போது சூசையின் குடும்பத்தவர்கள் கைது என்று செய்தி வருகிறது.எதை நம்புவது? எதை விடுவது என்று தெரியவில்லையே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // எக்கசக்க பணம் நகையுடன் தான் கடற்படையினரால் கைது செய்யபட்டு உள்ளனர் இன்னும் பணத்தை என்னி முடியவில்லை என நம்பகமாக தெரியவருகிறது.- padamman //

    ஒரு வேளை உலக வங்கி கடன் கொடுக்காவிட்டாலும், பிரபாகரன் கொடுத்தனுப்புவார் என்று சொல்ல வாறியள் போல.

    Reply
  • palli.
    palli.

    சில விடயங்களுக்கு பின்னோட்டம் விட பல்லியின் மனம் ஒத்துழைக்க மறுக்கிறது. இருப்பினும் பட்டம்மானின் கருத்துடன் என் கருத்தும் இனைகிறது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இது தலைமைகளின் இறுதியைச் சொல்கிறது. மக்களை விடுவியுங்கள் என்று ஒபாமா சொன்னதை புரிந்த சூசை தன் மக்களை விடுவித்துள்ளார். ஆனால் நேவி பிடித்துக் கொண்டார்கள்.

    அது சரி, எல்லா இளையோரையும் சாவுக்கு அனுப்பு முன் சேர்ந்து படம் பிடித்த தலைவா? நீர் போகும் போது யார் படம் பிடிப்பார்? அதை GTVயில் பார்க்க ஆசை?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Padamman, நீங்கள் தெரிவித்த தகவல் உண்மை தான். பிடிபட்ட சூசையின் மனைவி மற்றும் உறவினர்களிடமிருந்து 5,75,000/= பணமாகவும், இரண்டரைக் கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என்பதை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

    Reply
  • murugan
    murugan

    இரண்டரைக் கிலோ தங்க நகைகளும் இன்றைய சந்தை மதிப்பில் ஏறத்தாள நாற்பதாயிரம் ஸ்ரேலிங் பவுண்களாம். மற்றவர்களை கொள்ளையடித்ததாக சொல்லிக் கொள்ளும் புலிகள் இந்தப் பணத்தை எங்கே “உழைத்திருப்பாகள்” என்பது தெரிந்ததே!

    Reply