இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் எழலாம்: பிரிட்டன் எச்சரிக்கை

mullivaikaal-01.jpgஇலங்கையில் யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களுக்கு எதிரான வன்முறையின் விளைவாக இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் செய்ததாக எழும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தின்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது என பி.பி.சி இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிவிலியன்கள் கொல்லப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார தடைகள் மற்றும் இதர தடைகளை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நிலைபாட்டை பிரிட்டனும் சர்வதேச சமூகமும் எடுக்க வேண்டும் என்பதற்கு இந்த விவாதத்தின்போது அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply to rony Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rony
    rony

    இலங்கை அரசங்கத்தின்மீது பிரித்தானியா போர்க்குற்றங்கள் சாட்டுவதற்கு முனைவதை விட, இன்று வரை இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து அரசுகள்மீதும் போர்குற்ற நடவடிக்கையெடுப்போம் என்று கூறினால் அது நடுநிலை எனலாம். ஏனெனில் இலங்கையில் போர்க்குற்றங்கள் 1983-ஐக்கியதேசியக்கட்சி ஆட்சியிலிருந்தே தொடர்கின்றது என்பதை பிரித்தானிய அரசு மறந்து விட்டதா என்ன?

    Reply