யாழ். இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 20062007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு கலாநிதி கே.குணராசா தலைமை தாங்குவார். நிகழ்வில் ஆசியுரைகளை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், அருட்தந்தை கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் வாழ்த்துரைகளை பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஆறு.திருமுருகன், திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல் ஆகியோரும் வழங்குவார்கள். நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத் தலைவர் பி.கிரிதரன் கலந்து கொள்வார். இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்புரையை பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்குவார்.
இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:
2006 ஆம் ஆண்டு :ஆய்வு: “மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்’ பேராசிரியர் எஸ்.சத்தியசீலன், நாவல்: “உதயக்கதிர்கள்’ திக்குவல்லை கமால், சிறுகதை: “இளங்கோவின் கதைகள்’ இளங்கோ, கவிதை: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, காவியம்: “திருநபி நாயகம்’ ஜின்னா ஷெரிப்புத்தீன், சிறுவர் இலக்கியம்: “உதவும் உள்ளங்கள்’ கவிஞர் மண்டூர் தேசிகன், சமயம்: “இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம்’ டாக்டர் எஸ்.சிவசண்முகராசா, பல்துறை: “தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால.சிவகடாட்சம், மொழிபெயர்ப்பு: தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.
2007 ஆம் ஆண்டு பிரசுரமானவற்றில் பரிசுக்குரியவையாக தெரிவு செய்யப்பட்டவை:
ஆய்வு: “தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல்’ மருதூர் ஏ.மஜீத், நாவல்: “மீண்டும் வருவேன்’ செங்கை ஆழியான், சிறுகதை: “வரால் மீன்கள்’ எம்.எஸ்.அமருல்லா, கவிதை: “இரண்டு கார்த்திகைப் பறவைகள்’ எஸ்.புஷ்பானந்தன், காவியம்: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, நாடகம்: “அரங்கப்படையல்கள்’ கலாபூஷணம் க.செல்லத்துரை, சிறுவர் இலக்கியம்: “மரம் வெட்டியும் இரு தேவதைகளும்’ ஓ.கே.குணநாதன், சமயம்: “வெளிச்சத்தின் வேர்கள்’ தமிழ்நேசன், பல்துறை: “பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை’ கலாநிதி செ.யோகராசா, மொழிபெயர்ப்பு: “பிளேக் கவிதைகள்’ வைரமுத்து சுந்தரேசன்.
பரிசு பெறும் வெளிமாவட்ட எழுத்தாளர்களுக்கு விழாக் குழுவினர் இலவச தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
மற்றுமொரு நிகழ்வாக கனக.செந்தி கதாவிருது பெற்ற சிறுகதை தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவும் இடம்பெறும். நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்துவார். முதற் பிரதியை அ.த.கிருஷ்ணசாமி பெற்றுக் கொள்வார்.
இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகளுக்காக பரிசும் பாராட்டும் பெறும் சிறுகதை எழுத்தாளர் விபரங்கள் வருமாறு: (இக்கதைகள் ஜூன் 2007 முதல் ஜூலை 2008 வரை பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன)
“வைகறை மேகங்கள்’ கந்தர்மடம் தி.மயூரன் (தினக்குரல் 22.06.2007), “இது ஒரு அழிவுக்காலம்’ ஆரையம்பதி ஆ.தங்கராசா (தினக்குரல் 21.10.2007), “சகுனங்கள்’ கனகாம்பிகை கதிர்கான் (வீரகேசரி 21.10.2007), “மதமாற்றம்’ கே.ஆர்.டேவிட் (தினக்குரல் 06.01.2008), “பள்ளிக்கூடம்’ மட்டுவில் ஞானகுமரன் ஜேர்மனி (வீரகேசரி 02.03.2008), “பெரியத்தான்’ சந்திரகாந்தன் முருகானந்தன் (தினக்குரல் 02.03.2008), “அதுவும் சரிதான்’ மா.பாலசிங்கம் (தினக்குரல் 23.03.2008), “வேடத்தனம்’ மல்லிகை சி.குமார் (தினக்குரல் 30.2.2008) “வாழத்துடிக்கும் இதயங்கள்’ ந.பாலேஸ்வரி (தினக்குரல் 22.06.2008), “அதிசயம்’ தேவகி கருணாகரன் அவுஸ்திரேலியா (வீரகேசரி 20.07.2008), “ஒப்பாரி கோச்சி’ மு.சிவலிங்கம் (வீரகேசரி 13.07.2008), “துயரம் தோய்ந்த பயணத்திலே’ எஸ்.டேவிட் (தினக்குரல் 20.07.2008), “அகதிமணம்’ வெள்ளை மணாளன் (தினக்குரல் 06.03.2008), “யாதும் ஊரே’ செ.குணரத்தினம் (வீரகேசரி 27.07.2008).
மற்றுமொரு நிகழ்வாக நாவேந்தன் விருது வழங்கல் 2007, சிறுகதை தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. பரிசளிப்புரையை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் நிகழ்த்துவார். பரிசுக்குரியவர்களாக “இன்னொரு புதிய கோணம்’ கலாபூஷணம் தெணியான், “வற்றாத நதி’ செங்கை ஆழியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பரிசினை வைத்திய கலாநிதி த.சிவானந்தன் வழங்கவுள்ளார். நன்றியுரையை திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்துவார்.