பிரபாகரனுக்கும், பொட்டு அம்மானுக்கும் பகிரங்க பிடியாணை

Pirabakaran_V_2008புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கும் உயர் நீதிமன்றம் இன்று பகிரங்க பிடியாணையை பிறப்பித்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பான விசாரணை இன்று நீதி மன்றத்தில் எடுக்கப்பட்டபோதே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்  தமது இல்லத்தில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும் இந்த இருவருக்கும் இந்திய உயர் நீதிமன்றனத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • ross
    ross

    லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டது மகிந்த.
    ராஜீவ் காந்தியை சுட்டது சந்திரா காந்தி.

    பிடியாணை பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும்!!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Ross, அட அட எவ்வளவு தெரியாத விடயங்களை தெரிய வைச்சிருக்கீங்க. ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் சாகடிச்சவை எண்டல்லோ நினைத்திருந்தேன். நீங்க தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அடித்துக் கூறியுள்ளீர்கள்.

    அப்ப அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸவரன், நீலன் திருச்செல்வம் என்று நீழும் பட்டியலில் வருவோரும் தற்கொலை செய்திருப்பினம் போல.

    அதுசரி யாருங்க சந்திரா காந்தி?? ராஜீவ் காந்தியின் சகோதரரா?? நான் சந்திரா சுவாமியைத் தான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

    Reply
  • மாயா
    மாயா

    //ross on May 13, 2009 1:45 pm லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டது மகிந்த. ராஜீவ் காந்தியை சுட்டது சந்திரா காந்தி. பிடியாணை பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும்!!!//

    கதிர்காமரை சுட்டது புலிகள் . அதுக்கும் ரணிலுக்கு வாக்களிக்க விடாமலும் மகிந்த மாத்தயாவிடம் புலிகள் வாங்கிய தொகை 700 கோடி.

    ராஜீவ் காந்தி சுடப்படவில்லை.பாணு நடத்திய புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலிலே கொல்லப்பட்டார். அந்தக் கொலை தம்மால் நடத்தப்பட்டதை ஏற்று, துன்பியல் சம்பவமாக நடந்து விட்டது என பாலாண்ணவும் தலைவரும் சேர்ந்து மழுப்பி சமாளித்தார்கள். அத்தனை சர்வதேச ஊடகவியளாருக்கும் முன்னால் சொன்னார்கள். இல்லை என்று தலைவர் சொல்லவில்லையே?

    ross, அது யாராப்பா சந்திரா காந்தி? புதுசு புதுசா புலன் விசாரிச்சு எழுதிறியள்?நீங்கள் இவர்களில் யார் பெயரைச் சொல்ல வருகிறீர்கள்?
    சந்திரா காந்தியா? சந்திர சுவாமியா? சந்திர சேகரா?

    Reply
  • Kusumbo
    Kusumbo

    றேஸ்! ………. புலிகளின் கொலைகளைக் கொஞ்சம் கூடப்பார்த்துவிட்டீர் போல் இருக்கிறது. சிலவேளை பயந்திருப்பீர் பாப்பாணியளிடம் போய் ஒரு நூல் கட்டிக்கொண்டு வாரும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலிகளில் பெரும் பாலான ஆக்கள் றோஸ் மாதிரி விபரம் தெரியாதவர்கள். உதாரணத்துக்கு றோஸ்.

    Reply
  • palli.
    palli.

    நீங்க சொல்லுபவர்களை சுட்டதுக்காக பிடியாணயா?? அல்லது இந்த மிருகத்தால் கட்டிபிடித்து சிரித்து முத்தம் கொடுத்து எந்த வித சிந்தனையோ திட்டமோ அல்லது தீர்வோ இல்லாமல் தனது அமைப்பை சேர்ந்த27 ஆயிரம் மனிதர்களை காவு கொடுத்த குற்றத்துக்காக வன்னியென்னும் இயற்க்கை கொடுத்திருக்கும் அறிவிப்பே இந்த பிடியாணை. அதை விட இன்று அவசரமாக ஆவிகள் மகாநாடு ஒன்று மேலோகத்தில் நடந்து உள்ளது இதுக்கு சுந்தரம் தலமை தாங்க ராஜீவ் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு பேசியுளார். இதில் மாத்தையாவும் கலந்து சிறபித்தது குறிப்பிடதக்கது. உன்மையான அனைத்து கட்ச்சி மகாநாடு இதுதான். காரனம் எல்லோருமே தம்பியின் தயவால் இங்கு சென்றவர்கள். அதனால் அவரையும் பொட்டரையும் எப்படி வரவழைப்பது எங்கு தங்க வைப்பது யார் இருவர்களையும் விசாரிப்பது இப்படி பல தகவல்கள் பேசபட்டிருக்கு. இதில் தமிழ் செல்வனும் கலந்து கொள்ள இனக்கம் காட்டியுள்ளதாக இறுதியாக வந்த செய்தி.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பல்லியின் லிஸ்டில் ஊடகவியளாரக சேர்ந்து இளந்திரையன் சேர்க்கப்படாததை கண்டிக்கிறேன்.

    இளந்திரையன் லேட்டஸா சொன்ன தகவல் இது. முதலில் மேலோகத்துக்கு போறது யார் என்று தலைக்கும் , பொட்டுக்கும் பிரச்சனையாம். வந்து நிக்கிற படையை எப்படியும் முடிச்சு போட்டுத்தான் வருவார்கள் என்றாராம் பேச்சாளர். தவறினால் தன்னோடு நிக்கிற சனத்தையும் அழைச்சுக் கொண்டுதான் போகவேணும் என்று விடாப்பிடியா தலை நிக்குதாம்.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    ross on May 13, 2009 1:45 pm லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டது மகிந்த./

    Hello Ross,
    Do not worry because you are not alone, majority of us believe in that, because we read only LTTE propaganda materials (tamil net GTV ….), we live like கிணத்துத் தவளை.
    When this majority will become minority we can easily solve this problem…until then sufferings will continue.

    Reply
  • BC
    BC

    அறிவானவன் சொன்னது முழு உண்மை.ஆனால் வெளிநாட்டில் உள்ள எங்கள் ஆட்கள் அப்படி கிணத்துத் தவளையாக இருப்பதில் இன்பம் காணத்தொடங்கிவிட்டார்கள்.இதில் மாற்றம் வரும் போல் தெரியவில்லை.

    Reply