கடந்த வார இறுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் தொடரும் மோதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கைவிடுத்துள்ளது.
“மேலும் மோசமான இரத்தக்களரி ஏற்படாதவாறு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவேண்டும்” என ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் அவசரவேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
அதேநேரம், விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இணங்கவேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
“கடந்த வார இறுதியில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்” என பான்கீ மூனின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
palli.
இந்த வசனத்தை சொன்னதுக்காக தங்களது பெருமை சாதனை புத்தகத்தில் வர வேண்டும் என்பது பல்லியின் அவா.
msri
பிள்ளைகள் வீட்டில் குளப்படி செய்யும்போது> தகப்பன் தாய்மார் இப்ப குளப்படி செய்யாமல் இருக்க மாட்டியளோ>எனக் கேட்பார்கள்! அப்படி பான்கீ மூன் இலங்கை அரசை கேட்கின்றார்!