இலங்கையில் ரத்தக்களறி ஏற்படக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் கவலை

20090424063601srilanka4.jpgஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பாருக்கும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் போர் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடப்பதை உலகம் கவனித்து வருவதாகவும், இரு தரப்பாரும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அங்கு ரத்தக்களறி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கார்டன் வைஸ் பீபீஸி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் இறுதியில் இடம் பெற்ற தாக்குதல்களும், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் ஒரு முறை இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kunam
    Kunam

    விடுதலைப் புலிகளின் எல்லைகள் சுருங்கித் தலைவரின் தலைப்பாகைக்கு ஆபத்து வருமானால் நாடு முழுவதும் இரத்தக்களறி தான் பாருங்கோ. அதன் பிறகு தான் வெளிநாடுகள் உள்ளுக்கை வந்து நாடு பிரிச்சுத் தருவினம். அதுக்குத்தானே இவ்வளவு அழிவுகளையும் வெகு கவனமாக உலகத்துக்குப் பட்டியல் போட்டுக்கொண்டு வாறம். உலகத்தின் அனுதாபத்தை வேற எப்பிடி எடுக்கிறதாம்?

    Reply
  • rony
    rony

    இலங்கையில் ரத்தக்களரி இனிமேல்த்தான் ஏற்படப்போகின்றதா? இதுவரை ஐ.நா.என்ன கோமாவிலா இருந்தது? இதுவும் ஒரு வகை அரசியல்தான்.

    Reply