சோனியாவை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: 220 பேர் கைது

06-sonia.jpgதேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சென்னையில் இன்று நடைபெற்ற கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களில் 220 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thurai
    thurai

    தமிழகத் தமிழர்களிற்கு நாங்கள் குறைந்தவர்களில்லை என உலகிற்குக் காட்ட 2000 ஆயிரம் பேராவது புலத்தில் கைதாக வேண்டும். இதற்கான் ஆயத்தங்களை ஜிரிவி செய்யுமென எதிர்பார்க்கலாம்.

    வேலைகளை விட்டு, பாடசாலைகளை புறக்கணித்து வீதிக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடப்படும். ஈழத்தில் மக்கள் படைபோல், புலத்தில் இளையோர் அமைப்பெனெ பெயரிடப்படும்.

    துரை

    Reply