ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் – சோனியா

06-sonia.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

தீவுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா பங்கேற்றார், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் கருணாநிதியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சோனியா காந்தியின் பேச்சு..

இந்திரா காந்தி காலம் முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும், மதி்ப்பும் வைத்திருக்கிறீர்கள்.

இலங்கையில் இன்று அப்பாவித் தமிழர்கள் படும் வேதனையும், துயரமும் கண்டு நான் மிகுந்த வேதனையை அடைந்துள்ளேன்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பேரவதிக்குள்ளாகியுள்ளனர். இது எனக்கு வேதனையைத் தருகிறது. நான் கவலை அடைந்துள்ளேன்.

இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படுவது குறித்து இந்தியா உறுதிபட செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்நாட்டு சட்டத்திற்குட்பட்டு, சம உரிமை, சம அந்தஸ்துடன் வாழ, அமைதியுடன் வாழ, கெளரவத்துடன் வாழ ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் தந்தது. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதியைத் தந்ததும் எங்களது அரசுதான். சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வ்ததும் எங்களது அரசுதான்.

என்றார் சோனியா காந்தி.

சோனியா வருகைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், போராட்டங்களை அறிவித்துள்ளதாலும், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • msri
    msri

    இன்றும் 2000 பேரை>மகிந்தப் பேரினவாதம் மனிதப் படுகொலை செய்ய> நீங்கள் மக்களைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம் என சுடலை ஞானம் பேசுகின்றீர்கள்! இதுதான் உங்கள் “மக்களை அழிக்காத” ஆயதங்களின் மகிமையோ?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளின் பிரச்சாரத்தையும் இணையத்தள செய்திகளையும் இனிமேலும் யாரும் நம்புவதாகயிருந்தால் அது கேலிக்குரியதாகவே இருக்கும். படுகொலை செய்யப்பட்டவர்கள் இரண்டாயிரமா? ஆயிரமா? ஐந்நுhறா? பாதுகாப்புகாப்பு வலையத்தில்லிருந்தவர்களின் உயிரைக் குடித்தது சிங்களஅரசின் ஆயுதங்களா? புலிகளின் ஆயுதங்களா?

    Reply