இலங்கை அரசிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று (10.05.2009) காலை 7.30 மணியளவில் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானியாவின் சுயாதீன தொலைக்காட்சியான சனல் – 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிக்பற்றன் வோல்ஸ் என்பவர் உட்பட 3 பேர் அடங்குகின்றனர். இவர்கள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிக்கப்பூர் ஊடாக பிரிததானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் வைத்து நேற்று பிரித்தானிய சுயாதீன தொலைக்காட்சியின் செய்தி தயாரிப்பாளரும், புகைப்படக்கலைஞரும், இவருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி இவர்கள் வெளியிட்ட இலங்கை தொடர்பான தவறான செய்தியொன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.