இலங்கை தமிழரிற்கு ஓப்ரா வின்பிரே உதவ வேண்டும்: பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA) கோரிக்கை

mia-01.jpgஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் , தாக்குதல், மனித உரிமை மீறல், தமிழர்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவ வேண்டும் என உலக டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்பிரேக்கு இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA ) கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாதங்கி பிரபல பாடகியாவார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் பேப்பர் பிளேன்ஸ் என்ற மாதங்கியின் (MIA) இசைத் தொகுப்பில் இடம் பெற்றதாகும். இப்பாடலே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இடம் பெற்றது.

இதேபோல பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ள. மாதங்கி பேப்பர் பிளேன்ஸ், கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், இனப்படுகொலைகள், பெண்களின் அவல நிலை குறித்து உலகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களுக்கு உதவுமாறு ஓப்ரா வின்பிரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் MIA மாதங்கி

Show More

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • மாயா
    மாயா

    நல்ல விடயம். தொடருங்கள்….வாழ்த்துகள். ஆனால் புலிகளுக்குள் மாட்டுப் படாதீர்கள். வேறு யாரோடு வேணுமானாலும் உறவு வைத்து உதவுங்கள்.

    Reply
  • murugan
    murugan

    டாக்டர் ,எஞ்சினியர் ,சட்டத்தரணிகள் என படித்தவர்கள் போல் அல்லாமல் அரசியல் தெரிந்து செயற்பட முன்வாருங்கள்!

    Reply
  • Rohan
    Rohan

    முருகன் படித்தவர்கள் மேல் ஏன் இப்படி ஒரு காழ்ப்புணர்வு?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இவர்மட்டுமல்ல தகப்பனார் அருளர் கூட ஈழக்கனவில் மிதப்பவர்கள். மாற்றுவழி ஏதாவது இருக்கமுடியுமா? என சிந்திக்க மறுப்பவர்கள். பிரபாகரன் துவக்குசூட்டிலும் கண்னிவெடியிலும் மயங்கிப் போனவர்கள். இலக்கு தவறிசுடும் போதிலாவது தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தெரியாதவர்கள். இந்த ஆயுதங்கள் வெளிப்படையாக தமிழ்மக்களின் கழுத்தைப் பதம் பார்கும் போது திருந்த முடியாதவர்கள்யாயின் இவர்கள் வேறு ஓர் நோக்கத்திற்காகவே தமிழ்மக்களைப் பற்றி கதைவிடுகிறார்கள்.

    Reply
  • thurai
    thurai

    புலத்துத் தமிழர் தமிழரின் பெருமைபாடாமலும், சிங்களவர்களை எதிரிகளாகிக்காட்டி தமிழீழ வியாபாரம் செய்யாமலும் இருந்தாலே போதும். ஈழ்ததில் வாழும் தமிழரை குறிப்பாக வன்னி வாழ்மக்களை இந்த பேரவலத்திற்குள் கொண்டு வந்த பெருமை தாங்கள் தலை குனியாத் தமிழரென்றும், தமிழீழமே ஒரேவழியென்றும் கூறி புலிக்கொடி பிடித்தவர்களே.

    எசமான் பட்டினி கிடக்கும்போது ஊரெல்லாம் போய் வயிறுனிரப்புவதுபோல் வாழும் அகதிகளாகிய எங்களிற்கு தமிழனென்று கூறித் தலை நிமிர்ந்து நிற்கத் தகுதியேயில்லை.

    முதலில் ஈழத்தமிழ்ரின் பெயரால் வாழ்வதையும், உங்கள் செயல்களால் ஈழ்த்தமிழரிற்கு வரக்கூடிய தீமைகளையும் சிந்த்தித்து நடந்தாலெபோதும்.

    துரை

    Reply
  • பேப்பர் பிளேன்
    பேப்பர் பிளேன்

    இவருடைய “பேப்பர் பிளேன்” பாடலில், ஆரம்பத்திலிருந்து முடிவுவரை, ஒரே ஒரு சத்தங்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கும், அதாவது, வர்த்தக நிலையங்களில், கல்லாவில், பணம் போடும், “டெல்லர் மிஷினின்” சத்தமும், “துப்பாக்கி வேட்டு சத்தமும்தான்”. இது இரண்டு மட்டும் தெரிந்த இயந்திரமாகிப் போன, “லிவ்விங் டெட்” டுக்களின் முகமாக இவரை(மியா) விமர்சனம் செய்கிறார்கள்.

    Reply
  • indian
    indian

    இவவுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒரு ஒற்றுமை. இருவருமே சந்தர்ப்பவாதிகள்.

    Reply
  • BC
    BC

    இங்கிலாந்தில் பிறந்தது இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி அருள் பிரகாசம் என்று செய்தியில் உள்ளது.இலங்கையில் பிறந்து பின்பு தான் லண்டன் சென்றதாக சொன்னார்கள். பேப்பர் பிளேன் புலிகளுக்கு ஆதரவாக மியா இருப்பதால் விமர்சனம் செய்ய கூடாதோ?

    Reply
  • murugan
    murugan

    முருகன் படித்தவர்கள் மேல் ஏன் இப்படி ஒரு காழ்ப்புணர்வு? றோகன்.

    காழ்ப்புணர்வெல்லாம் கிடையாது. தமிழர்களின் இந்த அரசியலில் கருத்து சொல்பவர்கள் தாம் டாக்டர் என்பதாலும் எஞ்சினியர் என்பதாலும் சட்டத்தரணி என்பதாலும் தாம் சொல்வதே சரி தாம் வழிநடத்துவதே சரி என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படிப்பு சார்ந்து சொல்பவைகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் இவர்கள் அரசியல் பேசுகிறார்கள். அரசியலை அவர்கள் கற்றுத் தேர்ந்தவர்களோ அன்றி முழுநேர அரசியல் செய்பவர்களோ அல்லர். அப்படிப் பார்க்கையில் மியாவின் அரசியல் அனுபவம் என்ன ?அவர் எங்காவது அரசியல் பணியில் ஈடுபட்டவரா? யாரும் அரசியல் பேச் கூடாது எனறு நான் சொல்வதாக எடுக்க வேண்டாம். பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என்பதேயாகும். இதுவரை பட்டதே போதும்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA ) கோரிக்கை விடுத்துள்ளார்.//

    இது தவறான செய்தி- மாதங்கி இலங்கையில் பிறந்து 9 வயது வரை இலங்கையிலேயே இருந்தவர். பின் அகதிகளாக இடம் பெயர்ந்து இந்தியாவில் 3-4 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பின்பு தான் பிரித்தானியா சென்றார்.

    இவர் இலங்கைத்தமிழர் நிலைக்கு குரல் கொடுப்பதே வெறும் பிரச்சாரத் தந்திரம். காரணம் இவர் ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றி பலவருடங்கள் ஆகிவிட்டது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    படித்தவர்கள் அவர்ரவர் துறையில் பாண்டித்தியம் பெற்றிருப்பது ஏதோ ஒரு வகையில் உண்மை தான்.ஆனால் அரசியல் என்பது மனிதநேயத்திற்கு உட்பட்டது அல்லவா? துன்பத்தில் அகப்பட்டு ஆழ்ந்து போய்யிருக்கிற மக்களை மீட்கஉதவாத கல்வியும் பட்டமும் பதவியும் பாண்டித்தியம் இருந்து என்ன பயன்? கல்விமான் என்ற சொல்லும் கேள்விக்குறியாதுதல்வா?.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //இவர் இலங்கைத்தமிழர் நிலைக்கு குரல் கொடுப்பதே வெறும் பிரச்சாரத் தந்திரம். காரணம் இவர் ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றி பலவருடங்கள் ஆகிவிட்டது.//

    இப்படியான கருத்துகளோடு புலிகள் பல கலைஞர்களை அழித்து விட்டனர். அதை நாமும் தொடர வேண்டுமா? மாயாவுக்குள்ளும் தனது இனத்தின் மீதான கரிசனை இருக்கும். புலிகளுக்கு எதிரானவர்கள் கூட புலித் தலைமையின் தவறைத்தான் வெறுத்து பேசுகின்றனரே தவிர, புலியோடு இருக்கும் மக்களை அல்ல.

    உதவ வருவோரை நாமும் தட்டிக் கழித்தால், அது புலிகளுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் எப்படித் தவற விட்டதோ , அதுக்கு ஒப்பான ஒரு செயலை நாமும் செய்வதாகவே ஆகிவிடும்.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    maya is great voice of tamils around the world…..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //உதவ வருவோரை நாமும் தட்டிக் கழித்தால், அது புலிகளுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் எப்படித் தவற விட்டதோ, அதுக்கு ஒப்பான ஒரு செயலை நாமும் செய்வதாகவே ஆகிவிடும்.- நண்பன் //

    உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் மாயா விடயத்தில் உங்கள் கணிப்புத் தவறானது. மாயா தனது விடயத்தில் ஒரு பரபரப்பை உண்டாக்கிய விளம்பரத்தை தேடவே இப்படியான விடயங்களை மேற்கொள்கின்றார். அதுவும் அந்த மக்களுக்கான பிரசாரங்களை விட புலிகளை ஆதரித்து விடும் பிரசாரங்களே அதிகம். அத்தோடு சமீபத்தில் இந்திய சஞ்சிகை ஒன்றில் இவரது தந்தையார் அருளர், தான் தான் பிரபாகரனுக்கு துப்பாக்கியை குறிபார்த்துச் சுடுவதற்கு பழக்கி விட்டதாகவும் பேட்டி கொடுத்திருந்ததாக ஒரு பேட்டியையும் வெளியிட்டு, கீழே பேட்டிச் செய்தியில் புலிகள் அழிந்து கொண்டிருப்பதால் இவர் இப்படி துணிந்து பேட்டி கொடுத்துளளார். இல்லையேல் இந்தப் பேட்டியைப் பார்த்ததும், பிரபாகரன் அருளருக்கு உடன் மரண தண்டனை நிறைவேற்றியுமிருப்பார் என்று போட்டிருந்தார்கள்.

    Reply
  • BC
    BC

    MIAவின் குரல் புலி குரலாக தான் இருக்கும்.

    Reply