உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் கருணாநிதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த 3ம் தேதி முதல்வருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. கூடமே முதுகு வலியும், தொண்டை வலியும் ஏற்படவே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரவு ஒன்பதரை மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
msri
அப்போ இன்று கலைஞரும் “தனிஈழ” பிரகடனம் செய்வார்!
வாசுதேவ
எம்.ஜி.ஆர். ஒரு முறைதான் மருத்துவமனைக்கு சென்றார்,வீடு திரும்பவில்லை,இவர் நூறுமுறை மருத்துவமனை சென்று நலமாக திரும்புவதிலிருந்து,”மருத்துவமனை செட்” டுக்கு,”ஷூட்டிங் சென்றுவருகிறார்” என்று தெரிகிறது.முரசொலி மாறன் குடும்பத்தினர் சோறு தின்பது(சன் டிவி),வட இந்திய முதலாளிகளின் விளம்பரத்தில்.ஜெய டிவி சோறு தின்பது அம்பானி போன்றோர்களின் தயவில்.வன்னி மக்கள் சோறு தின்பது கீழ்,கீழ்-நடுத்தர வர்க சிங்க்ள மக்களின் தயவில்(வட இந்திய உதவியும் இருக்கிறது).”புலம் பெயர் இலங்கைத்தமிழர்கள்” சோறு தின்பது,”வெள்ளைக் காரர்களின் தயவில்”.எவனாவது நான் “தமிழ் முதலாளி”,வன்னி மக்களுக்கு நான் உப்புமா கிண்டி கொடுக்கிறேன்,என் லண்டன் வீட்டில்,ஏழை வெள்ளைக்காரப் பெண் பணிப்பெண்னாக இருக்கிறாள்,என்று வந்தானென்றால்,”எங்களுக்கு,வெள்ளைக்காரனுக்கும,அவர்களின் “டாய்லட் பேப்பர்களுக்கும்” வித்தியாசம் தெரியும்” என்று கூற வேண்டும்.தமிழ் என்று கூறி மார்தட்டுவதற்கு,தமிழர்களுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது.தீபம் டிவி,ஜி டிவி,சன் டிவி,ஜெயா டிவி,…போன்றவை தமிழர்களின் வீக்கங்கள்,வளர்ச்சியல்ல.இந்த வீக்கங்களுக்கு உணவளிக்க தமிழர்களுக்கு சக்தியில்லை.”இனப்பிரச்சனை” மீது சவாரி செய்தவர்களை தலைமைகளாக பார்க்கிரோமே தவிர,அதன் அளவுக்கு ஏற்ற மாதிரி அதை எடுத்துவைத்து…..
பணத்தை உண்மையிலேயே சில வள்ர்ச்சிக் காரியங்களுக்கு தரும் சூழ்நிலை அழுத்த வெளிபாட்டை பிரதிபலிக்கும் “வட இந்திய பெரும் முதலாளிகள்”,எல்லாவற்றையும்,அள்ளிப் பூசிக்கொண்டு,”தலைப்பாகையை” கட்டிக் கொண்டு கோயில்களில் முதல் மரியாதைக்காக நிற்பதில்லை.தங்களை “லார்டுகளை விட” பெரிய “லார்டு லபக்கு தாஸுகளாக” காட்டிக் கொள்வதிலை.அணுகுமுறை “இனப்பிரச்சனையையும்?” அதன் தீர்வையும் மறைக்கின்றன என்பதை புரிந்துக் கொள்ள வேண்டு.