இலங்கையின் வடக்கே மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள தனது இரண்டாவது மருத்துவ குழுவினரை அடுத்த வாரமளவில் இந்தியா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
புல்மோட்டை முகாம்களில் ஏற்கனவே 60 நாட்கள் தங்கி சிகிச்சை அளித்து வந்த இந்திய வைத்திய குழுக்களுக்குப் பதிலாக இவர்கள் அப்பணியை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.