யுத்தத் தீயில் வெந்த மக்களின் வெளிக்காயத்துக்கு மருந்து போடலாம் – சந்திரசேகரன் எம்.பி

parliament.jpgகடந்த 30 வருடங்களாக யுத்தம் என்ற கொடிய தீயினால் வெந்து நொந்த மக்களின் வெளிக்காயங்களுக்கு மருந்து போடலாம் ஆனால் அவர்களின் உள்காயங்களுக்கு மருந்து போடும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதல்லவென ஜே.வி.பி. எம்.பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.

மக்கள் மத்தியில் இனப்பிரிவினை கறைகளை துடைத்தெறிந்தது மக்கள் விடுதலை முன்னணிதான் நலன்புரி முகாம்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத்துயரங்களை களைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்த வரலாறுகளையும் கலாசார பண்புகளையும் கொண்ட தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிலையடைந்துள்ளனர். இந்த துன்பங்களை களைய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    உங்கள் கட்சியின் இனவாத முக்காடை கழட்டி வைத்து விட்டு நீங்களும் அந்த மக்களை காக்க முன் வாங்கோ. கல்தோன்றா மண் தோன்றா கதையை விட்டுட்டு அரசை குடையாமல் நீங்களும் முன் வாங்கோ. செய்யுங்கொ

    புலிகளுக்கு அந்த மக்கள் இப்போது துரோகிகள். செத்தால் கற்பழிச்சால் மட்டுமே அவர்களை தங்கட மக்கள் என்பார்கள். அது மாதிரியில்லாமல் ரோகண விஜேவீராவின் கொள்கையில் 10 சத வீதமாவது செய்ய முயலுங்கோ?

    Reply
  • Rohan
    Rohan

    புலம் பெயர்ந்த மாற்று கருத்து தளங்களில் மட்டும் செய்தி படிக்கும் நண்பர்கள் சற்று அகலப் படிப்பது நலம். இடைத் தங்கல் முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பைத் தங்களிடம் தரும்படி ஜேவிபி ஏற்கெனவே அரசைக் கேட்டிருக்கிறது.

    Reply
  • மாயா
    மாயா

    Rohan
    அரசு குறிப்பபிட்டவர்களைத் தவிர எவரையும் அனுமதிக்கவில்லை என்பது தெரியும். ஜேவீபீ கேட்டதும் அதை அரசு மறுத்ததும் தெரியும்.

    ஏற்கனவே நான் புலிகள் சுனாமி காலத்தில் செய்ததை அரசு அப்படியே பின் பற்றுகிறது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

    அன்று அரசும் வெளி நாட்டு உதவி நிறுவனங்களும் சுனாமி காலத்தில் கொடுத்த உதவிகளை நேரடியாக புலிகள் வாங்கிக் கொண்டு, புலிகள் உதவி செய்வது போலவே புலிகள் மக்களுக்கு அவ் உதவிகளைக் கொடுத்தார்கள். இதையே அரசு வெளியாரை உள்ளே விடாது அரசு நற்பெயர் எடுக்க தானே செய்ய முனைகிறது.

    நல்லது செய்ய இடைத் தங்கல் முகாமுக்குத்தான் போக வேண்டுமென்பதில்லை. அதை வெளியேயிருந்தும் செய்யலாம். உணவு – உடை மற்றும் தேவைகளை அரசு மூலம் செய்வதோடு, அங்கு நடைபெறும் பிரச்சனைகளை அரசிடம் கூறி அதற்கான பரிகாரத்தை தேடலாம். அவை நடவாமல் தடுக்கலாம்.

    கல்தோன்றா மண் தோன்றா எல்லாம் மக்களுக்கு இப்போது தேவையே இல்லை.

    Reply