ஜெ. முரண்பாடுகளின் மொத்த உருவம்-ப.சிதம்பரம்

chitambaram.jpgஅதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா முரண்பாடுகளிம் மொத்த உருவம். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்த அவருடன் நாங்கள் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்குட்பட்ட காரைக்குடியில் பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பல விஷயங்களில் காங்கிரசோடு முரண்படுகிற கட்சியாக இருந்து வருகிறது. அது ஒத்த கருத்துடைய கட்சியாக மாறும் சூழ்நிலை உருவாகும் என்று நான் நம்பவில்லை. அதிமுக மதசார்பற்ற கட்சி என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த கரசேவைக்கு ஆதரவு அளித்தவர்தான் ஜெயலலிதா. நரேந்திர மோடியுடன் நட்பு கொண்டு அவரது பதவி ஏற்பு விழாவுக்கும் சென்று வந்தார்.

சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து வருவதோடு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் பொடா சட்டம், கட்டாய மதமாற்ற சட்டம் போன்றவற்றை கொண்டு வந்து சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியவர். இவரை எப்படி மதசார்பற்ற தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி கடந்த 4 வாரமாக அவர் தனது நிலைகளையும், முடிவுகளையும் மாற்றிக்கொண்டே இருக்கிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திகழும் ஜெயலலிதாவின் நோக்கம் இந்திய அரசை அமைப்பது அல்ல.

தமிழகத்தில் உள்ள திமுக அரசை கவிழ்ப்பது அல்லது கலைப்பதுவுமே ஆகும். இந்த நோக்கத்தோடு செயல்படும் அவரோடு காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உறவு ஏற்பட முடியும். இதுபோன்ற ஐயங்களை கிளப்பும் ஆதாரமற்ற செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • msri
    msri

    ஜெயலலிதா முரணபாடுகளின் மொத்த உருவம்; அதில் தப்பில்லை! அதேவேளை ராகுல்காந்தி- டெல்லி முதலமைச்சர்: செல்வியுடன் -தேர்தல் முடிய கூட்டணி என்கின்றார்கள்! இதை எதன் மொத்த உருவம் என்கின்றது? மொத்த்தில் காஙகிரசின் சமகாலம் குழப்பகாலமே! தாய் (சோனியா) ஒன்று சொல்கினறரார்! மகன் ஒன்று-மகள் ஒன்று சொல்ல மந்திரிகள வேறு ஏதோ சொல்கினறாரகள்! தேர்தல் முடிந்தாலும் குழப்பம் தீராது!

    Reply
  • Kullan
    Kullan

    சிதம்பரம் நீங்கள் ஆடிய ஆட்டத்தை இலங்கைத் தமிழர்களின் பிணங்கள் மேல் பார்கிறோம். மனிதநாகரீக முரண்டாடுகளின் எச்சங்கள் அசிங்கங்கள் தாங்கள் என்பதை இங்கே குறிப்பிடுவது முக்கியம். மனிதநாகரீகத்தின் வீழ்ச்சியே தாங்களும் என்பதை அறிக. சிந்துவெளி நாகரீகம் தன்னக்தேயும் மகாத்மாவை தாங்கிய பூமி புத்திரர்கள் இலங்கையில் சமாதானப்படை என்று எம்உறவுகளை தாங்கியின் இரும்பு சங்கிலிக்குள் இட்டு சம்மலாக்கிய தேசத்தின் மைந்தர்கள் நீங்கள் என்பதை நினைவுறுக. இன்றும் தங்கள் இராணுவம் எத்தனை புலிகளைக் கொன்றது. நீங்கள் கொன்றுகுவித்த அப்பாவி மக்களை இன்ரநெற்றில் பார்ப்பதில்லையா? என்ன மனிதரையா நீங்கள். முரண்பாடுகளைப் பற்றிக்கதைக்கிறீர்கள்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    சிவகங்கை சின்னப் பையன் ஒரு செட்டியார். தயாநிதி மாறன், விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திர குமரன் போன்றோர்களைப் போல், இவரும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இவர் காரைக் குடியில் பேசியிருக்கிறார், அங்கு பிறந்த கவிஞர் கண்ணதாசன் போன்று தமிழ், தமிழர் மீது ஆத்மார்த்தமான அன்பு கிடையாது. ,இவர் மகன் கார்த்திக் சிதம்பரமே (கவிஞர் கனிமொழியின் நண்பர்) இதற்கு உதாரணம். அமெரிக்காவின் இந்திய தரவுகளுக்கு ஏற்ப, இவர் ஒரு மனிதாபிமானம் காய்ந்து போன(நளினி சிதம்பரம்)”புளூடோகராட்”.

    Reply
  • Anonymous
    Anonymous

    அண்ணை பாபர் மசூதி பற்றி எல்லாம் கதைக்கிறியள். ஆனால் டெல்லியில செத்த 2000 சீகியர்கள் என்ன மாதிரி. ஆலமரம் விழுறது நிலம் அதிருறது …ஜக்தீஸ் ரைற்லர் ஞாபகம் வருதோ? முரண்பாடுகளின்ர மொத்த உருவத்தோட ஒட்டு இன்னும் ‘மொத்தமாக’ நீங்கள் எடுத்த முயற்சியலையும் ஒருக்கா சொல்லுங்கோ! நீங்கள் போகாமல் சின்ன ஆக்கலை அனுப்பி எல்லாம் சரிவந்தால் பூங்கொத்தோட போகலாம் எண்டும் இல்லாட்டி நான் எங்கபோனனான் எண்டு கதை விடநினைச்ச உங்கட ராஜதந்திரம் ’செட்டியார் லெவல்’ ராஜதந்திரம் அண்ணை!!!!

    Reply