மட்டக்களப்பு நகரப் பிரதேசப் பாடசாலைகளுக்கு இன்று 4 ஆவது நாளாக மாணவர்கள் சமூகமளிக்கவில்லை. இதனால் பாடசாலைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே சமூகமளித்திருந்ததாக வலயக் கல்விப் பணிமனை தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.
கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா(வயது 08) கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அச்சநிலை பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
thevi
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர் பாதுகாப்பு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. பாடசாலை மாணவர் பாதுகாப்பின் முதலாவது குழு நேற்று களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் அதிபர் ஆசிரியர் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் அங்கம் வகிக்கின்றனர். பொலிஸாரும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த குழுக்களை நியமிக்கப்பது தொடர்பான ஆலோசனையை முன்வைத்துள்ளன. இப்படி உருப்படியான வழிமுறைகளை கையாளுவதை விட்டு வெறும் குரோதங்களை கொட்டுவதில் என்ன பிரயோசனம்(பிள்ளையானா கருணாவா இனந்தெரியாதோரா ஆயுதக் கும்பலா)
Kusumpo
இதுதான் கிழக்கிலங்கை ஜனநாயகவழிக்குத் திரும்கியதால் சம்பாதித்து. அதாவது குழந்தைக்கடத்தல்> கப்பம்> கற்பழிப்பு> அரசியல்படுகொலைகள்….
Nackeera
பாருங்கள் கிழக்கு விடிந்திருக்கிறது இப்படி