64 பீப்பாய்கள் – 13,440 லீட்டர் மண்ணெண்ணெய் புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதலின் போது 64 பீப்பாய்களில் நிரப்பப்பட்டிருந்த 13 ஆயிரத்து 440 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 15 வெற்றுப் பீப்பாய்களை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதலில் அதிசக்தி வாய்ந்த கிளேமோர்கள், படகு வெளி இணைப்பு இயந்திரம் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது, அங்கிருந்து ஒவ்வொன்றும் 210 லீட்டர்களைக் கொண்ட 64 பீப்பாய்களை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பின் மற்றுமொரு பிரதேசத்தில் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் நடத்திய தேடுதல்களின் போது 9 குதிரை வலுவைக் கொண்ட படகு இயந்திரம் – 01, 60 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் – 08, 12.5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு – 01, 7 கிலோ எடையுள்ள கிளேமோர் – 01, 4 கிலோ எடையுள்ள கிளேமோர் – 03, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் – 03 மற்றும் 1.5 கிலோ எடையுள்ள கிளேமோர் – 01, கைக்குண்டுகள் – 53, 750 ரி – 56 ரக துப்பாக்கி ரவைகளைக் கொண்ட பெட்டி – 01, 1500 எப். என். சி. ரக துப்பாக்கி ரவைகளைக் கொண்ட பெட்டி – 02 மற்றும் ரி – 56 ரக துப்பாக்கிகள் – 08 என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kullan
    Kullan

    எடுங்கோ எடுங்கோ எடுத்து எங்களைச் சுடுங்கோ. எதிரியிடம் ஆயுதங்களைப்பறித்து அவனை அவனின் ஆயுதத்தால் அழிப்பதுதான் கெரில்லா யுத்தம். கெரில்லாக்களிடம் ஆயுதங்களைப் பிடித்து மக்களை அழிப்பது இலங்கை யுத்தம்

    Reply