இலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசத் தயாராக இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர் அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வாழும் கலைப் பயிற்சி நிறுவனம் மக்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்தக் கூடாது என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாழும் கலைப்பயிற்சியின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒருபோதும் யுத்த நிறுத்தமொன்றுக்கு செல்லத் தயாரில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்த மத்தியஸ்தம் வகிக்குமாறு ரவிசங்கரிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
MUKILVANNAN
sorry,srilankan goverment only concider devils
Kanna
Oh my god…. Kathankudi masscare, Jaffna muslim diplaced, All other tamilleders killed, Thunukkai killing field – this is our some of the past histry – this living art teacher just wake-up or just born from other planet.. Dear friends take this as our so called freedam fighters’s identity & back room connections has been revieled. After all these suffering real face has been revieled to the thamils..
பார்த்திபன்
தமிழீழம் தான் தீர்வு என்று வன்னி முகாங்களுக்கு சென்று வந்து இந்தியாவில் போய் அறிக்கை விட்டவர், பின்பு எந்து முகத்தை வைச்சு அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த முடியும்?? பொதுவாகவே சாமியார்கள் முற்றும் துறந்தவர்கள் என்பார்கள். இவர் மூளையையே துறந்தவர் போலும்.
Nackeera
நான் வாழும்கலை அமைப்பின் ஒரு முக்கியமான அங்கத்தவர் என்ற காரணத்தால் இதை இங்கே எழுதக்கடமைப்பட்டுள்ளேன். சிறீ சிறீ இரவிசங்கர் ஒரு தமிழர் என்பதை பலர் அறிந்திருக்க நியாயமில்லை. இவரை வங்காளி என்றே பலர் எண்ணினார்கள். நோர்வேயில் சிறீ சிறீயால் நடத்தப்பட்ட தெற்காசிய சமாதானத்துகான மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வை வோ பல இன்னல்கள் மத்தியில் அழைக்கப்பட்டிருந்தார். மகாநாட்டில் பலநாட்கள் ஐரோபிய பாராளுமன்றத் தலைவர் எனப்பலர் கந்து கொண்டனர். மாகாநாடு ஒஸ்லோவில் வெற்றிகரமாக நடந்தேறினாலும் சிங்கள அமைச்சர்கள்> ஆறுமுகம் தொண்டமான் போன்றோர் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்தும் தமிழர்களை துவேசித்தும் தமிழர்களின் போராட்டத்தை வதை வதையாக பொய்களால் மூடிமறைத்தனர். உ.ம்: குமார்பொன்னம்பலம்> ரவிராஜ் போன்றோரைக் கூடக் கொன்றது புலிகள் என்றார்கள். இதை எல்லோரும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள் என்பது தான் வேதனைக்குரியது. இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் இப்படியான ஒரு நன்நோக்குடைய மகாநாட்டை இலங்கைப்பத்திரிகைகள் சிறீ சிறீயை புலிகளின் கையாள் என்று பரப்புரை செய்தனர். அப்படியானால் பிரபாகரனை சிறீ சிறீ சந்திக்க முயன்றபோது பிரபாகரன் சந்திக்க விரும்பவில்லை ஏன் என்பதை சிந்தித்தார்களா? இன்றையசிங்கள அரசு பேச்சுவார்த்தையில் நம்பிக்கையற்றது என்பது திண்ணம்.
Kullan
இன்று சிங்கள அரசுடன் போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று கதைப்பது முட்டாள்தனமானது. என்று சிங்கள அரசுகள் தம்பேச்சு வார்த்தைகளை வெற்றிகரமாய் நிறைவேற்றின? எந்தப் உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது? யாராவது ஒன்றைக் குறிப்பிட முடியுமா?
Nackeera
பார்த்தீபன்!
தமிழ்ஈழம்தான் முடிவு என்று ரவிசங்கர் சென்னதாக நாம் அறியவில்லை. நான் இவர்களுடன் தொடர்புடையவனாக இருப்பதால் எனக்குத்தெரியும். நோர்வேபோல் இவர்கள் பேச்சுவார்த்தை முக்கியம் என்றார்களே தவிர முடிவை இவர்கள் சொல்லமாட்டார்கள். முடிவை எடுக்கவேண்டியவர்கள் பிரச்சனைக்குரியவர்களே தவிர ஜெயலலிதாபோல் மற்றவர்கள் அல்ல. இவர்கள் பலருடன் கதைத்தபோது நான் அறிந்து கொண்டது ஒன்றுமட்டும் தான் இந்தியா ஒருபோதும் பிரிவினையையோ தமிழீழத்தையோ ஆதரியாது என்பதை மட்டும்தான். இப்படிதான் என்பதை உணர்ந்தவர்கள் தமிழ்ழீழம் தான் முடிவு என்று எப்படிச் சொல்ல முடியும்
பார்த்திபன்
// தமிழ்ஈழம்தான் முடிவு என்று ரவிசங்கர் சென்னதாக நாம் அறியவில்லை. – Nackeera //
ஜெயலலிதாவிடம் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று இவர் தெரிவித்ததாக ஜெயலலிதாவே பல ஊடகங்களில் பேட்டி கொடுத்திருக்கின்றார். அதனை நீங்கள் பார்க்கவில்லையா? ஜெயலலிதா சொன்னது பொய்யென்றால் சாமியார் தான் அப்படிச் சொல்லவில்லையென்று ஒரு அறிக்கையாவது விட்டிருப்பாரே??