யுத்தம் தொடர்பான கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது ஆலோசனையின்றி வெளியிடக் கூடாது என கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு பாலித்த ரங்கே பண்டார கோரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றபோது கட்சியின் பொருளாளர் டி.எம். சுவாமிநாதன் வன்னி பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரமாகியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கையில் யுத்தம் தொடர்பான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது தமது ஆலோசனையின்றி அவற்றை உறுப்பினர்கள் வெளியிட கூடாது எனவும் அதேவேளை கடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பாலித்த ரங்கே பண்டார கருத்து வெளியிடுகையில் கனரக ஆயுதங்களைக்கொண்டு பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு அவர் கூறவில்லை எனவும் விளக்கியுள்ளார்.
MUKILVANNAN
RANIL, THE MAN WHO SAID HE RATHAR LIKED KARUNA.THE MAN WHO WELCOMED KARUNA.I FIND MYSELF YEARNING FOR A QUICK BLAST OF I LOVE YOU LOVE ME LOVE. BEST OF ALL WOULD BE TO HEAR PLEASE USE HEAVY WEAPONS ON TAMILS.