“கொலையாளிகளிடம் கெஞ்சி மன்றாடிய போதும் தினுஷிகா கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளாள்’

thinu.jpg“மாணவி தினுஷிகா கடத்தல்காரர்களின் கால்களில் விழுந்து மன்றாடி கெஞ்சிய போதும் அவர்கள் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்கள் என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது’ என்று கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிசன் குணதிலக தெரிவித்துள்ளார். சிறுமியைக் கொலை செய்த மூவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமான சம்பவத்தையடுத்து கல்வியங்காடு பொதுமயானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திரண்டிருந்த பொது மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்; கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மாணவியின் சடலம் மீட்கப்பட்ட அன்றே நான் கூறியிருந்தேன். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோரியிருந்தேன். அன்று உங்களுக்கு தந்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளோம். உங்கள் முன்பு அவர்களை காட்டியுள்ளோம்.

இந்தச் சிறுமி ஆயுததாரிகளுக்கு என்ன செய்தது. அச்சிறுமி அவர்களிடம் என்ன பரிதாபப்பட்டிருக்கும். சிறுமியின் தாய், உறவினர்கள் எவ்வளவு பரிதாபப்பட்டிருப்பார்கள். அந்தச் சிறுமி என்ன குற்றம் செய்தது. தன்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அச்சிறுமி மன்றாடியுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் ஒன்றுமறியாத சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

ஆயுதம் தரித்தவர்கள் பணம் சம்பாதிக்க இவ்வாறான கொடூரச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்றார். பொலிஸார் இக்கொலைக்காரர்களைப் பிடித்ததற்கு பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • accu
    accu

    என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியலே??

    Reply
  • palli
    palli

    பொறுக்கிகளை என்னதான் மேல் பதவியில் வைத்தாலும் அதுகள் பொறுக்கி தனம் செய்வதை நிறுத்த மாட்டார்கள் என்பதுக்கு இந்த இளம் சிட்டுவின் பரிதாபம் ஒரு எடுத்து காட்டு.

    Reply
  • msri
    msri

    வடக்கில் மனிதப் பேரவலம்! கிழக்கில் சின்னஞ சிறார்களுக்கு பேரவலம்! விசாரணைகள் இன்றியே தண்டனைகள் வழங்கப்படுகின்றன! ஆயுததாரிகளுக்கு மேலாலும் “மேலான”ஆயுததாரியின் கட்டளையோ? வட-கிழக்கு மனித உயிர்களின பெறுமான்ம் அற்ற பிரதேசங்கள ஆகியுள்ளது!

    Reply
  • Rohan
    Rohan

    ஒரு சின்னச் சந்தேகம். புத்தகப் பையை எடுப்பதற்கு ஏன் மூன்று சந்தேக நபர்களும் போயிருக்க வேண்டும்? அது சரி – பொதுமக்கள் எப்படிப் பாராட்டுத் தெரிவித்து இருப்பார்கள்?

    Reply
  • thevi
    thevi

    விசாரணை இன்றி என்ன தணடனை. எதிர்கால்ம் திகில் நிறைந்தது.

    Reply