ஜேர்மனியில் முனிச் நகரில் தொழிற்சங்க ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தில் காரால் மோதி தாக்குதல்

ஜேர்மனியில் முனிச் நகரில் தொழிற்சங்க ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தில் காரால் மோதி தாக்குதல்

 

நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் ஜேர்மனியின் முனிச் நகரின் மத்திய பகுதியில் நடைபெற்ற வேர்டிக் என்ற தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களை இடித்து தள்ளியது.

இத்தாக்குதலில் 28 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளின் படி காரை ஓட்டி வந்த நபர் 24 வயதுடைய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் . ஜேர்மனியில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாபேரிய மாநில பிரதம மந்திரி மார்க்கூஸ் சோடர் இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்கிறார். மேலும் அவர் கூறும் போது மினி கூப்பர் வகையான கார் ஒன்றைச் செலுத்தி வந்த தாக்குதலாளிஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்த பொலிஸ் காரை முந்திச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார். அப்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் சிறிய காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை உடனடியாகவே கண்டித்த முனிச் நகரத்தில் செயற்படும் ஆப்கானிஸ்தான் சமூக கலாச்சார அமைப்பு. மேலும் ஆப்கானிஸ்தான் அமைப்பு இத் தாக்குதலை காட்டுமீராண்டித்தனமான தாக்குதல் என சாடியதோடு , இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் ஜேர்மனிக்கும் ஆப்கானிஸ்தானுக்குமே ஆபத்தானவர்கள் எனக் கண்டிக்கின்றது.

அதேசமயம் எதிர்வரும் 23 ஆம் திகதி பெப்ரவரி ஜேர்மனியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு இத்தாக்குதலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என அகதிகளுக்கான கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிறிஸ்மஸ் சந்தையில் நடத்த தாக்குதலுக்குப் பின் நடந்த 3வது தாக்குதல் சம்பவஙமாக இதுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *