பயங்கர வாத நடவடிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவில் தலைநகர் பீஜிங்கில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்ட அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மா ஸொக்சு இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து கவனத்திற்கொண்ட பின்னர் தமது அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறினார். இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் அமைதியும் சமாதானமும் ஏற்படுவதைக் காண தான் ஆவலாயிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.