தடுப்பு முகாம்களில் கொடுமை – பிரித்தானியாவின் ‘சனல் – 4’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

chenal-04.jpg பிரித்தானியாவின் ‘சனல் – 4’ காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் வைக்கப்பட்டுள்ள ‘முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன;. குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

பக்கச்சார்பற்ற முறையில் – சுதந்திரமாகப் – படமாக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகளும் முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டர் நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

45 Comments

  • ஜீவகன்.
    ஜீவகன்.

    இதையும் புலிதான் செய்யுது எண்டு வாங்கோ வந்து யாரும் வைத்தில அடியுங்கோ. அங்க அகதி முகாமெண்டும் ஆறாத புண் எண்டும் சனம் அவதிப்படுது. நீங்கள் நியாயத்தீர்ப்பு வாசிச்சுக்கொண்டு திரியுங்கோ.

    Reply
  • மாயா
    மாயா

    இப்படியான நிகழ்வுகள் நடக்க முடியாதென யாரும் உறுதி கூற முடியாது. அதே சமயம் இங்கே தொண்டர் பணியாளர் ஒருவர் இப்படி நிழலுக்குள் இருந்து பேசுவாரா என்பதும் சந்தேகமே?

    சில ஒளிப்பட தொகுப்புகளோடு தொண்டர் பணியாளர் மற்றும் ஒரு தாயின் வேதனை வெளிப்பட்டுள்ளது. இப்படியான ஒரு நிகழ்வு நடக்குமானால் அதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்தோடு அங்கு அரசுடன் கைகோர்த்து பதவியிலிருக்கும் தமிழர்களும் TNA மற்றும் ஐதேகட்சியும் குரல் கொடுக்கலாம். இவை சில வேளை பொய்யான பரப்புரையாக இருந்தாலும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க வழி செய்யும்.

    புலிகள் தரப்பில் இருந்து கிடைக்கும் வீடியோக்களை அல்லது செய்திகளை CNN BBC Channel 4 News போன்றவை ஒளிபரப்புகிறது. இதேபோல் இதுவும் அப்படியாக இவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு ஒளித் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

    இவை குறித்து ICRC பொறுப்புடன் பதில் சொல்லலாம். ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகள் இது குறித்த உண்மை தகவல்களை வெளியிட்டு இவற்றைத் தடுக்க முன்வர வேண்டும்.

    இது உண்மையாக இருந்தால் கண்டிக்கப்பட வேண்டியது என்பதை விட அவை தொடராமல் இருக்க இடைத் தங்கல் முகாம்களில் இருப்போருக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

    இவற்றைக் காண:
    Channel 4 News reports from a camp in the northern Sri Lankan city of Vavuniya, where Tamil refugees have been taken.

    Shocking claims have emerged of shortages of food and water, dead bodies left where they have fallen, women separated from their families, and even sexual abuse.
    VIDEO 1 http://www.channel4.com/news/articles/politics/international_politics/grim+scenes+at+sri+lankan+camps+/3126257

    This programme obtained the first independently filmed pictures from the internment camps set up by the Sri Lankan government to house Tamils who have fled the country’s civil war.

    Reply
  • murugan
    murugan

    வெஸ்ற்மினிஸ்ரர் சதுக்கத்தில் போய் நின்றா நியாயம் கேடக முடியம்? இந்த நிகழ்வுகள் நின்று விடவா போகின்றன? தாமே தமிழ் ஈழம் எடுத்து தருவோம் என்றவர்கள் தந்த “பாதுகாப்பான” வாழ்க்கை இதுதான்!

    Reply
  • palli
    palli

    எமது உறவுகள். எமது கிராமம். எமது ஆளுமை(புலிகள்) இவை அனைத்தும் இந்தும் அங்கு நடக்கும் துன்பங்களை எமக்கு ஒரு சர்வதேச நாடு இப்படிதான் அங்கு நடக்குது என சொல்லும் நிலை. இது யாரால் வந்தது?. புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் என்னும் குறளை யார் வகுத்தது??தான் மட்டும் தான் தமிழரை காக்க வேண்டும் என சொல்லியது யார்?? இப்போதேனும் மக்கள் மக்கள்தான். மிருகம் தனி என எதாவது ஒரு குட்டி புலியாவது சொல்லுகிறதா?? மழைக்கு பிடித்த குடைபோல் மக்களை பாதுகாப்புக்கு உங்கள் முன் நிறுத்துவதை இந்த நேரத்திலாவது விடக்கூடாதா??மக்களை பாதுகாக்க கோரி நடத்தும் ஊர்வலத்தில் புலிக்கொடிக்கு என்ன வேலை. தமிழரின் முதல் எதிரி சிங்கள ராணுவத்தைவிட இந்த பாளாய் போன கொடியும் தலையின் கட்டவுட்டும் தான். வருடம் ஒரு முறை சிந்திக்கும் மனிதனுக்கு தலமை ஒரு கேடா?? அதுதான் அந்த அம்மா ஈழம் மலியும்போது கடன் பட்டாவது வேண்டி தருவதாக தோழி மீது சத்தியம் செய்து விட்டாரே. அப்புறம் எதுக்கு ஆயுதம் புலிக்கு? முதுகு சொறியவா??

    அரசாங்கம் பல தவறும் கொடுமையும் தமிழருக்கு செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதை தமிழரோ அல்லது சர்வதேசமோ தட்டி கேக்க புலிகள் அரசியலில் இருந்து கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும். அதுவரை சின்ன திரை தொடர்போல் தமிழர் அழ வேண்டியதுதான்.

    Reply
  • சங்கு
    சங்கு

    ஜீவகன் புலி செய்யாததுகளை புலிதான் செய்ததென்று ஒருவரும் சொல்வதில்லை. அதேநேரம் இராணுவம் செய்யும் பிழைகளையும் சுட்டடிக் காட்டுகிறார்கள். ஆனால் புலிஆதரவாளர்கள் என்றுமே புலியின் தவறுகளை கண்டித்ததில்லை; மாறாக புலியின் கொலைகளையே நியாயப்படுத்தியே வந்துள்ளார்கள். அதனால்தான் இன்னும் உங்கள் மீதான விமர்சனங்கள் கடுமையாகவே வருகின்ளறன. எதை கதைத்தாலும் யார் சொன்னது? சொன்னவர் பெயரை வெளிவிடுங்கள். ஆதாரம் எங்கே? என்று கேட்டுக் கேட்டே புலியின் பிழைகளை மூடி மறைப்பீங்கள். ஆனால் உங்களின் பரப்புரைக்கு மட்டும் பெயர் ஆதாரம் எதுவுமே தேவையில்லை.

    Reply
  • sus
    sus

    வன்னியில் இருக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வா,வா எனக் கூப்பிட்ட தேசம்நெற் ஆசிரியர்கள் உட்பட ….. இதற்கு என்ன பதில் சொல்ல போறார்கள்? channel 4 வையும் புலி என குற்றம் சாட்டுங்கள் நாள் போக பிபிசி [bbc],sky போன்றவற்றையும் குற்றம் சாட்டுங்கள் இதைத் தவிர உங்களால் என்ன செய்ய முடியும்? புலி ஆதரவாளர்கள் ஆவது வன்னியில் இருக்கும் மக்களை காப்பாற்றவாவது போராடுகிறார்கள் ஆனால் புலி எதிர்ப்பாளர்கள்?

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இவற்றை வைத்து புலிகள் அரசுக்கு எதிரான பரப்புரைக்காக மட்டுமே பயனன்படுத்துவது வேதனைக்குரிய விடயம்.

    அவை நடக்காமல் தடுக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவரை நீதியின் முன் கொண்டு வர அழுத்தங்களைக் கொடுக்கவோ புலிகள் முயல்வதாகத் தெரியவில்லை. எம்மோடு இவர்கள் இருந்தால் நாம் பாதுகாப்பாக இருந்திருப்போம் என்று மார்தட்டும் நிகழ்வாகவும் மக்களை தூண்டும் முயற்சியாகவுமே இதைப் பயன்படுத்துகிறார்கள். இது கொடுமை.

    புலிகள் பெண்களை மானபங்கம் எதையும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. புலிகள் பெண்களை வைத்து கொழும்பில் பல காரியங்களை சாதித்தவை பலருக்கு தெரியும். தவிரவும் குழந்தைகளையும் பெண்களையும் ஆயுதம் ஏந்த வைத்து முன்னரங்குகளில் காவல் செய்ய விடுவது மட்டும் வீர தீரமாக கருத முடியாது. இரு பக்கமும் நடப்பது இன அழிப்புதான்.

    புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தால் இது போன்ற சம்பவங்கள் உடனடியாக நிற்கும்.மோதல்களும் தாக்குதல்களும் நிற்கும் வரை இவை தொடரவே செய்யும். இப்போது இவற்றை தடுக்கும் பொறுப்பு புலிகள் கைகளிலேயே தங்கியுளள்ளது.

    புலிகளதும், புலி ஆதரவாளர்களதும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அப்பாவிகள்தான் பாதிக்கப்படுவார்கள். புலித் தலைவர் உண்மையாகவே மக்கள் மேல் கரிசனை உள்ளவராக இருந்தால், ஆயுதங்களை ஒப்படைத்து , மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தால், மீதி இருப்போருக்காவது நல் வாழ்வு கிடைக்கும். இல்லை என்றால் தலைவர், மக்களால் சுயநலம் கொண்ட துரோகியாகவே சரித்திரத்தில் பதியப்படுவார். இன்னல்கள் மேலும் தொடரும்…………

    Reply
  • sus
    sus

    பல்லி புலிக்கு ஒய்வு கொடுத்தால் நீங்கள் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு பெற்று கொடுப்பீர்களா?

    Reply
  • sus
    sus

    நண்பன் அவர்களே புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் எல்லாம் சரி வரும் என எழுதி உள்ளீர்கள்? கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் மீட்கப்பட்ட யாழில் உள்ள மக்களும் கிழக்கில் உள்ள மக்களும் நிம்மதியாக இருக்குறார்களா? உங்கள் பதிலைத் தரவும்.

    Reply
  • palli
    palli

    //பல்லி புலிக்கு ஒய்வு கொடுத்தால் நீங்கள் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு பெற்று கொடுப்பீர்களா?//sus

    கேள்விக்கு நன்றி. கண்டிப்பாக உயிருடனும் உணவுடனும் அனைத்து தமிழரும் வாழ பல்லி தேச மூலம் கடமை செய்யும். ஆனால் புலி விலகினால் லட்ச்சக்கணக்கான பல்லிகள் இதுக்காக பாடுபடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இது சரியாக நடந்து விட்டால் மக்களே அவர்கள் நின்மதியை தெரிவு செய்து கொள்வார்கள். அவர்களுக்கு இப்போது தேவை மூச்சுவிட சிறிது அவகாசம். அது சரி புலி இருந்து மக்களுக்கு என்ன செய்தது என தாங்கள் எழுதலாமே. தெரியாததை தங்களை போன்றோரிடம் இருந்து தெரிந்து கொள்வதில் பல்லி எப்போதும் மகிழ்ச்சியடையும்.

    Reply
  • gobi
    gobi

    புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்கள் நிம்மதியாகவோ வாழ்ந்தவை?? அங்கெல்லாம் பாலும் தேனாறும் தானோ ஓடிக் கொண்டிருந்தது; ஆமிக் கட்டூப்பாட்டுப் பகுதிக்கு வந்த சனங்கள் அந்த பாலாறு தேனாறு பற்றித்தானே கதைக்கிறாங்கள். கதைகேட்டு எழுதத்தான் ஆட்களில்லை

    Reply
  • புளியந்தீவான்
    புளியந்தீவான்

    புலி மட்டுமல்ல புலியாக இருந்தவர்கள் புலிக்கெதிராக இருந்தவர்கள் அரசாங்கம் இப்படி எல்லோருமே இதயசுத்தியுடன் ஆயுதத்தைக் கீழே போட்டால்தான் ஒரு சிறிய விடிவுக்கு வழி பிறக்கும்.

    Reply
  • sus
    sus

    பல்லி ஏன் புலி முற்றாக அழியும் மட்டும் பார்த்துக் கொண்டு இருக்குறீங்கள் இப்ப கூட நீங்கள் நினைத்தால் செய்யலாம் தானே யார் உங்களை யார் தடுத்தது புலம் பெயர் நாட்டில் தானே இருக்குறீங்கள் புலி ஆதாரவாளர்கள் புலியை காப்பாற்ற போராடுகிறார்கள் என சொல்லும் நீங்கள் உட்பட புலி எதிர்ப்பாளர்கள் நாட்டில் உள்ள மக்களுக்காக போராடலாம் தானே யார் தடுத்தார்கள்? குறைந்த பட்சம் வவுனியா அகதி முகாமில் உள்ள மக்களை கூட உங்களால் காப்பாற்ற முடியாமல் உள்ளது என்பதே உண்மை.

    Reply
  • BC
    BC

    //புளியந்தீவான் – புலி மட்டுமல்ல புலியாக இருந்தவர்கள் புலிக்கெதிராக இருந்தவர்கள் அரசாங்கம் இப்படி எல்லோருமே இதயசுத்தியுடன் ஆயுதத்தைக் கீழே போட்டால்தான்….//

    ஒரு அரசாங்கம் எப்படி ஆயுதத்தை கீழே போட முடியும்?அதன் பின்பு முழு இலங்கையையும் புலிகளின் கையில் ஒப்படைக்கும் திட்டமோ! புலிகள் ஆயுதத்தைக் கீழே போடுவது அவசியம்.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    darling people,i cant begin to tell you how deeply touched and laugh and moved i was by srilankan high commisoner in london quite magnificent defend speech and panicked after who are you judged question put on him on the channel 4. it all went wonderfully well. particularly that marvellous bit when he was we….we….

    Reply
  • murugan
    murugan

    அன்புள்ள சஸ் ,தேசத்தில் ரெலோ அழிப்பு பற்றி வந்துள்ள ஆக்கத்தைப் படித்து பார்க்கவும்!

    இராணுவம் புலியிடம் பிச்சை வாங்க வேண்டும்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ‘சனல் – 4′ நேரடியாக பக்கச் சார்பில்லாமல் இந்த ஒளிப்பதிவை மேற்கொண்டதாகச் சொல்வதை நம்ப முடியவில்லை. இதை அகதி முகாமில் பணியாற்றும் தொண்டர் அமைப்பைச் சார்ந்த புலியாதரவாளர் ஒருவரே பணத்திற்காக இந்த ஒளிப்பதிவை உருவாக்கி ‘சனல் – 4′க்கு விற்றுமிருக்கலாம். இலங்கை இராணுவத்தினர் ஏதோ உத்தமர்கள் என்று நான் கூறவரவில்லை. ஆனால் இப்படியான ஒளிப்பதிவுகளை உருவாக்குவதில் புலிகள் வல்லவர்கள். ஏற்கனவே தமிழ்ப் பெண்களின் மார்பகங்களை இராணுவத்தினர் அறுத்தெறிவது போல் காட்சிகளை கிராபிக் மூலம் உருவாக்கி தமிழ்நாட்டில் உலா விட்டவர்களுக்கு இப்படியான ஒளிப்பதிவுகளை மேற்கொள்வதில் எதுவித சிரமமுமில்லை. இதுபற்றிய உண்மைகளை முகாமிலுள்ள மக்களிடமிருந்து தான் பெற முடியும். அந்த உண்மைகளின் அடிப்படையில் செய்திகள் உண்மையா அல்லது புரளியா என்பது வெளிவராமலா போய்விடும்.

    Reply
  • Rohan
    Rohan

    யார் சொன்னால் நம்புவீர்கள் பார்த்திபன்?

    //இதுபற்றிய உண்மைகளை முகாமிலுள்ள மக்களிடமிருந்து தான் பெற முடியும்.//
    அந்த நேரம் இந்த விடயம் உண்மை தான் என்று கண்டால் என்ன பரிகாரம் நீங்கள் செய்வீர்கள்? பாதிக்கப் பட்ட மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்…………

    Reply
  • mukilvannan
    mukilvannan

    murugan you may remember that telo boby who killed telo thas in 1985 at that time telo leader saba was silence about the incident.

    Reply
  • BC
    BC

    பார்த்திபன் சொன்னது போல் இப்படியான ஒளிப்பதிவுகளை உருவாக்குவதில் புலிகள் வல்லவர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பாதிக்கப் பட்ட மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் – Rohan //

    நிச்சயமாக விடயம் உண்மையென்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசை நிர்ப்பந்திப்போம்.மேன்மேலும் இப்படியான அநீதிகள் நடக்காதென்பதற்குகு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்பதையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இளப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுப்போம்.

    சம்பவம் புரளி என்றால் தாங்கள் என்ன செய்வீர்களென்பதையும் விளக்குவீர்களா?? ஏற்கனவே புலிகளால் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் விநியோகிக்கபப்பட்ட சீடிக்களில் இருந்த இராணுவம் தமிழ்ப்பெண்களின் மார்பகங்களை அறுப்பது போன்ற காட்சிகள் எங்கு நடைபெற்றதென்பதையும் தாங்கள் விளக்குவீர்களென நம்புகின்றேன்.

    Rohan க்கு இன்னொரு உதாரணமும் சொலல விரும்புகின்றேன். கிட்டத்தட்ட 2 வருடங்களின் முன்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ஒரு பாடசாலை மாணவியை இராணுவம் கதறக் கதற தோட்டமொன்றிற்குள் இழுத்துச் சென்றதாகவும் அதை அந்த மாணவியுடன் கூட வந்த மாணவியே நேரில் பார்த்ததாகவும் தமிழ்நெற் உட்பட புலிகளின் ஊடகங்கள் யாவும் அசுர வேகத்தில் செய்திகளைப் பரப்பினார்கள். இந்த மாணவியை எங்கே எனக் கேட்டு திருநெல்வேலி மக்கள் அனைவரும் இராணுவ முகாமின் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடாத்தியதாகவும் செய்தி வெளியிட்டனர். இவ்விடயம் நடந்த 3ஆம் நாள் சம்பந்தப்பட்ட மாணவி தனது காதலனுடன் பொலிசாரிடம் வந்து சரணடைந்தார். காதலனுடன் ஓடிய மாணவியை இராணுவம் கடத்தியதாகவும் அதை இன்னொரு மாணவி பார்த்ததாகவும் கதைகட்டி திருநெல்வேலி மக்களையே முட்டாளாக்கிய புலிகள் பின்பு இதுபற்றி வாயே திறக்கவில்லை. இப்படியான சம்பவங்களின் பின் தான் யாழ் மக்களுக்கு புலிகளின் மீது நம்பகத்தன்மை குறையத் தொடங்கியது.

    Reply
  • Kanna
    Kanna

    Dear Palli i aproved your comment & concern – I request to you to write a true hidden histry in the thamil nationalisum. thanks

    Reply
  • ஜீவகன்
    ஜீவகன்

    புலிகளின் வெற்றி தோல்விக்கு புலிகள்தான் பொறுப்பு எடுக்கவேணும் சரி மக்களுக்கு நிகழ்கின்ற இதுபோன்ற அட்டூழியங்களுக்கும் புலிகள்தான் பொறுப்பு என்றமாதிரியான விமர்சனங்கள் உங்கள் இனத்துக்கு நீங்கள் வழங்குகிற விசமன்றி வேறென்ன?. அவ்வாறு தான் எனில் ஏன் புலி வேறு மக்கள் வேறு என்று அரசாங்கமும் நீங்களும் பிரச்சாரம் செய்தீர்கள்? புலியும் தான் ஆள் சேர்த்தது, line க்கு அப்பாவிகளை அனுப்பியது, வயோதிபருக்கு பயிற்சி அளித்தது எல்லாம் தவறு அனால் அது இதை நியாயம் செய்ய உதவாது. கணவனை மனைவியை பெற்ற பிள்ளையை பிரித்து தனித்தனியாக முகாமிட்டிருக்கும் செயல் என்பது உங்களுக்கு வரலாற்றில் எதையும் நினைவுபடுத்தவில்லையா? நீங்கள்தாம் எதையும் நினைவிழக்காதவர்கள் ஆயிற்றே! நீங்கள் புலிக்காழ்ப்பில் சாதாரண மக்களையும் வெறுக்கிறீர்கள் அதுதான் எதையும் புலிவரி பூசிப் பார்க்கும் உங்கள் பார்வை வெளிப்படுத்துகிறது. உண்மையில் புலிகள் நதிமூலம் ரிஷிமூலம் தேடினார்கள் என்று குற்றஞ் சுமத்தும் நீங்களும் தானே இந்த ஆவணங்களின் நேர்மையை சந்தேகிக்கிறீர்கள்?. உங்களுக்கும் புலிமீது புறணி பாடுவது வசதியாய் இருக்கிறது அதை ஏன் நியாயங்கேட்டு கெடுத்துக் கொள்கிறீர்கள்?.

    Reply
  • palli
    palli

    சுஸ் தேசத்தை சில காலமாகதான் படிப்பதும் பரபரப்பின் தீவீர ரசிகன் என்பதும் தங்களது முன்னோட்டத்தில் தெரிகிறது. இருப்பினும் எழுத்து சுகந்திரத்துக்கு தேசமே முன்னோடியாக விளங்குவதாலும். அதில் பல்லியும் ஒரு நபர் என்பதாலும் தாங்கள் எப்படியான குண்டக்க மண்டக்கா
    கேள்வியை கேட்டாலும் பல்லி பக்குவமாய் பதில் சொல்லிதான் ஆக வேண்டும். ஆகவே இப்போது நீங்கள் என்ன செகிறீர்கள் என்பது உங்கள் கெள்வி.
    உங்களை இந்த கேள்வி கேக்க வைத்ததே தேசத்தின் செயல்பாடு தானே. 30 வருடமாக உங்கள் தலைவன் தொலைத்ததை எம்மால் அவ்வளவு சீக்கிரம் சரிசெய்து விட முடியாது. இருப்பினும் எம்மால் முடிந்தவரை தேசத்தின் உதவியுடன் எதோ செய்து கொண்டுதான் உள்ளோம். ஆனாலும் புலி இருந்து அரசு வரை யார் தவறுவிட்டாலும் (கவனிக்க பார்த்திபன் பின்னோட்டம்) தேசம் அனுமதிக்கும் வரை எவரது முகத்தையும் சமூகத்துக்கு காட்ட பின் வாங்கோம் என்பதை மட்டும் தங்களுக்கு பல்லியாய் உறுதி தருகிறேன். தொடர்ந்தும் வாசியுங்கள் தேசத்தை குழப்புங்கள் எம்மை அப்போதுதான் வன்னி விடியும்.

    Reply
  • PUYAL
    PUYAL

    பெண்களுக்கு ஒன்றென்றால் அதற்கெதிராகக் குரல் கொடுக்க நம்மைப் போல் யாருளர்? அதே போல் பெண்ணிடமே சீதனம் கேட்டு அந்தச் சீதனப்பணத்திலேயே சுகபோகம் அனுபவிக்கும் ஒரே ஆண்வர்க்கமும் தமிழன்தான். என்ன ஒரு விசித்திரமான இனமப்பா நாங்கள்?

    Reply
  • tax
    tax

    வவுனியாவில் முகாமில்நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் ஈபிடிபிக்கு சம்பந்தமுள்ளது.வெளிநாட்டு மனித உரிமைகணிகாணிப்பு குழு ஆதரபூர்வமான தரவுகள் வைத்திருப்பதாக ராசதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    Reply
  • sus
    sus

    பார்த்திபன் நான் இச் செய்திக்கு முதல் எழுதிய பதிவிலேயே சொல்லி இருந்தேன் அதே போல channel4 புலியாக்கியாச்சு இன்னும் கொஞ்ச நாள் செல்ல bbc,sky யையும் ஜநா போன்றவற்றையும் புலி ஆக்கலாம் சரியா? அரசோடு சேர்ந்து தானே இருக்குறீங்கள் அங்க கேட்டுப் பார்க்குறது தானே.உங்களுக்கு வெட்கமாய் இல்லை புலியை எதிர்த்தால் பரவாயில்லை அப்பாவி மக்களின் வாழ்க்கை பாழ்படுது அப்படி இருந்தும் அரசுக்கு சார்பாக கதைக்க நீங்கள் எல்லாம் தமிழன் என சொல்லவே வெட்கப் பட வேண்டும்.

    Reply
  • sus
    sus

    பல்லி அப்ப எப்ப தொடங்குவீங்கள் சொல்லுங்கள் முழுத் தமிழினமும் அழிந்த பிறகா? நான் கேட்ட கேள்விக்கு கூட உங்களால் பதில் தர முடியாமல் உள்ளது பிறகு செயற்பாடு எங்கு உள்ளது.பார்த்திபனின் பின்னோட்டத்தில் என்ன உள்ளது அவரது பின்னோட்டத்தை படிக்க? புலியை விடுங்கள் உங்களை பொறுத்த வரை அவர்களை விமர்சிக்க இயலாது ஆனால் எப்பவாவது அரசை விமர்சித்து உள்ளீர்களா? புலி சில பிழைகள் விட்டாலும் மக்கள் அவர்களை ஆதரிப்பதற்கு அவர்களின் செயற்பாடு தான் காரணம் ஆனால் புலி எதிர்ப்பாளரை மக்கள் ஆதரிக்காமைக்கும் அதே அவர்களின் செயற்பாடுயின்மை தான் காரணம் அதாவது புலியை விமர்சித்தே காலத்தை ஓட்டுவதை தவிர வேறு ஒண்டும் மக்களுக்காக செய்தது இல்லை.

    Reply
  • thamba
    thamba

    சஸ் வன்னியில் தலைவரை விட்டுவிட்டு தமத உயிரைக்காப்பாற்ற ஓடிவந்தவர்கள் துரோகிகள் அல்லவா அவர்களுக்கு என்ன மாதிரியான கற்ப்பழிப்புக்கள் நடந்தாலென்ன? ஏன் நீங்கள் நேரத்தை வீணாக்குகின்றீர்கள் – நீங்களள் தவைலரை என்றாலும் பாதகாத்திட பாராளுமன்றங்களக்கு முன்னால் கூட்டம் போடுங்கோ.

    Reply
  • thamba
    thamba

    சஸ் புலிகளின் தலைவர் சுப இருந்த ஏரியாவில புலிகள் பலவந்தமாக ஆள் சேர்த்த பெண்களுக்கு நடந்த விடயங்கள் பக்கத்தில கட்டுரையாக இரக்கு-கிளிநொச்சி வீடுகளுக்குள்ளொ இருக்கும் சடலங்கள் இந்தப் தமிழ்ப் பெண்களின் மானத்தை வாங்கியது புலிகளே – அரசும் இதை தொடர்ந்து செய்ததாலே போராட ஆரமட்பித்தோம் தலைவர் மனம் வந்து கடித்தால் பல பிரச்சினைகள் தீரும்.

    Reply
  • thevi
    thevi

    இன்னும் கொஞ்ச நாள் செல்ல பிபிசி ஸ்கை யையும் ஜநா போன்றவற்றையும் புலி ஆக்கலாம் சரியா?/sus

    பிபிசி பொய் சொன்னதில்லையா? ஈராக்கில் சதாம் அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என சண்டையை தொடக்கி விடவில்லையா? பிபிசியே இந்த நிலை என்றால் சனல்-4 கதி என்ன?

    Reply
  • thevi
    thevi

    புலிகளின் வெற்றி தோல்விக்கு புலிகள்தான் பொறுப்பு எடுக்கவேணும் என்பது பிழயைhன கருத்து .புலிகள் மக்களை தமது ஆயுதங்களைக் காட்டி தோற்கடித்து இன்று இந்த நிலைக்குள் விட்டிருக்கிறார்கள். மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் புலி அரசியலில் இருந்து விலக்கப்பட் வேண்டும். அதை அரசு செய்தால் என்ன ஏகாதிபத்தியங்கள் செய்தால் என்ன மக்களுக்கு சாதகமானதுதான்.

    Reply
  • london boy
    london boy

    http://www.defence.lk/new.asp?fname=20090506_Album1

    http://www.defence.lk/new.asp?fname=20090506_Album2

    தடுப்பு முகாம் கொடுமையை அலசும் அன்பு நெஞ்சங்களே இந்த படங்களில் உள்ள கெபடுமைகளையும் சேர்த்து அனலைஸ் பண்ணுங்கோ.

    அல்பம் 2 இல் பிபிசி ஆனந்தி சூரியப்பிரகாசம் பிரபா குடும்பத்துடன் இருந்து சந்தோசமாக சாப்பிடுகிறா பாருங்கள். இவர்தான் தலைவரின் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு வந்து படிக்க மிகவும் உதவி புரிந்தவ. புலிக்கு சார்பாக இவ்வளவு காலமும் கதைத்துக் கொண்டு திரிந்த இவர் தற்போதய நிலை புலிகளின் அரசியல் வறுயையால் ஏற்பட்ட நிலை இதுஎன கதைக்கின்றா. இவர்களை (புலிகளை) நாம் பெரிசாக நம்பியிருந்திட்டோம் என அங்கலாய்க்கிறா. பிரபாவுடன் சேர்ந்து தடல்புடல் விருந்துண்ணும் போது அதற்கு வெளியே பொதுமக்கள் எவ்வாறு உணவருந்துகிறார்கள் என்று இவரால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதிருந்ததா? இவர் ஒரு பிபிசியின் அரசியல் ஆய்வாளர்??

    Reply
  • thevi
    thevi

    ஆனந்தி எந்தப்படத்தில் இருக்கிறார்? தலைவருக்கு கோர்ஸ் என இருக்கிறது என்ன படிப்பு அது? ஸ்விம்மிங் தொட்டி லண்டன் ஆர்கோஸில் வாங்கப்பட்டது போல உள்ளது. துவக்கோடு நிற்கும் சின்னக் குழந்தையை பார்க்க தூக்கி கொண்டு ஓடிவரவேண்டும் போலுள்ளது. படங்களில் உள்ள பெண்பிள்ளைகளை பார்த்தால்… அவர்களுக்கு வாழ்கையில் எத்தனை சந்தர்ப்பங்கள் காத்துக்கிடந்தன— படிப்பு ,குடும்பம், உறவுகள் என. அவர்களும் பிரபாகரன் அளவிற்கு இல்லையென்றாலும் இந்த உலகத்தில் குதூகலித்து வாழ்ந்திருப்பார்களே!

    Reply
  • london boy
    london boy

    என்ஜிஓக்காரன் கோழிக்கால் கடிக்கிற படத்துக்கும் தலைவற்ரை பிள்ளையின் பட்டமள்ப்பு குடும்ப படத்துக்கும் இடையில் உள்ள படத்தில்(அல்பம் 2 இல்) மேசையில் இருந்து சாப்பிடும் படத்தில் கறுப்பு நிற சட்டையும் வெண்மையான சேலையும் அணிந்திருப்பவர் பிபிசி ஆனந்தி சூரியப்பிரகாசமாவார்.

    தலைவருக்கு கோர்ஸ் என்பது சாப்பாடுதான் என்று பொருள்படும் என நான் நினைக்கிறேன். இல்லையேல் டிபென்சிடம்தான் நாம் சநதேகத்தை கிளியர் பண்ண வேணும். ஸ்விம்மிங் தொட்டி பார்க்கையில் உங்களைப் போலத்தான் நானும் நினைத்தேன்.

    Reply
  • thevi
    thevi

    புலி உறுப்பினர்களின் சமையலைப் பார்த்தால் தலை வெடிக்கிறது. மதிவதனி இரண்டு பிள்ளைகளுடன் புல்மேடு ஒன்றில் இருக்கின்றா. அவரின் ஆடைகளையும் பின்னணியையும் பார்த்தால் அது வெளிநாடு போல இருக்கிறதே!

    பிபிசி அரசியல்ஆய்வாளரின் புலியோடு நெருங்கிய உறவு பலவற்றை சொல்லாமல் சொல்லுகின்றது!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகளோடு வாழ்வதாகயிருந்தால் வயிறும் போகும் உயிரும் போகும். அரசு கட்டுப்பாட்டுக்கு வந்தால் சிலகுறையும் நிறையும் இருந்தே தீரும். இதில் வியப்பதற்கு எதுவுமே இல்லை. மனிதன் வாழ ஆசைப்படுகிறன் என்பதே இதில்லிருக்கிற உண்மை. தமிழனின் பெருமை” “கடைசிச்சொட்டு இரத்தம்” என்பது போன்ற கபடவார்த்தைகளில் சதாரணமக்களுக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. விசுவாசித்ததும்மில்லை.
    தானும் வாழவேண்டும் மற்றவனும் வாழவேண்டும் மற்றவன் வாழ்ந்தால் தான் தான் வாழமுடியும் என்ற உயர்ந்த கோட்பாட்டைக்கொன்றே மனித நேயம் வளர்ந்து வருகிறது. இதை விளங்கிக் கொள்ளாதது புலிகள். விளங்கிக் கொண்டது பேரினவாத அரசு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // மதிவதனி இரண்டு பிள்ளைகளுடன் புல்மேடு ஒன்றில் இருக்கின்றா. அவரின் ஆடைகளையும் பின்னணியையும் பார்த்தால் அது வெளிநாடு போல இருக்கிறதே!- thevi //

    ஆம் நீங்கள் குறிப்பிடுவது மிகவும் சரியானதே. அநேகமாக இந்நாடு நோர்வேயாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் ஐரோப்பிய நாடு ஒன்று தான் காரணம் பின்னணியில் காணப்படும் அந்த மரங்களும் தெருக்களும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன் நான் இச் செய்திக்கு முதல் எழுதிய பதிவிலேயே சொல்லி இருந்தேன் அதே போல channel4 புலியாக்கியாச்சு – sus //

    இங்கே எவரும் channel4 ஐ புலியாக்கவில்லை. குறிப்பிட்ட அந்த ஒளிப்பதிவை தயாரித்தது புலிகள் தான் என்பதையே சொன்னோம். உங்களைப் போன்றவர்கள் புலிகளை விமர்சிப்பவர்களை உடனே அரசு ஆதரவாளர்கள் என்று பட்டம் கட்டி விடுவீர்கள். உண்மைகளை எழுதினால் உங்களால் தாங்க முடிவதில்லை. பிபிசி, சிஎன்என் போன்ற ஊடகங்களை உங்களைப் போன்றவர்கள் தான் புலிகளுக்கெதிராகச் செயற்படுவதாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினீர்கள். ஆனால் அப்படி ஒரு செயற்பாட்டை புலிகளை விமர்சிப்பவர்கள் எவரு்ம் செய்ததில்லை. மேலே புலிகள் கிளப்பிய சில புரளிகளைக் கூட நினைவூட்டியிருந்தேன். அதற்கு உங்களின் பதில் என்ன?? ஒரு மாணவி இராணுவத்தால் கடத்தப்படாத போதே, அம்மாணவி இராணுவத்தால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக கதை கட்டிவிட்டவர்கள். இதனால் அந்த மாணவியின் எதிர் காலம் என்னாகும் என்று கொஞ்சமாவது சிந்தித்தார்களா?? பின் விளைவுகள் பற்றி சிந்திப்பதற்கு உங்களைப் போன்றோருக்கோ அல்லது புலிகளுக்கோ எப்போதும் முடிவதில்லைத் தான்.

    Reply
  • sus
    sus

    பார்த்திபன் முதலில் தமிழ்நெற்றில் இவ் மாணவி பற்றி செய்தி வந்ததாக ஞாபகம் இல்லை தயவு செய்து அதன் இனைப்பை இனைத்து விடுங்கள் அல்லது அந்த செய்தி வந்த சரியான திகதியை தரவும். அடுத்தது அந்த செய்தி உண்மையாயின் அதாவது தமிழ்நெற் உண்மையாக பிழையான செய்தியை இனைத்ததாயின் பிழை வந்து ஓடிப் போன அந்த மாணவியிலும் அவரது நண்பியிலுமே உள்ளது. என்னவென்று தெரியும் உங்களுக்கு புலிகள் தான் கதை கட்டினார்கள் என சில வேளை அப் பெண்ணின் நண்பி கூட இவ்வாறு கதை கட்டி விட்டுயிருக்கலாம் ஏன் என்றால் ஓடிப் போன மாணவியை வீட்டை தேட மாட்டார்கள் என்ற தைரியத்தில் அப்படி சொல்லியிருக்கலாம் ஆனால் மக்கள் எல்லாம் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததும் பயத்தில் அப் பெண் திரும்பி வந்திருக்கலாம். ஆனால் உண்மை, பொய் தெரியாமல் செய்தி தமிழ்நெற் வெளியிட்டு இருந்தால் அது உண்மையிலேயே பிழை தான். அடுத்ததாக பார்த்தால் நீங்கள் எழுதியிருந்தீர்கள் அவ் மாணவி காதலனுடன் ஓடி இருந்தார் என அந்த…………………………….. வேண்டிக் கிடக்குது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // பார்த்திபன் முதலில் தமிழ்நெற்றில் இவ் மாணவி பற்றி செய்தி வந்ததாக ஞாபகம் இல்லை தயவு செய்து அதன் இனைப்பை இனைத்து விடுங்கள் அல்லது அந்த செய்தி வந்த சரியான திகதியை தரவும்.- sus //

    குறிப்பிட்ட சம்பவம் நடந்த 2 வருடங்களுக்கு மேல் இது தமிழ் நெற் உட்பட பல புலிகளின் ஊடகங்களில் வந்தததையும் நான் கூடப் பார்த்தேன். இதுபற்றி அப்போது யாழ் இணையத்தில் ஒரு விவாதமே நடைபெற்றது. நடந்த சம்பவத்திற்கு ஆதாரமாக தமிழ்நெற் உட்பட பல புலி ஊடகங்களின் இணைப்பை அப்போது யாழ் இணையத்தில் இணைத்திருந்தார்கள். இதுபற்றிய ஏதாவது இணைப்பை திரும்பவும் பெற முடிந்தால் நிச்சயம் இங்கு இணைக்கின்றேன். இப்படிப் புரளியைக் கிளப்பியதில் தவறு சம்பந்தப்பட்ட மாணவியினதும் அவரது தோழியில் தான் என்கின்றீர்கள். ஆனால் சம்பந்தப்பட்ட மாணவி கற்பழிக்கப்பட்டாரா இல்லையோ என்பதை அறியாமல் இவர்கள் எப்படி அவர் கற்பழிக்கப்பட்டதாகச் செய்தி போடுவார்கள். சரி இப்படிப் புரளியைக் கிளப்பியவர்கள் அந்த மாணவி காதலனுடன் திரும்பி வந்த செய்தியை ஏன் போடவில்லை?? ஒரு பெண்ணிற்கு இதனால் என்ன விபரீதம் ஏற்படுமென்பதை உணர முடியாதவர்களா இவர்கள்?? நீங்கள் கூட புலிகளின் தவறுகளை மறைக்க இப்படியெல்லாம் வக்காலத்து வாங்குறீர்கள். தவறுகளை புலிகள் செய்தால் தவறுகள் இல்லை, அதை மற்றவர்கள் செய்தால்த் தான் தவறு என்பது தான் தங்களின் கொள்கையா??

    சில மாதங்களுக்கு முன் இதே தமிழ்நெற்றில் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறுமியை இராணுவம் கற்பழித்ததாகவும் அதுபற்றிய புகாரை பொலிசாரிடம் தெரிவித்த அந்தச் சிறுமியின் தாயாரையும் இராணுவம் கொலைசெய்து அவர்களின் வீட்டுக் கிணற்றினுள்ளேயே போட்டதாக செய்தி போட்டது தமிழ்நெற். அதே தமிழ்நெற் பின் சிலநாள் கழித்து இராணுவ அடையாள அணிவகுப்பில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அச்சிறுமியின் தாயார் அடையாளம் காட்டியதாகச் செய்தி போட்டது. தெரியாமல் தான் கேட்கின்றேன் கொலைசெய்யப்பட்ட தாயார் பின்பு எப்படி வந்து அடையாளம் காட்டுவார்?? இதையும் நீங்கள் பார்க்கவில்லையென்று கூறப் போகின்றீர்களா?? இப்படி முன்னுக்கு பின் முரணாக தமிழ்நெற் செய்தி போடுவதால் உண்மையில் நடைபெற்ற அநியாயங்கள் கூட, கேள்விக்குறியாகின்றன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா??

    Reply
  • sus
    sus

    பார்த்திபன் புலி என்டாலும் சரி யார் என்டாலும் சரி பிழை என்டால் பிழை என்பது என் கருத்து ஆனால் நான் கேட்பது என்னவென்டால் உங்களுக்கு எப்படித் தெரியும் புலி தான் கதை பரப்பினது என்று அதை தான் நான் கேட்கிறேன். மாணவியின் நண்பி வந்து ஆமி அவ் மாணவியை கடத்திக் கொண்டு போய் விட்டதாக சொன்னதும் மக்கள் எல்லாம் கூடி முகாமிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம் அதை தமிழ்நெற் செய்தியாக போட்டு இருக்கலாம் இதில புலி எங்கே வந்தது? நான் முதலே எழுதினேன் ஆதாரமற்ற செய்தியை தமிழ்நெற் இனைத்திருந்தால் அது பிழை தான்.

    அடுத்தது கிழக்கு மாகணத்தில் நடந்தது இரானுவ அணிவகுப்பில் அந்த நபரை அடையாளம் காட்டிய பின்பு வீட்டில் இருக்கும் போதே அவரை கொலை செய்து கிணற்றில் போட்டார்கள் அடையாளம் காட்ட முன்பு இல்லை.புலி எதாவது அரசியல் ரீதியாக அல்லது இரானுவ ரீதியாக பிழை செய்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் அதை விட்டு விட்டு புலியை எதிர்க்க வேண்டும் என எதிர்க்காதீர்கள் அதை விட இலங்கை அரசுக்கும் ஆமிக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    sus குறிப்பிட்ட அந்த மாணவியின் செய்தியை தமிழ்நெற் உட்பட புலிகளின் செய்தி ஊடகங்களே வெளியிட்டிருந்தன. இதிலிருந்தே தங்களுக்கு புரியவில்லையா யார் இந்தச் செய்தியைப் பரப்பியது என்று??

    அதுபோல் பொய்யை உண்மையாக்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் சிறுமியின் தாயார் அடையாள அணிவகுப்பு நடந்த பின்பே கொலைசெய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டதாக வாய் கூசாமல் தமிழ்நெற்றை நியாயப்படுத்த பொய் பேசுகின்றீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா தமிழ்நெற்றின் தவறை பல வாசகர்கள் சுடடிக் காட்டிய பின், தமிழ்நெற்றே தாயார் கொலைசெய்யப்பட்ட செய்தி தவறானது தான் என ஒத்துக்கொண்டது. நான் சொல்வதை நம்பாவிட்டால் தமிழ்நெற்றையே தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்கள். ஆனால் நீங்கள் பொய்களை நியாயப்படுத்த பொய்களுக்கு மேல் பொய்கள் சொல்லுகின்றீர்கள். இதற்கு மேல் உங்களுடன் விவாதம் செய்வது வீண் நேர விரயம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //sus on May 6, 2009 9:55 am நண்பன் அவர்களே புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் எல்லாம் சரி வரும் என எழுதி உள்ளீர்கள்? கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் மீட்கப்பட்ட யாழில் உள்ள மக்களும் கிழக்கில் உள்ள மக்களும் நிம்மதியாக இருக்குறார்களா? உங்கள் பதிலைத் தரவும்.//

    தலையிடிக்கு மருந்து தடவினால் அது நிரந்தரமாக தீராது. அது உள்ளே உள்ள பிரச்சனை ஒன்றால் வருகிறதென்றால் அதற்கு தகுந்த மருந்து கொடுக்க வேண்டும். அதுவரை அந்த வலி தற்காலிகமாக தீரும். சரியான மருந்து வயித்துக்கு கொடுக்க வேண்டும்.

    யாழிலும் கிழக்கிலும், ஏன் தென் பகுதியிலும் கூட புலிகளின் வேர்கள் இன்னும் இருக்கின்றன. (புலத்திலும்………….?) இவை இல்லாமல் போக புலிகள் ஒன்று சமாதானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புலிகளின் தலைமை அழிய வேண்டும். முதலாவது கை நழுவி விட்டது. இரண்டாவதற்கு இன்னும் சிறிது காலமே உண்டு. அதன் பின் இவை அனைத்தும் பெரும் மாற்றத்துக்கு உண்டாகும். புலிகளின் தலைமைகள் இருக்கும் வரை நாட்டில் சமாதானம் என்பது நடைமுறை சாத்தியமே இல்லை.

    அவை விரைவில் உங்களுக்கே புரியும் SUS.

    Reply
  • மாயா
    மாயா

    Sri Lanka arrests three British journalists

    Police in Sri Lanka say they’ve arrested three British television journalists on charges of tarnishing the image of the Sri Lankan security forces.
    Police spokesman, Ranjith Gunasekara told the BBC the journalists were detained in the eastern city of Trincomalee.

    They had been reporting on the Sri Lankan government’s battle against Tamil Tiger rebels, for the London-based Channel-4 news.

    One of those detained Nick Paton Walsh said he believed the arrests were connected to a recent report about the conditions of war refugees and allegations of sexual abuse in camps for those who had fled the fighting.

    ITN confirms

    ITN, which produces Channel 4 News confirms that a Channel 4 News reporting team has been told to leave Sri Lanka after reporting allegations of abuse and ill-treatment of Tamils held in internment camps.

    Channel 4 News Asia Correspondent Nick Paton-Walsh, cameraman and producer, have been ordered to leave the country by the Sri Lankan Defence Minister.

    Their original report, broadcast on Channel 4 News on 5th May, contained the first independently filmed video from one of the internment camps in the city of Vavuniya in the north of Sri Lanka.

    The report contained claims that dead bodies were left where they fell, shortages of food and water, and sexual abuse. The Sri Lankan government denied these allegations.

    “We will be seeking an explanation from the Sri Lankan government for this decision.” a spokesperson for ITN said:

    Reply