வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டுள்ளனர்
பார்த்திபன்
சுனாமி உதவி சுருட்டி முடிச்சாச்சு. கண்ணீர்த் துளிகள் என்று சுருட்டியதை அவரவர் பைகளில் நிரப்பியாச்சு. வணங்காமண் சுருட்டல் அலையலையாய் இன்னும் சுருட்டுகினம். இந்த வரிசையில் இன்னுமொரு சுருட்டலுக்கு முத்தாய்ப்பு. இனி இதற்கு என்ன பெயர் வைச்சு சுருட்டுவினம். புலிகள் என்றோ புலியாதரவாளர் என்றோ வாறவனுக்கு நான் செருப்படி கொடுத்தனுப்ப முடிவெடுத்தாச்சு.
Enaas
அங்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 3,328 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை காரியாலயம் தெரிவித்தது.
புதுமாத்தளனில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் உணவு அனுப்பப்படுவ தில்லையெனவும், இதனால் அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் அசேட் அஸ்ரத், புதுமாத்தளனுக்கு சீராக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். அரசாங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதுவித தடங்கலும் செய்யவில்லை.
BC
சுருட்டுவதற்க்கு திட்டம் அடுத்த தயார்.
சங்கு
புலிகளே நீங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களப் பற்றி அவர்களின் தேவைகள் பற்றி மட்டும் கதைப்பீங்கள். அறிக்கை மேல் அறிக்கை விடுவீங்கள் தப்பில்லை. அதேநேரம் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்த சனங்கள் சாப்பிட்டதா? உடுத்ததா??மருந்து கிடைத்ததா??? என்பதுகளைப்பற்றி நீங்கள் கவனமெடுத்தது கிடையாது. காரணம் அவர்கள் தலைவரை தனிய விட்டுவிட்டு வந்த தமிழீழத் துரோகிகள் என்று வெளிநாட்டில் பரப்புரைகள் செய்கிறீங்கள். அவர்களைப்பற்றி எந்த அக்கறையும் உங்களுக்கில்லை. ஆனால் இராணுவக் கட்டுப்பாட்டில் நடக்கும் கற்பழிப்பு கொலை கடத்தல் செய்தி எண்டவுடன் மட்டும் மேளத்தை தூக்கிக் கொண்டு வந்து டமாரமடிப்பீங்கள். எங்கட தமிழினம்! எங்கட சகோதரி!! இனப்படுகொலை!!! இந்தப் பிரச்சாரங்களுக்கு மட்டும் அந்தச் சனங்களைப் பாவித்துக் கொள்ளுங்கோ. கறிக்கு கறிபேப்பிலை பாவிக்குமாப்போல. புலிகள் செய்த அநியாயங்கள் எத்தனை வெளிவந்து நாறுது. ஆனால் அவயின்ரை ஊத்தைகளை கதைக்க இது நேரமில்லை எண்டும், சனததின் தேவைகளே முதலாவதாய் பார்கக வேண்டியது எண்டும், செத்த பாம்பை அடிக்குமாப்போல இருக்குமென்றும், பெரிது படுத்தாததை உங்களுக்கு சார்பாக வைத்துக் கொண்டு பார்க்காதேங்கோ. எல்லாம் காலப்போக்கில் புத்துயிர்பெறும். ஒருத்தனும் மறக்கவும் மாட்டான. மன்னிக்கவும் மாட்டான்
நண்பன்
இன்னமும் பணத்திலேயே குறியா புலிகள் இருக்கிறார்கள். இவர்கள் தமிழீழ வியாபாரிகள். காசேதான் கடவுளடா டைப்.
சங்கு சொல்வது அத்தனையும் உண்மை. புலிகள் , கொழும்பில் பெண்களை ஈடுபடுத்தி பல இராணுவ தலமைகளை மடக்கி பல வேலைகளை செய்தார்கள். அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டார்கள். அவை பலருக்கு மறந்தே விட்டன? அப்படி கைதானவர்களது பேச்சே மறந்து போயின. உதவ யாரும் இல்லாமல் போனார்கள். காசைத் தவிர வேறு சிந்தனையே இவர்களிடம் இல்லை.
palli
கேட்டதில் தப்பில்லை ஆனால் லுங்கியை தூக்கி வடிவேலு தொடைக்குமேல் கட்டுவது போல் சண்டியனாக வணங்கா மண். அடங்கா பற்று. படியாத முட்டாள். இறங்காத கொடி. ஓடாத தலை. இப்படி சர்வதேசமே அலறும் அளவுக்கு மிரட்டி கேட்டால் யார்தான் உதவுவார்கள். எதையும் மக்களுக்கு போய் சேர வேண்டும் என நினைத்து அதுக்கான வழியில் முயற்ச்சி செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். இது விடுதலைக்கும் பொருந்தும். அதை விட்டு அமைப்பின் பெயரை ஏலம்விட புண்ணாக்குதனமாய் பேசினாலோ அல்லது செயல் பட்டாலோ அது இப்படிதான் எல்லாமே கடுதாசியில் எழுதுவதுடன் முடிந்து விடும். இப்படியான விடயங்கள் பரபரப்பில் எழுதுவதுக்கு பரபரப்பாக இருக்கலாமே தவிர மக்களுக்கு எந்த பலனும் கிடையாது.
ஒரு சின்ன உதாரனம் மக்களுக்காக புலம் பெயர் மக்கள் போராட்டம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு இருக்கும் போது. வன்னியில் இருந்து நடேசர்(புலி) இரு தொல்லைக்காட்ச்சிகளில் புலம் பெயர் மக்கள் அனைவரும் ரோட்டில் வந்து கும்மியடியுங்கள் என வாந்தி எடுத்தால் இது நாமே எமது கண்ணை குத்துவது போல் இல்லையா?? எமது நோக்கம் புலியை குற்றம் சாட்டுவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் செய்யும் தவறுகளும் அதனால் மக்கள் படும் துன்பங்களையும் சுட்டி காட்டுவதே. இதை செய்வதால் எமக்கு துரோகி பட்டமெனில் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு அதே துரோகதனத்தை தொடர்வோம்.