மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பிரபல நடிகையான ரோஷி சேனநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தீர்மானம் கட்சியின் உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.