பிரித்தானியாவில் 4 ஆவது நாளாக மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டம்

uk-stu.jpg
பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாணவர்கள் 4 வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்ந்துள்ளது. பிரித்தானியா தமிழ் மக்களின் 29 நாள் தொடர் போராட்டத்தாலும், பரமேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் பிரித்தானியா சிறப்பு பிரதிநிதி உட்பட ஜந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீலங்காவிற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இன்று நாடாளுமன்ற சதுக்கதில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவப்பு மஞ்சள் ஆடை அணிந்து தங்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • சங்கு
    சங்கு

    பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு நடைபெறுவதால்தான் அவர்கள் இங்குவந்து உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தை கைவிட்டபோது பிரித்தானிய அரசு தந்த வெளியே சொல்ல முடியாத சில வாக்குறுதிகளின் அடிப்படையில் பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக சில ஊடகங்கள் பீலா விட்டன. ஆனால் பரமேஸ்வரன் தனக்கு வெளியே சொல்லமுடியாத சில நிர்ப்ந்தங்களினாலேயே தான் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக சொன்னார். இப்ப ஊடகங்கள் சொன்னது பீலா தான் என நிரூபிப்பதாகவே இந்த நால்வரின் உண்ணாவிரதமும் உள்ளது. ஏமாறுவதற்கு நிறையப்பேர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கும் பஞ்சமில்லைத் தானே…

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அங்கு பெயிலாவானென்றால் இங்காவது பாஸாகட்டும். பெற்றோரின் விருப்பம் காந்தியம்?

    Reply
  • BC
    BC

    சங்கு, காரணம் தெரிந்து விட்டது. நன்றி.

    Reply
  • palli
    palli

    எல்லோரும் வீட்டை விட்டு ரோட்டுக்கு தறுதலையாக(விடுதலைக்காக) வாருங்கோ என சொல்லும் இனம் தமிழினம் என்பதால் இது கூட சாதனை புத்தகத்தில் எங்காவது ஒரு மூலையில் சின்ன எழுத்துடனும் அறுந்த கொடியுடனும் வரலாம்.

    Reply
  • thurai
    thurai

    ஒரு நாட்டின் எதிர்காலமே இளம் சமுதாயம்தான். அவ்ர்களை வழிநடத்துவது அவர்கள் வாழும் நாட்டின் அரசேயாகும். அரசினை நடத்துபவர்கள் அந்தநாட்டின் அரசியல் தலவர்கள்.

    ஈழத்து இளம் சமுதாயத்தினரிற்கு புலத்தில் வழிகாட்டிகள் யாருமேயில்லை. அவர்களிற்கு தமிழாலயம் கொடுத்த பாடம்.

    1) தமிழர்களின் தலைவர் பிரபாகரன்
    2) தமிழரைக்காப்பது புலிப்படை
    3) தலைவரையும்,புலிப்படையினரையும் விரும்பாதவர்கள் தமிழினத்துரோகிகள். தலைவரின் தண்டனை தலை வெடி
    4) சிங்கள்வர் தமிழரின் எதிரிகள்
    5) வாழும்நாட்டில் அக்கறை கொள்ளவேண்டாம், ஆனால் தலைவரிற்கு ஆபத்தானால் வாழும் நாடுகளில் யாரின் கால்களில் விழுந்தாவ்து காப்பாற்ர வேண்டும்.

    துரை

    Reply