போர் நிறுத்தம் கொண்டுவர அனுசரணைப் பணி செய்யுங்கள்- ரவிசங்கர் குருஜியிடம் புலிகள் கோரிக்கை

sri_sri_ravi_shanka.jpg இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனுசரணைப் பணிபுரியுமாறு இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தா பகருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று குருஜியுடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று இந்தியச் செய்தி ஏஜென்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோதல் பிரதேசத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நடேசன் ரவிசங்கர் குருஜியிடம் தமது தொலைபேசி உரையாடலின் போது எடுத்துரைத்தார்.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவாமிகள் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.அதன்பின் 23 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • மாயா
    மாயா

    முதலில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையட்டும். அதன் பின் போர் நிறுத்தமென்ன, நாடே அமைதிப் பூங்காவாக மாறும். இவர்கள் மேலும் குழந்தைகளை தேடி பயிற்றுவித்து அழிப்பதைவிட இருப்போரின் அழிவோடு இந்தப் போர் முடியட்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகள் இந்தக் கோரிக்கையை ரவிசங்கர் குருஜியிடம் வைப்பதை விட, சந்திராசுவாமியிடம் வைத்தால் பழைய நட்பின் காரணமாக ஏதாவது செய்ய முன் வருவார்.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் இவர் கூட புலியுடன் சில வேட்டையில் சம்பந்தபட்டவர்தான். அதனால்தான் இவரை புலிகள் பளயன வராமல் இருக்க புதிதாய் யாகம் (போர் நிறுத்தம்) செய்யும்படி கோரவில்லை மிரட்டுகிறார்கள். எல்லாமே மர்மதேசம்தான்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பாவம் குருஜி
    சண்டியரோட சண்டியராலதான் மோதலாம்.
    பிரபா vs மகிந்தா
    நல்ல கொம்பினேசன்.
    நடுவர்களா போனவங்க நிலமை தெரிஞ்சா, ஒருத்தரும் அந்தப் பக்கம் தலை வச்சே படுக்க மாட்டாங்க.
    சொல்கயிமே சுவிங்கம் மாதிரி ஆகிட்டார்.
    பால் குடுத்து வளர்த்தாலும் புலி அதன் குணத்தைதான் காட்டும்.
    வேலை வெட்டி இல்லாட்டி 2-3 பூனை எடுத்து வளர்க்க வேண்டியதுதானே?
    அது அப்பத்தைதான் தின்னும்.மாமிசம் தின்னாது.

    Reply
  • மாயா
    மாயா

    முடிந்தால் ஐடீபீ முகாம்களில் நடக்கும் அவலங்களை நிறுத்த பாருங்கள் ரவிசங்கர் அவர்களே…ஏனையவர்களுக்கும்தான்…
    http://www.channel4.com/news/articles/politics/international_politics/grim+scenes+at+sri+lankan+camps+/3126257

    முகாமின் அவலம்

    Reply