(மார்ச் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சாம் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சாம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே யாழ் சென்றிருந்தார். அப்பொது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு உள்ளார். இவர் ரிஎன்ஏ யில் உள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களால் மீள இயக்க வைக்கப்பட்ட லண்டன் ரெலோ அமைப்பாளராக செயற்பட்டு வருகிறார்.)
யாழ்ப்பாணம் போவது என்பது மிகவும் கஸ்டமான விடயம். யாரும் யாழ் போக ரிக்கட் பதிவு செய்திருந்தாலும் அரச அதிகாரிகள் அல்லது வேறு முக்கியமானவர்கள் யாழ்போக வேண்டின் உங்களது ரிக்கட் ரத்து செய்து திரும்ப பதிவு செய்யப்படும்.
கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து விமான சேவையினர் பொறுப்பு எடுத்து இரத்மலானை விமான நிலையத்திற்கு எடுத்துப்போய் அங்கிருந்து இராணுவம் உங்கள் பொதிகள் முழுவதையும் பொறுப்பு எடுத்து அந்த பொருட்களை திரும்ப கட்டுவன் சந்தியில் உங்களிடம் ஒப்படைக்கும். விமானம் பறக்கும் போது மொபைல்போன் கமரா போன்றவைகள் எம்மோடு வைத்திருக்க முடியாது.
பயணிகள் பலாலி விமான ஓடுபாதையிலிருந்து இராணுவத்தின் பஸ் முலம் கட்டுவன் சந்தி வரையில் அழைத்து வரப்படுவார்கள். இந்த வேளையில் பஸ்சின் யன்னல்கள் யாரும் வெளியே அவதானிக்க முடியாதபடி திரையிடப்படும். இராணுவ கட்டிடங்கள் இடங்கள் போன்றவைகள் உங்கள் பார்வையிலிருந்து விலக்கியே இருக்கும்படியான ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும். கட்டுவனில் பொலீசார் உங்களை பொறுப்பு எடுக்கும் போது விசாரிப்பர். இராணுவத்தினர் படமும் எடுப்பார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து திரும்ப கொழும்பு வரும் போது இடிந்து விழும் நிலையிலிருக்கும் யாழ் ரயில்வே நிலையம் அருகே அதிகாலையிலிருந்து காவல் நின்று மாலை 4 மணியளவில் பலாலியில் விமானம் ஏறலாம். இந்த யாழ் ரயில்வே நிலையம் அருகே ஈபிடிபியினரால் வழங்கப்படும் தண்ணீர்த் தாங்கி உள்ளது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் எல்லாம் இயங்குகின்றது. ஈபிடிபியினரின் அலுவலகங்களை யாழ்பாணத்தில் பரவலாக எங்குமே இராணுவ முகாம்களுக்கு அண்மையில் காணமுடியும்.
நாம் எல்லோரும் லண்டனில் கேட்கும் ரேடியோக்கள் தொலைக் காட்சிகளில் வெளிவரும் மிகப் பெரும்பாலான செய்திகளுமே பொய்யானவை என்பதை அங்கு நேரில் சென்று பார்த்தால் புரியும். இதில் முதலாவதானது இலங்கை இராணுவத்தின் நடத்தைகள். இலங்கை இராணுவம் 1983டன் ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். இதை நான் கடந்த யுத்த நிறுத்தக் காலத்தில் போனபோதும் அதவானித்தேன். பொய்யான செய்திகள் பரவலாகப் பரப்பப்படும் போது உண்மையான குற்றங்கள் நிகழுவதும் அந்தப் பொய்யினுள் புதைக்கப்படுகிறது.
ஊரடங்கு வாழ்வு…..
யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்று வரையில் அங்கு ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளது. இரவு 9 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதிப்படையவே செய்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக யாழ்பாணத்திலிருந்து கடைசி பஸ் சேவைகள் 6 மணிக்கு புறப்படும். இப்படியான இடைஞ்சல்களுடன் வாழும் யாழ் மக்கள் இவ் ஊரடங்குச் சட்டத்தை முற்றாக நீக்குவதையே விரும்புகிறார்கள். குறைந்தது ஊரடங்குச் சட்டம் இரவு 12 பிறப்பிக்கப்படுவதையும் கடைசி பஸ் சேவைகள் 8 மணிவரை நீடிப்பதையும் விரும்புகிறார்கள். யாழில் அதிகாரத்தை வைத்துள்ள ஈபிடிபியினர் இந்த நடைமுறைகளை ஏன் செய்ய முடியாது உள்ளது. இவை மக்களின் அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இரவு வேளைகளில் மின்சாரத்தடை ஏன் செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் பல வருடமாக கேட்டபடி உள்ளவிடயம். இரவு 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்த மிக முக்கியமான நேரத்தில் ஏன் மின்சாரத்தை அரசு துண்டிக்க வேண்டும்? யாழ் பிள்ளைகளின் கல்வியில் இது பெரும் பாதிப்பை உள்ளாக்குகின்றது. இப்படியான பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய திர்த்து வைக்க வேண்டிய கடமைப்பாடு அங்கு அதிகாரத்தைக் கொண்டுள்ள ஈபிடிபியினருக்கு உள்ளது. இவ்விடயத்தில் ரிஎன்ஏ கேட்டாலும் அரசு செவிசாய்க்காது.
மாலை 6 மணிக்கு கடைசி பஸ் போனதும் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடிவிடும். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் பிறப்பிக்கப்படுவதால் அந்த நேரத்தில் ஆபத்து அவசரத்திற்கு வெளியே வரமுடியாத நிலையுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது.
புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றால் இலங்கை இராணுவம் முன்பு வீட்டுக்கு பக்கத்து வீட்டார்களையும் தொந்தரவு செய்வது வழக்கம். ஆனால் இப்போது அப்படி எல்லாம் நடப்பதில்லை. இதேவேளை புலிகளைப் பற்றிய மிகச் சரியான தகவல்களை இhணுவம் பெறுவதினாலேயே இராணுவம் தேவையற்றோரை தொந்தரவு செய்வதில்லை என மக்கள் கருதுகின்றனர். மக்களது அன்றாட வாழ்கை பலவகையில் பாதிக்கப்பட்டாலும் தனிப்பட்டமுறையில் இராணுவம் தலையிடாமல் நடந்து கொள்வதை அவதானிகக் கூடியதாக உள்ளது.
பலாலியிலிருந்து இராணுவத்தின் தொடர் வண்டிகள் கச்சேரியூடாக நாவற்குழியை நோக்கி போகும் விடயம் மிக முக்கியமானது. காரணம் இப்படியான தொடர் இராணுவ வண்டிகள் இந்த எ9 பாதையூடாக போகும் நேரத்தில் மிகவும் வேதனைக்குரிய விடயம் தமிழர்கள் இந்த பாதையை எக்காரணம் கொண்டும் எந்த அவசரத்திற்கும் குறுக்காக போக முடியாது. அதாவது இந்த பிரதான பாதையின் முழு பக்கத்து தெருக்களுமே மூடப்படும் எல்லா வண்டிகளும் மக்களும் இந்த தொடர் வாகன வண்டிகள் போய் முடியும் வரையில் காத்திருக்க வேண்டும். இதில் அவசர கர்ப்பிணியாகிலும் அல்லது மாரடைப்பில் அவஸ்த்தைப்படுபவராயினும் சரி காத்திருக்க வேண்டியதுதான். இது குறைந்தது 2மணி நேர நாடகமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
குடாநாட்டில் எல்லா மக்களையும் இராணுவம் மதிப்பீடு செய்துள்ளது. யார் எவர் என்பதை நிச்சயமாக தெரிந்துள்ளது. இப்படி இருக்கையிலும் ஏன் இராணுவம் தனது கெடுபிடிகளை தளர்த்தி மக்களை சுதந்திரமாக எந்நேரமும் எதுவும் செய்ய விடாமல் தடுக்கிறது என்பது எல்லோரிடமும் உள்ள கேள்வியாகும்.
யாழ் மக்கள் என்ன கூறுகிறார்கள்…..
யாழ்ப்பாணத்தில் மக்களின் பேச்சுக்களை அவதானிக்கும் போது, மகிந்தாவை ஆட்சிக்கு கொண்டுவந்தது புலிகள் என்றும், வன்னியில் உள்ள பாஸ் முறையே மக்களைப் புலிகளின் எதிரியாக்கியது என்றும் 60 வயது என்றிருந்த கட்டுப்பாட்டை 65 ஆக்கியது மக்களிடம் ஏன் இப்படி சுதந்திரமாக இருக்க வேண்டிய வயோதிபர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் ரிஎன்ஏ யினர் மகிந்தாவிடம் பேசி தமது பிரச்சினைகளையும் தமிழர் உரிமைப் பிரச்சினைகளையும் தீர்க்க வழிமுறைகளைச் செய்ய புலிகள் தடுப்பது பற்றியும், தற்போது யாழ்பாணத்தில் தமிழில் பேசி தமிழர்களிடமிருந்து புலிகளின் ஊடுருவலை தெரிந்து கொள்வதும் அரச படைகளுடன் இணைந்து செயற்படுவதும் முன்னாள் புலிகளே என்றும், கூறுகின்றனர்.
இந்தியா உதவிக்கு வந்தபோது அவர்களை சரியாகப் பாவிக்க புலிகளிடம் இராஜதந்திரம் இல்லை என்றும் மக்கள் கருதுகின்றனர்.
கிழக்கு தேர்தல் புறக்கணிப்பு – மகிந்தாவை சந்திக்காது ரிஎன்ஏ புறக்கணிப்பது – புலிகள் ரிஎன்ஏ கட்டுப்படுத்துவது போன்றன தவறு என்றே மக்கள் கருதுகின்றனர்.
ரிஎன்ஏ அரசை அல்லது அரசின் அலுவலர்களை சந்திப்பதை புலிகள் விரும்புவதில்லை. இது தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு செய்ய வேண்டிய அலுவல்களை செய்யவிடாமல் புலிகளால் தடைகள் ஏற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
யாழ் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இல்லை. மருத்துவ மனையின் முக்கிய கணக்காளர் பதவியில் இருப்பவர் கொழும்புடன் தொடர்பு கொள்ள தமிழில் மட்டுமே தொடர்பு கொள்ளக் கூடியவர் என்பதும் இதுவே பலவிதமான தடங்களுக்கு காரணமாக இருப்பதாகவும் இவர் ஈபிடிபி யினாலேயே நியமிக்கப்பட்டவர் என்றும் ஒருவர் குற்றஞ்சாட்டினார். வேறு பலருடன் கதைத்ததில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக கொழும்புடன் தொடர்புகொள்ளும் விடயங்களில் தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளதால் அரச அலுவலர்களுக்கு மொழி சிக்கலாக உள்ளது.
மக்கள் நினைப்பில் டக்ளஸ் கருணா அரசாங்கத்தோட சேர்ந்து இருக்கிறார்கள். ரிஎன்ஏ புலிகளின் கதைகளை கேட்டுக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளனர். தமது பிரச்சினைகளை பேச ஆட்களில்லை என்ற உணர்வு மேலோங்கியுள்ளதை அவதானிக்கவும் முடியும்.
இன்னும் சிலரிடம் முக்கியமாக வர்த்தகர்களிடம் இந்தப் புலிகள் தம்மை வறுகு வறுகு என்று வறுகி நாம் பிச்சைக்காரர் ஆகிவிட்டோம் எமக்கு செய்த அநியாயத்திற்கே புலிகள் அரசாங்கத்திடம் வாங்கிக் கட்டுகிறார்கள் என்பதும் சந்தையில் தாராளமாய் கேட்க முடிகிறது.
யாழில் புலிகளின் செயற்பாடுகள்…..
புலிகளை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறியவர்கள் புலனாய்வுத்துறையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஈபிடிபி மற்றும் ரிஎம்விபி உறுப்பினர்களுக்கு புலிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் உறுப்பினர்கள் பற்றி எதுவும் தெரிவதற்கில்லை. அதனால் அவர்களால் இன்று புலிகளை அடையாளம் காணுவது கடினமானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்குள் புலிகளைவிட்டு வெளியேறிய பலர் இன்று இலங்கை அரசின் உளவுப்படையில் வேலைசெய்யும் அலுவலர்கள் என்பது தெட்டத் தெளிவான விடயம். இன்று யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பது முன்னாள் புலிகளாகிய இன்னாள் அரச உளவுப்படையினரே. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகளால் முன்வைக்கப்பட்ட காரணம் அவர்கள் தம்மை காட்டிக் கொடுப்பதாக, ஆனால் இன்று புலிகளே புலிகளைக் காட்டிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.
அன்று மாத்தையா நேற்று கருணா இன்று இளந்திரையன் – புலிகளின் இராணுவக் கட்டமைப்பு உருவாக்கிய உள்முரண்பாடுகளும் பிரச்சினைகளுமே புலிகளின் தன்னழிவிற்கு இட்டுச்சென்று உள்ளது. இன்று புலிகளின் போராட்டம் தலைமை எல்லாமே தோற்றுப் போயுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இளந்திரையனே கிளிநொச்சி தாக்குலின் தோல்விக்கு காரணம் என்றும் கூறி அவருக்கும் இன்னும் சிலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அங்கு மக்கள் தெரிவிக்கின்றனர். இளம்திரையனே இராணுவத்திற்கு முழுத் தகவல்களும் கொடுத்தவர் என்றும் இலங்கை இராணுவம் புலிகளுக்கு உள்ளேயும் புலிகளின் ஆதரவாளர்களையும் தமக்கு செய்தி சேகரிப்புக்கு தமது உளவாளிகளாக மாற்றி யமைத்துள்ளனர்.
இக்காரணத்தினாலேயே யாழ்ப்பாணத்தில் புலிகள் இன்று எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருப்பதாயும் பலராலும் பேசப்படுகின்றது. ஒரு சாதாரண ஓட்டோ டிரைவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு இவற்றை சாதாரணமாகவே பேசிக்கொள்கிறார்.
சந்திரிகா அரசு காலத்தில் புலிகள் யாழ்ப்பாணத்தில் நிலத்துக்குகீழ் ஒழித்துவிட்டுப் போன ஆயுதங்களை புலிகள் திரும்ப வந்து எடுத்துப் போராடினார்கள். இப்போ இந்த நிலை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பூச்சியம் என்றே கருதப்படுகிறது. காரணம் இராணுவம் மிகவும் நுட்பமாக விடயங்களை கையாளுகின்றது.
தற்போது வன்னிப் பகுதியில் புலிகள் நிலத்துக்குக் கீழ் ஒளித்துவிட்டுப் போகும் அத்தனை பொருட்களும் தற்போது இராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காரணம் இராணுவம் மிக நுட்பமான கருவிகளையும் யுக்திகளையும் கையாளுவதேயாகும். இதைவிட புலிகளிடமிருந்து சரணடைந்தவர்களினதும் தகவல்கள் இலங்கை அரசுக்கு பெருமளவு உதவி புரிகின்றது.
கடந்த 20 வருடங்களாக புலிகளின் உளவுப் படையில் இருந்த நபர் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பியோட முயற்சித்தபோது புலிகள் கலைத்துக் கலைத்து அந்தப் படகை சுட்டுத் தள்ளினர். அதற்கிடையேயும் அந்த நபர் தப்பியோடி இராணுவத்திடம் சரணடைந்துள்ளார். இவரிடமிருந்து மிக அதிகமான வன்னிப் பிரதேச தகவல்கள் பெறப்பட்டுள்ளது என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள பேச்சுக்கள்.
தற்போது யாழில் புலிகள் ஊடுருவினால் உளவுப் படையின் அதிவிரைவுப் படையினரிடம் தப்பிவிட முடியாது. புலிகளின் ஊடுருவலை ஆகக் குறைந்தது 2 கிழமையில் அழித்தொழித்துவிடுவர்.
முன்பு ஒருகாலத்தில் எப்படி புலிகள் மாற்று இயக்கத்தவர்களை அழித்தொழிப்பில் மிக வேகமாக செயற்ப்பட்டனரோ அதே போல இப்போது புலிகளை அழித்தொழிக்க இந்த முன்னாள் புலிகள் செயற்ப்படுவதை பார்க்க முடிகிறது. ஒரு குடும்பம் புலிகளுடன் தொடர்படையவர்கள் என்று தெரியவரின் அக்குடும்பம் காணாமல் போய்விடுவர்.
இந்தப் பிரிவினர் மோட்டார் சைக்கிளில் (mobile brigade) தான் எப்போதம் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் மக்களே பெரும்பான்மையினர் மோட்டார் சைக்கிள் பாவிப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த அதிவிரைவுப் படையினரை அவதானிப்பது மிக கடினம். இவர்கள் வரம்பு வாய்க்கால் என்ற வேறுபாடு இல்லாமல் வருவர். திரிவர். தேடுவர். இவர்களே யாழ்பாணத்தை யுத்தப் பிரதேசமாக வைத்திருப்பவர்களாவர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கியவர்கள் இந்த இராணுவப் பிரிவினரேயாவர்.
அண்மையில் சரசாலையில் ஒரு வீட்டில் புலிகள் பகலில் வந்து தங்கி போனவிடயம் அடுத்தநாள் அதிகாலையில் அந்த வீடு தாக்கப்பட்டு 3 பேர் கொல்லபட்டனர். அந்த வீட்டில் தொலைத்தொடர்பு சாதனம் துப்பாக்கிகள் எடுக்கபபட்டது. இப்படியாக இந்த தகவல்களை அரச இராணுவத்தினர்க்கு கொடுத்து உதவுபவர்களும் முன்னாள் புலிகளேயாகும். இந்த உளவாளிகள் புலிகளை காட்டித்தருவதாக சொல்லியே உயிருடன் விடப்பட்டுள்ளவர்கள் அல்லது அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்களாக மாற்றப்பட்டோராவர்.
இந்த அதிவேக தாக்கும் பிரிவினர் பல அதிகாரங்களை தமது கைவசம் கொண்டுள்ளனர். யாராவது ஒருவரில் சந்தேகம் என்றால் அவரிடம் அவரது அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட முகாமிற்கு வரும்படி கூறிவிட்டுப் போவார்களாம். அங்கே இவர் போக முன்பு இவரைப் பற்றிய முழு விபரங்களும் பெற்றுக்கொண்டு இவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். அதிலிருந்து இவரைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் புலிகள் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருப்பது பற்றி மக்கள் மிகவும் சாதாரணமாக பேசுவதுண்டு. காரணம் ஒருகாலத்தில் ஒரு சிறு முயற்ச்சியுடன் தமக்கு வேண்டியவர்களுக்கு கதவடைப்பு கர்த்தால் என்பன செய்யக்கூடியவர்கள் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் மரணித்த போது யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு கதவடைப்போ கர்த்தாலோ செய்யப்படவில்லை என சிலரும், தற்போது யாழ்பாணத்தில் எல்லோரும் மொபைல் தொலைபேசியுடன் இருப்பதாயும் அப்படி இருந்தும் புலிகளின் தொடர்புகள் யாழ்பாணத்தினுள்ளே வருவது குதிரைக் கொம்பாகிவிட்டது. இது எல்லாவற்றிக்கும் காரணம் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது அரசின் உளவாளிகளாக உள்ளதாலேயே என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
புலிகளின் உயர்மட்டத்தில் அரச உளவாளிகள் இருப்பதாலேயே புலிகள் இப்படியான படுதோல்விகளைச் சந்திக்கிறார்கள் என்று பலரிடம் கருத்துண்டு இதற்கு உதாரணமாக ஆனந்தபுரம் சம்பவத்தை எல்லோரும் உதாரணமாக பேசுகின்றார்கள். போராற்றல் கொண்ட தளபதிகளான பால்ராஜ், கருணா, தீபன் போன்ற கட்டளைத்தளபதிகளை புலிகள் இழந்தது புலிகளுக்கு இராணுவ வல்லமையை இழந்துள்ளனர் என மக்கள் கருதுகிறார்கள்.
வன்னி நிலைமைகள் தொடர்பாக…..
புலிகளே எல்லாம் என்றிருந்த வன்னி மக்களை புலிகளும் துன்புறுத்தியது மிகவும் மனவேதனையானது என்று தப்பி வந்த முள்ளியவளை வாசி சொன்னார். தப்பிப் போகும் மக்கள் புலிகளால் சுடப்பபட்டுள்ளனர் என்ற கருத்து யாழில் பரவலாக உள்ளது. வெளி நாட்டுத் தமிழர்கள் இங்கு வந்து பார்த்து எமது நிலைமைகளை அவதானித்து பேசுவதே நல்லது என்ற அபிப்பிராயப்படுகின்றனர்.
புலிகள் 2000 பேர்மட்டில் கிழக்கு காடுகளில் தப்பியோடி உள்ளதாயும் 1000 பேர்மட்டடில் வன்னிக் காடுகளில் ஒழிந்துள்ளார்கள் என்றும் இனிமேல் கொரில்லாப் பாணியிலான தாக்குதல்களையே தொடுப்பர்கள் எனவும் பேசிக் கொள்கின்றனர்.
மேலும் புலிகளின் தலைவர்களாக சொர்ணம் பானு போன்றவர்களே இருப்பதாகவும் முக்கிய பல தலைவர்களை புலிகள் இழந்து விட்டதாயும் புலிகளால் இனிமேல் பாரிய இராணுவ நடவடிக்கைகளை செய்ய முடியாதென்றும் ஒரு சந்தை வியாபாரி கூறினார்.
யாழ் மருத்துவ மனைக்கு புலிகளால் சுடப்பட்ட 3 தமிழ் மக்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து தமது வியாதியின் கொடுமையிலும் தமது மரணத்தின் விளிம்பிலும் புலிகளால் சுடப்பட்டதை எடுத்துக் கூறி திட்டுகின்றனர்.
கோப்பாய் கொடிகாமம் நாவற்குழி ஆகிய பகுதிகளில் ஜடிபி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் முகாம்கள் நிறுவுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக புதிய இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜடிபி முகாம்களில் இந்து பிராமண பூசாரிகள் மிகவும் முறைகேடாகவே நடாத்தப்படுவதாயும் இது பற்றி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற ஆதங்கம் பலரிடமும் உள்ளது. ஒரு கிறீஸ்தவப் பாதிரியாரை இப்படியான முகாமில் வைத்திருப்பதை அரசு விரும்பவில்லை. ஆனால் இந்து மதகுருமார்கள் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டு தமது ஆஸ்த்தானங்களை கவனிக்க முடியாமல் உள்ளனர். இதற்கு பொறுப்பாக உள்ள இந்து கலாச்சார அமைச்சும் அதனைக் கவனம் எடுக்கவில்லை.
இறுதியாக…..
புலிகளின் காலத்தில் பெண்கள் நன்றாக நகையணிந்து எந்த நேரத்திலும் போகலாம் வரலாம் என்ற நிலை இருந்தது என்பதை எல்லோருமேமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் பல களவுகள் கொள்ளைகள் நடைபெறுகின்றது. இது பசி பட்டினி காரணமாகவே நடைபெறுகின்றது. காரணம் வேலையின்மை. மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்வதும் இராணுவத்தினர் போன்று நடித்து கொள்ளையடிப்பதும் தாராளமாக நடைபெறுவதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
வெளிநாடுகளில் இந்தக் கொள்ளைகளை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினரே செய்வதாக பிரச்சாரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கொள்ளைகளில் பல தரப்பட்டவர்களும் ஈடுபடுகின்றனர்.
தற்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றனர். புலிகளின் வரிஅறவிடுதல் புலிகளின் பரிசோதனைகள் புலிகளின் கெடுபிடிகள் இல்லையென்று திருப்திப்படுபவர்கள் பலருள்ளனர். நான் எனது சொந்த அனுபவத்தில் புலிகளின் பரிசோதனைகளையும் இராணுவத்தின் பரிசோதனைகளையும் சந்தித்து உள்ளேன். புலிகள் நடந்துகொண்ட விதமும் பேசும் பேச்சுக்களும் ஒப்பீட்டளவில் இலங்கை இராணுவம் பரவாயில்லை என்ற மனப்பான்மையையே ஏற்படத்தியது. இப்படி இந்த இராணுவம் நடக்கிறது என்று யோசிக்கும் போது இராணுவம் புலிகளின் தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள் என்றும் ஆனால் புலிகள் இராணுவத்தின் தவறுகளை படிப்பதில்லை மட்டுமல்ல தாமும் தவறுகளை தொடர்ந்து விடுகிறார்கள் என்றுமே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இனிமேல் புலிகள் திரும்பியும் வந்தால் என்ற பயம் உள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்றல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆங்கிலத்தின் இலக்கிய ஆங்கில பாடங்கள் பரவலாக எல்லா உயர்தர பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலம் கற்ப்பிக்கப்படுகின்றது.
சிங்களம் படிப்பதால் நல்வாழ்க்கை பெறலாம் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்துள்ளது. இது இலங்கை அரசின் சிங்கள நாடு என்ற பயணத்திற்கான அறிகுறியாக தெரிகின்றது. அதேசமயம் சிங்கள இராணுவத்தினர் தாராளமாக தமிழில் பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ் பல காலமாக படிப்பிற்கப்படுகின்றது.
1983ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த சாதிப்பிரிவனர்க்குரிய விகிதாசாரங்களில் தற்போது சாதியமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் மாற்றம் கண்டுள்ளது. சாதிக்குரிய தொழில்கள் மெல்ல மெல்ல புலிகளின் ஆதிக்க காலத்தில் செய்ய முடியாதிருந்த தொழில் முறைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதற்கு வேலையில்லாத் திண்டாட்டமே காரணமாகும். இதற்குரிய பரிகாரங்களை காணவேண்டி உள்ளது.
சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ஆதரவைக் கொண்ட அமைப்பாக ஈபிடிபி யே உள்ளது. இதன் போது எனக்கு ஜாபகம் வந்த ஒருவிடயம் யாழ்பாணத்தில் புலிகள் தேர்தலை புறக்கணிக்கும்படி கேட்டு தேர்தல் புறக்கணிக்கப்பட்ட போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் துணிந்து ஈபிடிபியை தமது பிரதிநிதியாக கொண்டு வந்தனர். இது பற்றி ஐபிசி ஆய்வாளர் ஜோதிலிங்கம் அந்த மக்களை நாம் (புலிகள்) வென்றெடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தார்.
சரசாலை சரஸ்வதி கல்லுரியில் ஆரம்ப கல்வி கற்ற யாழ் மத்திய கல்லுரி அதிபர் பற்றியும் அவரது கடமையுணர்வு உதவி மனப்பானமை மாணவர்களிடையே பெருமைமிக்க அதிபர் போன்ற விடயங்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் அவர் கொல்லப்பட்டு பல காலங்களாகியும் மக்களால் பேசப்படுகின்றது. இத ஒரு முக்கியமான விடயமாக எனக்கு தெரிகின்றது.
புலிகளும் புலிகளின் ஊடகங்களும் செய்யும் பிரச்சாரங்கள் யாழ்ப்பாண மக்களைச் சென்றடைவதில்லை. அவை மக்களிடம் எடுபடவில்லை என்றே நான் கருதுகிறேன். இயக்கங்களால் பட்ட கஸ்ரங்களால் மக்களுக்குப் போராட்டத்தில் வெறுப்பும் சலிப்பும் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் இபபடியே இலங்கை இராணுவத்துடன் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம் என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
சாதாரண சமாதான வாழ்வு என்றால் என்ன என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர். அதனால் திறந்தவெளிச் சிறைக்குள் ஊரடங்குவாழ்வுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். மகிந்த ஆண்டாலென்ன பிரபாகரன் ஆண்டாலென்ன இவர்களுடைய சகோதரங்களும் பிள்ளைகளும் ஆண்டாலென்ன தாங்கள் உண்டு தங்கள் வாழ்வு உண்டு என்று வாழப் பழகிக்கொண்டு உள்ளனர். அந்த மக்களை மௌனமாக்கிவிட்டு அங்கும் இங்குமாகப் பலரும் அவர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி தங்கள் அரசியலை அவர்கள் தலையில் கட்டுகின்றனர். பாவம் அந்த மக்கள். அவர்களது ஊரடங்கு வாழ்வு முடிவின்றித் தொடர்கிறது.
மாயா
ஒரேயடியாக ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. திறந்தவெளிச் சிறைச் சாலைக்குள்ளாவது அமைதியாக இருப்பது பெரிய விடயம். படையினரை விட தமிழ் குழு குறித்தே மக்கள் அச்சம் அடைகிறார்கள் போலும். EPDP தன்னை நிலைநாட்டிக் கொள்ள இன்னும் நல்லது செய்ய வேண்டும்.பலர் டக்லஸை திட்டினாலும் நல்லவை பல அவர் செய்தே உள்ளார். பிரச்சனைகளாக இருப்பவை , புலிகள் மீண்டும் யாழ்பாணத்துக்குள் வரும் சாத்தியம் இருக்கும் என நம்பும் வரை தொடரவே செய்யும் போன்றதையே கட்டுரை சொல்கிறது.
இரு மொழிக் கல்வி ( தமிழ் – சிங்களம்) மிக அவசியமானது. மொழி மூலமே புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. அதை தடுத்தவர்களால்தான் தொடரும் இந்த நரபலிகள். புலம் பெயர் தமிழர்கள் பல மொழிகளில் வல்லுனர்களாகி விட்ட நிலையில் நாட்டிலிருந்த மொழி மீது வெறுப்பை தோற்றுவித்த அரசியல்வாதிகள் சுயநலவாதிகளே.
புலிகளின் அழிவு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மாற்றம் ஒன்றை கொண்டு வரும் என்பதை சாமின் கட்டுரை வாயிலாக உணர முடிகிறது. மனம் திறந்த கட்டுரைக்காக சாமிற்கு நன்றி.
murugan
இங்குள்ள பலருக்கும் கட்டுரை மிகக் கசப்பாகத்தான் இருக்கும். கட்டுரையாளர் காசு வாங்கி விட்டு எழுதுகிறார் என புலம் பெயர் தேசங்களில் கூச்சல்கள், முணுமுணுப்புக்கள் இனி எழும்.
Azan
நல்லதொருபதிவு. வெளிநாட்டில் இருக்கிறவர்கள் எங்களை வந்து பார்த்தால்தான் தெரியும் நாம்வாழும் வாழ்க்கையை என்பார்கள் அங்கிருப்பவர்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்பதை காட்டுகிறது இக்கட்டுரை. இதுக்குத்தான் சொல்கிறது தங்கட எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும் தகுதி அங்குள்ளவர்களுக்கு மட்டுமே உண்டென. வெளிநாட்டில இருந்து தீர்வை தீத்துகிற கதையை விட்டு உதவிகள் ஏதும் செய்யிறதை மட்டும் பாருங்கோ.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தது மட்டுமில்லாமல் தோல்விக் கொண்டு போனதுக்கும் புலிகள் தான் காரணம் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.
BC
//புலிகளும் புலிகளின் ஊடகங்களும் செய்யும் பிரச்சாரங்கள் யாழ்ப்பாண மக்களைச் சென்றடைவதில்லை. அவை மக்களிடம் எடுபடவில்லை என்றே நான் கருதுகிறேன்//
வெளிநாட்டில் உள்ள எனது உறவினர் வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அங்கே தீபம் TV nonstop. Internetல் தேசமோ அல்லது வீரசேரியோ கிடையாது. புதினம், சங்கதி மட்டும் தான். புலம் பெயர்ந்தோரின் உலகமே வேறு.
பார்த்திபன்
தற்போதைய காலநிலைக்கு அவசியம் தேவையான கட்டுரை. கட்டுரையாளர் சகல சாதக, பாதகமான விடயங்களையும் அலசி ஆராய்ந்திருப்பது பாராட்டுக்குரியது.
sus
கட்டுரையாளருக்கு வணக்கம் நீங்கள் பின்வருமாறு எழுதியிருந்தீர்கள்;
//புலிகளும் புலிகளின் ஊடகங்களும் செய்யும் பிரச்சாரங்கள் யாழ்ப்பாண மக்களைச் சென்றடைவதில்லை. அவை மக்களிடம் எடுபடவில்லை என்றே நான் கருதுகிறேன்.//
பின் எவ்வாறு புலிகளுக்குள் பிளவு எனவும், புலி உறுப்பினர்களே காட்டிக் கொடுக்குறார்கள் எனவும் எழுதியிருந்தீர்கள்? யாழ் மக்கள் அரசு வெளியிடும் செய்தியை மாத்திரம் நம்புகிறார்களா? வன்னியில் இருந்து தப்பி வந்ததாக கூறப்படும் மக்கள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தால் அரசுக்கு ஏற்றமாதிரி தான் கதைப்பார்கள் உயிருக்கு பயந்து தப்பி வந்தவர் எப்படி உண்மை கூறுவர்? வன்னியில் என்ன நடக்கிறது என்பது யாழில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லை இலங்கையின் மற்ற பகுதியில் உள்ள மக்களுக்கே தெரியாது என்பதே உண்மையாகும். புலிகள் இராணுவ ரீதியாக சற்று பின் வாங்குகிறார்கள் என்பதை வைத்து ஒட்டு மொத்த மக்களும் புலியை எதிர்க்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று என்பது என் கருத்து.
தயவு செய்து உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன் நன்றி.
நண்பன்
புதினமும் சங்கதியுமம் மனிதத்தை உருவாக்காது. மனித அவலத்தையே கொண்டு வருகிறன்றன. GTV , தீபம் இரண்டும் சாகாதவர்களையும் சாகடிக்ககின்றனர். எல்லோரும் பிணம் தின்னிகளாகி விட்டனர்.
சிங்களவன் அகதியாக வந்த மக்களுக்கு உதவ பொருள் சேர்த்து கொண்டு போகிறான். தமிழனோ கிறிஸ்தவ கோயிலை உடைத்து பாதிரியாருக்கு புத்த பிக்கு அச்சுறுத்தல் என்று நடக்காதததை நடந்ததாக பொய்யுரைக்கிறான். தமிழர் – சிங்களவர் பிரச்சனையோடு மதக் கலவரத்தையும் தூண்ட தூபம் போடுகிறார்கள். நீங்கள் எல்லாம் திருந்த……………….?
BC
நண்பன், உங்கள் கருத்து முழுவதையும் வழிமொழிகிறேன்.
Ramasamy thasan
வன்னியில் பிணம் தின்னும் இராணுவம் யாழில் கட்டுப்பாட்டுடன் நடக்கின்றார்களாம்.
இரவு ரோந்துக்கு வீதிக்கு ஒருவர் வர வேண்டும், புலிகளை எதிர்த்து ஊர்வலம்,பிரசுரம் செய்ய வேண்டும் என்பது ஏன் உங்களிற்கு தென்படவில்ல.
kalahthar
So when are you all going to settle back in Jaffna.
There is no need TELO anymore in London pack your thing from London & come to live with us in Jaffna.
padamman
ஓரு விடையம் தெளிவாக தெரிகின்றது நீங்கள் சார்ந்த அமைப்பை புலிகள் சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்ற ஆதங்கம்
கடாசு
kalahthar நீங்கள் எழுதினதை ரெலோகாரங்களிட்ட கேட்டன். எப்ப புலத்து புலியாட்கள் வணங்காமண் அதுதான் வன்னி மண்ணுக்கு திரும்பிப் போறாங்களோ. அதுக்கு அடுத்த நாள் தாங்கள் யாழ்ப்பாணம் போறம் என்றார்கள்
murugan
இரவு ரோந்துக்கு வீதிக்கு ஒருவர் வர வேண்டும், புலிகளை எதிர்த்து ஊர்வலம் பிரசுரம் செய்ய வேண்டும் என்பது ஏன் உங்களிற்கு தென்படவில்ல “Ramasamy thasan //
பொங்கு தமிழ் நடந்த போதும் பொது மக்கள் இராணுவ பயிற்சி எடுத்த போதும் கப்பம் வரி பலாத்கார ஆட்சேர்ப்பு நடந்த போதும் ஒன்றும் ஒருவருக்கும் தெரியாமல் போய்விட்டது. அப்போது யோசித்திருக்க வேண்டும்.
pirabhakaran
vananga maan or europian tamil both are not going back home
they will show the wanni peoples bodies to safe their luxury life in europe
even mahinda gives tamileelam they will say we need more
because they cant go back thats the truth
msri
அப்ப வடக்கில் வசநதம் என கும்மியடிப்போம்!
tax
இலங்கை இராணுவம் 1983டன் ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர்./// ஆம் உண்மைதான். இப்ப எல்லாம் வன்னியில் ஒரேநாளில் தினமும் 50-60 ஏன் சில வேளை 100 பேரை கடந்த 150நாளாக இனப்படுகொலை செய்வது போல் 83 இல் செய்யவில்லைதான்.
வன்னியில் கடந்த 150நாளாக 7000 பேரை கொலை செய்ததும்,15000பேரை காயப்படுத்தியதும் பொய்தான். ஜ.பி.சி சொன்ன மாதிரி தான் ஜ.நா வும் சொல்லிப்போட்டுதோ.
அப்ப வன்னியிலிருந்து கப்பல் கப்பலாக 25தடவை கொண்டுவந்த 10000 காயப்பட்டவர்களின் செய்தியும் பொய்தான்.
கடந்த இரு வாரத்துக்குள் வவுனியாவில் புதைக்கப்பட்ட அடையாளம் காண எவருமில்லாத 56 பின்னர் 78 தமிழரது மொத்த 134 சடலங்களும் பொய்தான். இன்னும் மன்னார் மருத்துவமனையில் உயிரிழந்த 16பேரும் இறக்கவில்லை என்பதும் பொய்தான். புல்மோட்டைக்கு கொண்டு வந்து உயிர்பிரிந்த 39 வன்னித்தமிழர்களின் இறப்பும் அதற்கு முன்னர் திருமலையிலும் கண்டியிலும் பொலநறுவயிலும் சேர்த்து செத்த வன்னி தமிழர்களின் சாவும் பொய்தான்.
யாழ்ப்பாணத்தில் எந்த ஆதாரமுமில்லாது ஊர் தொழவாரம் கதைத்த சந்தி செய்திகளை கட்டுரை வடித்துள்ளார் சாம்………..
கடைசியாக சனல்4 இல் வந்ததும் பொய்தான்…
tax
புதினமும் சங்கதியுமம் மனிதத்தை உருவாக்காது. மனித அவலத்தையே கொண்டு வருகிறன்றன. GTV , தீபம் இரண்டும் சாகாதவர்களையும் சாகடிக்ககின்றனர். எல்லோரும் பிணம் தின்னிகளாகி விட்டனர்.
// அப்படியானால் இந்த உண்மையான அவலத்தை யாருக்கு போட்டுக்காட்டுவது.இனி கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.18வயதுக்கு குறைந்தவர்கள் கண்டிப்பாக அனுமதிகப்படமாட்டார்கள் என்று ரீகல் தியெட்டரை திறந்து தான் இந்த அவலத்தை காட்டவேண்டும்.
murugan
ரக்ஸ் நீங்கள் சொல்வதெல்லாம் ஏன் நடக்கிறது? அழிவுகளை மட்டுமே துயரங்களை மட்டுமே தமிழினம் ஏன் அனுபவிக்கிறது? உணர்ச்சி வசப்படுவதில் ஒரு பலனுமில்லை.
தமிழ் மக்களுக்கான பாதுகாப்பான வாழ்வை நோக்கி நீண்ட பயணம் போக வேண்டும்.
Thirumalaivasan
தேசம் நெற்றிற்கு ஒரு கடப்பாடுண்டு என்று கருதுகின்றேன். கட்டுரையாளரின் குறுகியகால யாழ் விஜயத்தின்போது> தன் பார்வைக்கோணத்தில் அவசர அவசரமாக அவதானித்த விடயங்களை தனது உள்மனப்பதிவு அனுபவம் போன்றவற்றுடன் இணைத்து ஒரு கட்டுரையாக்கியிருக்கிறார். நிச்சயம் இக்கட்டுரையை யாழ்ப்பாணத்தில் தற்போது சிறந்தவெளிச்சிறை வாழ்வை வாழ்ந்துவரும் ஒருவரின் பார்வைக்கு வழங்கி அவரது கருத்துக்களையும் வெளியிட முன்வரவேண்டும். இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து படிப்புக்காக பல பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவ்வப்போது வந்துசெல்கிறார்கள். அவர்களில் ஒருவரைப்பிடியுங்கள். அப்போது உண்மை வெளிவரும். ஸ்டெக்ஹோம் சின்ட்ரோம் என்று ஒன்று இருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இன்று கட்டாய ஊரடங்கு> மின்சார வெட்டு போன்ற அநாவசியமான அதிகார அடக்குமுறைகளுக்குள்ளாகியிருக்கும் சிறை வாழ்க்கையும் எதிர்காலத்தில் சாதாரணமாகிவிடும். இதைத்தான் முழு இலங்கைக்கும் அரசு கொண்டுவர எத்தனிக்கின்றது. மூன்றாண்டுகள் வரையில் வவுனியா அகதிமுகாம்களைப் பேணவெண்டும் என்று சிங்கள அரசு கருதுவதும் இதனால் தான். இதையெல்லாம் ஆழமாகச சிந்திப்பதற்கு நாம் முன்வரவெண்டும்.
EPDP mainthan.
கட்டுரையில் சொன்னதெல்லாம் சரிதான். புலி தனது தலையில் தானே மண்ணை அள்ளி போடுது எண்டது பழைய பழமொழி. புலி தனக்கும் அப்பாவி தமிழர்களுக்கும் குழி தோண்டி புதைகிறது எண்டால் சரியாக இருக்கும்..
சபாஷ் கட்டுரையாளர்.
EPDP-Army வாழ்க.
palli
எப்படியெல்லாமோ சிங்கள தலமைகளுடன் பேசினோம் (1947)ல் இருந்து. ஒப்பந்தம் செய்தோம். ஆனால் எதையும் சிங்கள தலமைகள் ஏற்று கொள்ளாததால் வேறு வழியின்றி(வேலையின்றி) நாம் தறுதலைதனமாய் ஆயுதம் ஏந்தி சதிராட வேண்டி வந்தது. இது புலிகளின் ஆய்வில் இருந்து கண்டு பிடிக்கபட்டது.
பல தடவை பல சர்வதேசநாட்டில் ஒரு சமாதான தீர்வு காண (1983)ல் இருந்து பேசினோம். ஆனால் எதையும் புலி தலமைகள் ஏற்க்கவில்லை. வேறு வழியின்றி அவர்களது ஆயுதங்களை பறித்து தமிழரை அவர்களிடம் இருந்து பாதுகாக்கவே உலக போரில் போடாத குண்டுகளை கூட வன்னி மக்கள் மீது பூப்போல தூவி கடமையாறுகிறோம். இது அரச தரப்பு வாக்குமூலம்.
இப்படிதான் பல்லி நினைக்கிறது.
palli
//ஆழமாகச சிந்திப்பதற்கு நாம் முன்வரவெண்டும்.//
எமக்கும் அதுக்கு விருப்பம்தான் ஆனால் அதுக்கு புலி விலக வேண்டும். அல்லது மற்றவர்களுக்கும் வழி விட வேண்டும். நந்தி மாதிரி குறுக்கே படுக்கபடாது.
சங்கு
திருமலைவாசன் கருத்தை வரவேற்கிறேன். லண்டனில் வதிபவர் தான் யாழில் நின்றபோது கண்டதை கேட்டதை பதிந்துள்ளார். வெளிநாட்டுப் பத்திரிகையாளன் போனாலும் இதைத்தான் செய்யப்போறாங்கள். அதுயாழ்ப்பாணம் என்ன வன்னியோ அல்லது கொழும்போ எங்கு போனாலும் இதுபோன்ற விடயங்கள்தான் செய்தியாக்கம் பெறுகிறது; சனங்களுடன் கதைத்து அந்த ஊர்த் துழாவாரங்களை செய்தியாக்குவாங்கள். வெளிநாட்டுப் பத்திர்கையாளன் சொன்னால் மட்டும் ஆவனவன் தனக்குச் சாதகமானதை ஏற்றுக் கொள்வான்.
அந்தந்த இடங்களில் அந்த நாட்டில் தொடர்ந்து வாழ்பவர்கள் சுதந்திரமாக கதைக்க எழுத பேச காலம் உருவாகவேண்டும். திருமலைவாசன் கேட்ட விடயத்தை எந்தக் கருத்தாளருமே முன்னெடுக்கலாம்
நண்பன்
tax இப்பேபாதைக்கு இதெல்லாம் நிக்க வேணுமென்ற கரிசனை இருத்தால் தலைவருக்கு சரணடையச் சொல்லுங்கோ? உடனே போர் நிக்கும். போர் நின்றால் அனைத்தும் நிக்கும்.
தமிழீழம் வேணுமென்றால் சாவுகள் அழிவுகள் சாதாரணம் என்று தலைவர்தானே சொன்னவர்? சனம் செத்தாதான் தமிழீழம் கிடைக்கும் என்றவர்?
தமீழீழமும் வேணும் ஆக்களும் சாகக் கூடாது என்றால் எப்படித் தமிழீழம் கிடைக்கும் என்ற தியரி கொண்டவர் தலைவர் பிரபாகரன். அது அனைவரும் அறிந்ததே. சாகப் போறவனையும் கட்டியணைச்சு சிரிச்சுக் கொண்டே போட்டோ பிடித்த தலைவர்கள் உலகத்தில் எங்குமே இல்லை. கிட்லர் கூட அதைச் செய்யவில்லை.
எனவே அவர் மாவீரர்கள் மேல் அன்பு கொண்டவரே தவிர, மக்கள் மீது அன்பு கொண்டவரல்ல. பிணங்களை பார்க்க ஆசை கொண்டவரேயல்லாமல் மனங்கள பார்க்க ஆசை கொண்டவரல்ல.
தமிழீழம் முழுவதும் மாவீரர் இல்லங்கள் அமைத்தாரே தவிர, மக்களுக்கு வேறு என்னன செய்தார்.. உண்மையில் அவர் ஒரு மனநோயாளி.
Jaffna Boy
Hi.
No more LTTE in Jaffna. You come live with us. No need for you to line-up outside social services in London or have TELO London branch. Come live with us instead of posting usless on internet.
இ.நந்தவேள்
//ரிஎன்ஏ யில் உள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களால் மீள இயக்க வைக்கப்பட்ட லண்டன் ரெலோ அமைப்பாளராக செயற்பட்டு வருகிறார்//
விடுதலைப் புலிகளுக்கு வக்காளத்து வாங்கும் லண்டன் ரெலோவின் அமைப்பாளரா இப்படி உளத் தூய்மையுடன் புலிகளை விமர்சனம் செய்தவர் என கேட்கத் தோன்றுகின்றது !
சபாஸ் ஜனநாயகம் மலர்கின்றது.