ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.
திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்தது. தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:
ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை… அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.
உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு… நம்மைத் தவிர வேறு யார்?. இன்று உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.
பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.
இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது… அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும். பயங்கரவாதி, சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப்பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.
பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது… இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்… உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள். இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே… அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது? 3000 தமிழ் தாய் – சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய ராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?
புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா… அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா? எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்? என்றார் காசி ஆனந்தன்.
sangu
காசி ஆனந்தன் இப்பத்தான் கோமாவால எழும்பி வந்திருக்கிறார். அதாலைதான் இப்பிடிக் கதைக்கிறார். பெரிதுபடுத்தாதேங்கோ…
சட்டம் பிள்ளை
ஏதோ உரைக்குறார் – என்ன அது???
sangu
//புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலிவீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா//காசி
காசி மறந்து விட்டீரோ ரெலோ அழிப்பில் 320 பேர் -மாத்தையா அழிப்பில் 285 பேர் வெரகல் தாக்குதலில் 423 பேர் கட்டுக்கட்டாக கொல்லப்படடோர்
// இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.//காசி அப்ப நீர் சொல்லுகிறீர் புலம் பெயர் நாட்டடில் நடக்கும் கூத்துக்களுக்கும் பிரபாகரனே பொறுப்பு என்று புலம் பெயர்நாட்டில் தோல்விக்கும் அவரேதான்
//சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும். பயங்கரவாதி சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள்// காசி
நீர் இனவாதம் பேசி விட்டு உன்பாட்டுக்கு இந்தியாவில் இருக்கிறீர் களத்தில் சாவது உமது பிள்ளைகளா? உமது பிள்ளை ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் சொல்லும் கேட்கிறோம். இவவளவு காலமும் ஈழத்தில் என்ன நடக்குது எண்ட உமக்கு தெரியாது எண்டோ சொல்லுறியள்
காசி பட்டினி கிடந்து பசியால் மெலிந்த பாழ்பட நேர்ந்தாலும் தம்பி பிரபாகரன் செய்த சகோதரக் கொலையை மறப்போமோ
Hg
“புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா”
What about Anurathapura shoting on civile singala people+
What about mulims in Jaffa and baticalua?
thurai
//இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.//
வன்னிமக்களின் அழிவினால்தான் இலங்கையின் பிரச்சினையை உலகம் பேசுகின்றது. இதற்குக் காரண்ம் பிரபாகரனும் அவரை வளர்த்த புலம் பெயர் தமிழர்களுமே.
//புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா//
தமிழர்களை புலிகள் என்னவும் செய்யலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறீரா. எனவே தமிழரிற்கு புலிகள் ஓர் பயஙரவாத இயக்கமேயாகும்.
ஈழத்தமிழர் விடுதலைப் புலிகளாகப் பிறந்து உலகத்தமிழரின் விடுதலைப்புலிகளாக வளர்ந்து தலவரின் பாதுகாப்புப் புலிகளாக மடிகின்றனர்.
துரை
uthayan
“புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா… அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா? எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்? என்றார் காசி ஆனந்தன்.”
இதுசரியான கேள்விதான்
அனுராதபுரத்தில் புலேந்த்திரன் தலைமையில் தெருக்களில் சிங்கள மக்களை வெட்டியும் சுட்டும் கொண்றது பின்னர் மட்டக்களப்பில் காலாகாலமாக வாழ்ந்த்துவந்த சிங்களமே பேசத்தெரியாத தமிழ் பேசும் சிங்களவர்களை சித்தா தலைமையில் இரவோடு இரவாக படுகொலை செய்தது யார் எண்று காசியானந்த்தனுக்குத் தெரியாதுதானே.
புலிகள் கொத்துக் கொத்தாய் கொலை செய்தது சிங்கள மக்களை மட்டுமல்ல இஸ்லாமிய மக்கள் ஏன் தனது சொந்த தமிழ் இனமும்தான் என்பது காசியானந்த்தனுக்கு புரியவில்லையோ
புலிகளோ சிறிலங்காவின் படைகளோ கொலைகளுக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்த அருகதையற்றவர்கள் என்பதுதான் உண்மை
velli
!ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள்!
குடுக்க (…….) ஆசைதான்…முடியலை….
Nor
முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தடை
பயங்கரவாத அமைப்பென்று ஐநா- பாதுகாப்புச்சபையின் அறிவிப்பின் பின்னர் ஜெயலலிதாவினால் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று அவருக்கு வாழ்துச்செய்தி அனுப்பும் கூட்டத்தை உருவாக்கிய சாதனை பிரபாகரனுக்கே………
Shivaji
காசி மறந்து விட்டீரோ ரெலோ அழிப்பில் 320 பேர் -மாத்தையா அழிப்பில் 285 பேர் வெரகல் தாக்குதலில் 423 பேர் கட்டுக்கட்டாக கொல்லப்படடோர் //
அவ்வளவு சிங்களப்பெடியள் இயக்கத்தில் இருந்தவையோ? சொல்லவே இல்லியே?
/அனுராதபுரத்தில் புலேந்த்திரன் தலைமையில் தெருக்களில் சிங்கள மக்களை வெட்டியும் சுட்டும் கொண்றது பின்னர் மட்டக்களப்பில் காலாகாலமாக வாழ்ந்த்துவந்த சிங்களமே பேசத்தெரியாத தமிழ் பேசும் சிங்களவர்களை சித்தா தலைமையில் இரவோடு இரவாக படுகொலை செய்தது யார் எண்று காசியானந்த்தனுக்குத் தெரியாதுதானே.ஃ
புலிகள் கொத்துக் கொத்தாய் கொலை செய்தது சிங்கள மக்களை மட்டுமல்ல இஸ்லாமிய மக்கள் ஏன் தனது சொந்த தமிழ் இனமும்தான் என்பது காசியானந்த்தனுக்கு புரியவில்லையோ-//
அப்ப மத்த இயக்கங்களெல்லாம் சொந்த ஆக்களைக் கூறுபோடவில்லையோ? நீர் கோவிந்தனின் புதியதோர் உலகம் வாசியும். பிழையை புலியில் மட்டும் போட்டு வெறுப்பெத்தாதையும் காணும்.-
கடாசு
காசி மறந்து விட்டீரோ ரெலோ அழிப்பில் 320 பேர் -மாத்தையா அழிப்பில் 285 பேர் வெரகல் தாக்குதலில் 423 பேர் கட்டுக்கட்டாக கொல்லப்படடோர் //sangu
அவ்வளவு சிங்களப்பெடியள் இயக்கத்தில் இருந்தவையோ? சொல்லவே இல்லியே?//shivaji
shivaji தாங்கமுடியல்ல உங்க ளொள்ளு. சும்மா நிண்ட பாட்டுக்கு கடாசி விட்டிருக்கிறியள்.
padamman
மட்டு மாமங்க பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இவருடைய குடிசை வீடு மிகவும் கஸ்டம் பின்பு பல போராட்டங்கள் ஜெயில் தேர்தலில் வீட்டு சின்னம் அதன்பின் சன்னதி முருகன் கோயிலில் திருமனம் பின்பு இடபெயர்வு தமிழ் நாட்டில் இத்தனை வருடங்கள் எப்படி? எல்லாம் புலிகளின் பணம் புலிகளின் பணத்தில் இருப்பவர் எப்படி கதைப்பர் என்பது எங்களுக்கு தெரியும் என்ன செய்வது அவரின் நன்றி விசுவாசம்.
msri
72-ல்>துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லையென மேடைகளில் “காசி அண்ணா” (அனறைய உணர்ச்சிக்கவிஞர்) சொல்ல> தம்பிமார் எதிரிக்கும் நண்பனுக்கும் வித்தியாசம் தெரியாமல் நிணடவன் போனவன் எல்லாரையும் சுட்டனர்! தம்பி பிரபாவும் இந்த கொச்சை வேலையையே செய்தார்! தம்பியை கொச்சையாக்கிய> காசி அண்ணா> இனறு அவரை கொச்சப்படுத்த வேணடாம் என்கின்றார்!
murugan
அப்ப மத்த இயக்கங்களெல்லாம் சொந்த ஆக்களைக் கூறுபோடவில்லையோ? நீர் கோவிந்தனின் புதியதோர் உலகம் வாசியும். பிழையை புலியில் மட்டும் போட்டு வெறுப்பெத்தாதையும் காணும்.-“–shivaji
அப்ப மத்த இயக்கங்களெல்லாம் கொலை செய்தபடியால் புலியும் தன் பங்கிற்கு கொலை செய்யலாமோ?
அமெரிக்கா ஆப்கானில் குண்டு போட்டால் மகிந்தவும் வன்னியில் குண்டு போடலாமோ?
chandran.raja
காசியண்ணை உங்கள் கவிதை பிரமாதம். உணர்வுள்ள தமிழ்மக்களை உசுப்பேத்தி விட்டது என்னவோ உண்மை தான். நீங்கள் உசுப்பேத்திப் போட்டு நீங்கள் மாறி விட்டீறீர்கள். நாங்கள் பரிதவிக்கிறோம். “பதறியன் காரியம் சிதறும்” உணர்ச்சி வசப்படுபவனின் கதியும் இதே கதி தான். பேரினவாதம் என்று சொல்லி போராடி நாம் எல்லாவற்றையுமம் இழந்துவிட்டோம். இக்கட்டான நிலையில் தமிழ்இனம் தள்ளப்பட்டுவிட்டது.
நவீனஉலகத்தில்லிருக்கூடிய எல்லாவசதி வாய்புகளையும் இழந்து ஒரு இளம் சமூகத்தையும் இழந்து விட்டோம்.நாங்கள் விரும்புவது அதாவது தமிழ்மக்கள் விரும்புவது ஒரு சாதாரணமனிதனுக்கு உரிய சாதாரணவாழ்வே! நீங்கள் செய்யவேண்டியது இந்தியாவில் இருக்கும் தொப்புள்கொடி உறவுகளுக்கு சொல்லவேண்டியது தனிஈழம் தனிநாடு தமிழ்இனம் ஒருமகத்தான இனம் என்ற யதார்தத்தற்கு ஒவ்வாத நிலைமைகளை விடுத்து.. கூடிவாழ்தால் கோடி நன்மை விட்டுக்கொடுத்து வாழ்தல் என்பதும் உயரிய வாழ்வே! இதைஉங்கள் பயன்யுள்ள முதுகல்வியாக எடுத்துக்கொள்ளுங்கள் இது உணர்சிச்சிக் கவிதைதைகளை விட தமிழ்மக்களுக்கு பயன்உடையது மேன்மையானது.
கடைசிகாலத்தில் உண்மையை ஒப்புக்கொள்வது “ஒம்” என்ற உச்சரிப்பை ஏற்றுக்கொள்வதும் பல்லாண்டுகாலம் தொடர்ந்து வருவதுமான இந்து மதத்தின் மனிதசஞ்சாரத்தின் சூக்குமங்களை ஒத்துக்கொள்வதற்கு சமனதாலாகும்.
BC
இவர் தமிழர்களை உசுப்பேத்தி அவர்கள் வாழ்வை பாழ்படுத்தியவர்களில் முக்கியமான ஒருவர்.தமிழ்நாட்டில் இப்படியான பேச்சுக்கள் நன்றாக எடுபடும்.
kalahthar
சிங்களவர்க்கு ……. அவங்கழுடன் கூடிவாழுங்கோ, யார் வேன்டாம் எண்டது. உங்களையெல்லாம் எந்த வகை பிரானிகளில் சேர்ப்பது, ஒன்றில் தமிழனா கதயுங்கள், அல்லது சிங்களவனா மாறுங்கள்.
நண்பன்
//kalahthar on May 5, 2009 2:23 pm சிங்களவர்க்கு ……. அவங்கழுடன் கூடிவாழுங்கோ, யார் வேன்டாம் எண்டது. உங்களையெல்லாம் எந்த வகை பிரானிகளில் சேர்ப்பது, ஒன்றில் தமிழனா கதயுங்கள், அல்லது சிங்களவனா மாறுங்கள்.//
மனிதரும் பிராணி வர்க்கம்தான். அதனாலதானே புலிக் கொடியோட திரியிறம். மனுசர் எண்டு தமிழரை சொல்லாமல் புலி எண்டில்ல மனிசரையும் சொல்ல வச்சிட்டியள்.
வந்த நாடுகளில அரை குறை வெள்ளைகளாக இருக்கிறதை விட, சொந்த நாட்டில சிங்களவனோட சேர்ந்து வாழுறதில என்ன பிரச்சனை? இங்கேயும்தான் ஒடுக்கப்படுறம். அதுக்காக வாய் பொத்திக் கொண்டு இல்லையே? அங்க தமிழன் சிங்களவனுக்கிட்ட அடிமைப்பட்டதுக்கு, சிங்களவன் பொறுப்பில்ல.
இப்ப சேர்ந்து வாழ வழி பார்ப்பம். இனி தனியா தமிழரோட சேருறதுக்கு புத்தி ஜீவகளும் இல்ல. புத்தியில்லா ஜீவிகளும் இல்ல.
புலிகளோட இருந்தவங்களுக்கு உதவ சிங்களவன் முனைகிறான்.
தமிழனோ புலித் தலைமையை மட்டும் காப்பாத்த தெருவில நிக்குது.
கடாசு
kalahthar கவனம்.. பார்த்து கதையுங்கோ. டக்கெண்டு உணர்ச்சி வசப்படாதேங்கோ . நடேசண்ணா சுரேன்ணண்ணா எல்லாம் யாரோட கூடி வாழுறாங்கள் என்றதை மறந்து சும்மா கடாசிறீயங்கள்.
chandran.raja
உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் ஏதோ ஒரு காரணத்தால் குடியேறி அந்த நாடுகளின் பாஷைகளையும் கலாச்சாரங்களையும் சட்டதிட்டங்களையும் கற்று தேர்ந்து பழகிவிட்ட தமிழனுக்கு.. ஒட்டுண்ணி வாழ்கை நடத்தாது பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்கிற சுயநலமற்ற இனம் சிங்களத்தில்லுள்ள அதாவது இலங்கையில்லுள்ள சிங்கள இனமே அந்த இனத்திடம் கூட்டுவாழ்கை வாழமுடியவில்லை என்றால் அதுஅந்த இனத்தின் குறைபாடாக இருக்க வேண்டிதில்லை. எம்மினத்தின் குறைபாடாகவும் இருக்கலாம் இதற்கு கடைசி உதாரணம் புலிகள்.
தனது இனத்தின் பெருமையை வாய் கிழியக்கத்திக் கொண்டிருப்பவனே இனவெறியனாகவும் மாறக்கூடும். ஒரு அரசியல் விபரீதமாக மாறும் பொழுது பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் அரசியல் தலைவர்களே ஒழிய அந்தநாட்டின் அப்பாவிமக்கள் அல்ல.கடந்துவந்த துன்பமான வரலாற்றுக்கு சிங்களத் தலைமைகளுக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அதேயளவு பங்கு தமிழ்அரசியல் தலைமைகளுக்கும் உண்டு.
அரசியலை அரசியலாலேயே சந்தித்து சவால்விட்டு வெற்றிகரமாக கொண்டு செல்வதே அரசியல்லாகும். அப்பாவிமக்களை பலிகொடுத்து குறுக்கு வழியால் அரசியலை நாடநினைப்பதுவும் தூண்டிவிட எண்னுவதும் அரசியல் அல்ல மாறாக பயங்கரவாதமே!.
Kumaran
…ஒட்டுண்ணி வாழ்கை நடத்தாது பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்கிற சுயநலமற்ற இனம் சிங்களத்தில்லுள்ள அதாவது இலங்கையில்லுள்ள ..
yes.you are right chandran.raja.thank you for your observation about Singalees.tamil should learn more from Singalees.but I did not suport to genocide(both) parties.
பார்த்திபன்
//புலிகளோட இருந்தவங்களுக்கு உதவ சிங்களவன் முனைகிறான்.
தமிழனோ புலித் தலைமையை மட்டும் காப்பாத்த தெருவில நிக்குது.- நண்பன்//
முற்றிலும் உண்மை. அதனால் தான் இவர்கள் புலம் பெயந்தவர்களாக அல்லாமல், புலன் பெயர்ந்தவர்களாக இன்று இருக்கின்றார்கள்.
Thambiah Sabarutnam
இதுவரை அதிகளவில் தமிழரை கொன்று குவித்தது புலிதான். அதிகமான புலியை கொன்றதும் பிரபாகரன்தான். தமிழருக்கு கிடைத்த அரசியல் உரிமைகளையும் இல்லாமல் செய்து இன்று உலக அரங்கில் ஒருத்தருமே தமிழருக்கு உண்மையாக ஆதரவு வழங்காத நிலவரத்தை உருவாக்கியதும் புலிகளே பிள்ளை பிடிகார பிரபா கூட்டத்திலிருந்து குமர் பிள்ளைகளை காப்பாற்றும் அரச படைகள் போற்ற பட வேண்டியவர்கள்.
வெறும் புலி புதினங்களையும் புலி இன்டர்நெட் செய்திகளையும் விழுங்காது எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண பழகுங்கள். உண்மையை தேடுங்கள். முப்பது வருசமாக புலி சாதித்து இன்று தமிழருக்கு மிஞ்சி இருப்பது என்ன? மண்டையில்போட்டோ காசுகுடுத்தோ ஈழம் வாங்க முடியாது. இது குருட்டுதனம் பிரபாவுக்கும் விளங்கவில்லை. அவருக்கு நாலு காசு கொடுத்துவிட்டு அவரின் கலண்டரை வைத்திருக்கும் அறிவுப் பூச்சியங்களுக்கும் விளங்கவில்லை
ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்களை ஒரு இரவில் காசு நகை எல்லாம் பறித்து அநாதவராக அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து பிரபாகரன் கலைத்த போது ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இன சுத்திகரிப்புக்கு எதிராக சொல்லவில்லை
ஆனால் இன்று அகதிகளான தமிழ் பேசும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் உதவி செய்கிறார்கள்.
பிரபாகரனின் தமிழ் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஆமா போடா மட்டும் வாயை திறந்தவர்கள் மக்கள். எங்கு போவது என்றாலும் பிணைவைத்து பாஸ்எடுத்து தான் நடமாட முடிந்த சுதந்திரத்தைதான் பிரபாகரன் கொடுத்திருந்தார். இத்தகைய பிரபாகரனை காப்பாத்த புலன் பெயர்ந்த தமிழர் வீ வோன்ட் தமிழ் ஈழம் அவர் லீடர் பிரபாகரன் என்று தெரு தெருவாக ஊளை இட்டு திரிகிறார்கள்.
பிரபாகரன் கடத்தின அத்தனை எங்கள் பிள்ளைகளையும் புதை குழிக்குள் அனுப்பி விட்டு புலன்பெயர்ந்தவர்களின் பிழைப்பில் வாங்கிய சாம்செவனை எல்லாம் மண்ணிற்குள் தாட்டுவிட்டு மதிவதனியையும் மகளையும் பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு “முடிந்தால் கிளிநொச்சியை ராணுவம் பிடித்து காட்டட்டும்” என்றெல்லாம் பீலா பிலிம் காட்டிவிட்டு இந்த அரசியல் ராணுவ சூனியம் கையில் வைத்திருக்கின்ற ஒரே திட்டம் கடைசியாக கையை விரித்து யுத்த நிறுத்தம் அறிவித்து தன் உயிரை காப்பாத்த சரண் அடைவதே.
Suresh
TLLE terrorist has carried out many suicide attack against innocent civilion of tamil,sinhalese and muslims in Sri lanka. Its leader Prabkaran must be tried at the International Criminal Court for all his crimes against humanity.
Thambiah Sabarutnam
1977 ம் ஆண்டு யூலை மாதம் 21ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே த.வி.கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் ஒரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67%மக்களின் ஆதரவு பெறவேண்டியது கட்டாயமானதென்பதே சர்வதேச நியதியாகும்.