உண்ணாவிரதம் வெற்றி பெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறையருகே இருந்திருப்பேன் – கருணாநிதி

20-karunanithi.jpg இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது நானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினைக்காக ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதம்:

தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்றுதான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை.

உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • msri
    msri

    கலைஞருக்கு பின்நவீனத்துவமும் தெரியும் போல கிடக்கு> கட்டுடைக்கின்றார்!

    Reply
  • கடாசு
    கடாசு

    கருணாநிதிக்கு திலீபனின் கடைசிக் கால பரிதாபக் கதைகள் தெரியாததால்….

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “நியாயவாதிகள் பின்நவீனத்துவ காலத்தில், வேலைக்கு ஆகாதவர்கள் என்று நிரூபனமான ஒன்று”. கலைஞர் கருணாநிதி ஒரு நியாயவாதி அல்ல, ஒரு “மக்கியாவிள்(லன்)ளி, சாணக்கியன் என்று அனைவரும் அறிந்த ஒன்று. அவர் வாயாலேயே கூறிய மாதிரி அவர், “வழிகாட்டியல்ல, விதிவிலக்கு” (நுணுக்கமான நடைமுறைகளை இட்டு அடுக்கியது- இலங்கைத் தமிழர் நடக்கும் பாதைப் போல). நியாயவாதிகள் தோல்வி அடைந்தால், அனுதாபத்தின் மறைவில் திருத்திக்கொள்ளலாம், நடைமுறைவாதிகள் தோல்வியடைந்தால், பாதையை மாற்றுவதில் பெரும் சிக்கல் இருக்கும். கலைஞர் கருணாநிதி, விடாப்பிடியாக இலங்கைத் தமிழரின் அனுதாபத்தைப் பெற துடிப்பது, நிச்சயமாக தமிழகத்து வாக்காளர் ஆதரவைப் பெற அல்ல!. நீண்டநெடிய அவரது அரசியல் பாதை நடைமுறை வெற்றிகளின் “அடுத்த நகர்வு அது”- அதிலிருந்து அவரால் வெளியேர எத்தனிப்பது, அவரின் “ஓரியண்டேஷனை” பாதித்து தலை சுற்ற வைக்கும். ஏன் இவரின் இந்த நிலைப்பாட்டை ஈழத்தமிழர்கள், ஆதரிப்பதை, மறுக்க தொடங்கியிருக்கிறார்கள் என்றால், இது ஒரு,வருங்காலத்தில் பல விஷயங்களை அவதானிக்கக் கூடிய சிக்கலான கேள்வி.

    Reply