புத்தாண்டில் அமெரிக்காவில் 15 பேரை பலியெடுத்த பயங்கரவாத தாக்குதல் – குற்றவாளியாக அமெரிக்க இராணுவவீரர் !

புத்தாண்டில் அமெரிக்காவில் 15 பேரை பலியெடுத்த பயங்கரவாத தாக்குதல் – குற்றவாளியாக அமெரிக்க இராணுவவீரர் !

நியுஓர்லியன்சில் டிரக்கை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதி 15 பேரை கொலை செய்த சம்சுட் டின் ஜபார் என்பவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்களாக பணிபுரிந்தவர் எனவும் அவர்  ஆப்கானிலும் பணிபுரிந்தவர் எனவும் கார்டியன் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள்  நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்ட நபர் யார் என்பதை  வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிகாரிகளும் நியுஓர்லன்ஸ் அதிகாரிகளும் ஜபார் தனியாக செயற்படவில்லை என கருதுவதாகவும் அவரின் சகாக்களை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜபாரின் டிரக்கில் ஐஎஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என எஃப்.பி. ஐ தெரிவித்துள்ளது.

ஜபார் 2007 முதல் 2015 சம்சுட் – தின் – ஜபார் அமெரிக்க இராணுவத்தின் மனிதவள பிரிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தவர் எனவும் இதன் பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிவில் இணைந்து 2020வரை தகவல்தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியிருந்தவர் எனவும் சேவைகால இறுதியில் சார்ஜன்டாக பதவி வகித்தார் எனவும் அறிய முடிகிறது.  ஜோர்ஜியா மாநில பல்கலைகழகத்தில் 2015 முதல் 2017 வரை கல்விகற்ற ஜபார் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 21ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் வைத்தியர் ஒருவர் காரைச் செலுத்தி தாக்குதலை ஏற்படுத்தியதில் ஐவர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *