ஈழத் தமிழர்களுக்கோர் கலங்கரை விளக்காகத் தென்படத் தொடங்கியுள்ள உங்களை உலகத் தமிழ் மக்கள் எல்லோரும் ஓர் தாயுள்ளம் கொண்ட தமிழினத்தின் தலைவியாகவே பார்க்கின்றோம். இவ்வாறு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு டென்மார்க சைவ தமிழ் பண்பாட்டு பேரவையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பார்த்திபன்
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமல்ல தாமும் கோமாளிகள் தான் என்பதை டென்மார்க சைவ தமிழ் பண்பாட்டு பேரவையினரும் ஒத்துக் கொள்ளுகினம் போல.
sangu
நல்ல சேவை செய்யுறியள் உங்கள் சேவை தொடரட்டும்.
பார்த்திபன்
எனி உவையும் இதுதான் சாட்டென்று டென்மார்க்கில் பிழைப்பிற்காக “ஜெயலலிதாம்பிகா” என்றொரு அம்மனையும் உருவாக்கினாலும் உருவாக்குவார்கள்.
thurai
இந்த வாழ்த்துக்கள் தலைவியை போய் சேர்ந்திருக்கும். முதலமைச்சராக வந்தவுடன் டென்மார்க் தமிழீழ கோமாளிகள் தாங்கள் புலிகளல்ல ஈழ்ததமிழரெனக் கூறிக்கொண்டு மாலை சூட்ட வரிசையில் நிற்பார்கள்.
இவர்கள் டென்மார்க சைவ தமிழ் பண்பாட்டு பேரவையினராக இருப்பதால் புலிக்கொடியை விட்டு விட்டு பசுக்கொடியுடந்தான் தமிழகம் போவார்கள்.
துரை
பூனை
ஈழத்தை படையெடுத்து போய் வாங்கித்தருவேன் என்று சொன்ன ஈழத்தாய்க்கு கொலைமிரட்டலாம்.
வேறு யாரும் ஈழம் வாங்கித்த்ருவது பற்றியே பேசக்கூடாது என்று போட்டுத்தள்ளிய புலிகள் இருக்கும் வரைக்கும் வேறு யார் பேசினாலும் இதே கதிதான்.
nada
கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா பேசிய பேச்சுக்களில் சிலது இங்குள்ளது..
புலிகள் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல — Jan 17
http://thesamnet.co.uk/?p=6513
விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் –Oct 24
http://thesamnet.co.uk/?p=3662
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு விவகாரங்களில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படும் — Oct 17
http://thesamnet.co.uk/?p=3432
இவற்றையும் ஜெயலலிதா தற்போது பேசுபவைகளையும் சேர்த்து தப்பாகப் பார்க்க வேண்டாம். அவர் சொல்வதை செய்து காட்டக் கூடும். அதாவது தனி ஈழம் அமைக்கக் கூடும். ஆனால் தலைமைத்துவத்தை யார் கையில் கொடுக்கப் போறேன் என்றோ.. எவ்வாறு தலைமைத்தவம் தீர்மானிக்கப்படும் என்றோ யாரும் கதைக்கவில்லை. அந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாது தற்போது படபடக்கும் சுளகுகள் இவை. கொஞ்ச காலம் போக ஜெயலலிதா சொல்வா “நான் தமிழரர்க்கு தனிஈழம் பற்றித்தான் கதைத்தேன்- புலிகளைப்பற்றி எங்கு கதைத்தேன் என்று கூற அதன்பின்தான் புலிகளுக்கும் புலியாதரவுகளுக்கும் நிலைமை புரியும்.
msri
நாளை வடிவேலுவும் காங்கிரசிற்கு எதிராக> பிரச்சாரம் செய்யப் புறப்படுகின்றார்! அவருக்கும் டெனமார்க் சைவ் த.ப. கழகம் ஓர் பட்டம் கொடுக்காலாமே!