இலங்கைக்கு இந்திய ஆயுதம் சென்றால் தடுப்போம் : வைகோ

 vaiko00001.jpg“இந்தி யாவில் இருந்து தமிழினத்தை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் கொண்டு சென்றால் அதனை மதிமுக தடுத்து நிறுத்தும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தஞ்சை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து வல்லம் அண்ணா சிலை அருகே வைகோ பேசுகையில்,

“ஜெயலலிதா பிரதமராவதற்கு முழுமையான தகுதி பெற்றவர். அந்தப் பதவி மீது அவர் ஆசைப்படாமல் இருக்கலாம். ஈரோட்டில் பேசிய ஜெயலலிதா, இலங்கையில் தனித் தமிழீழம் அமைக்கப் பாடுபடுவேன் என்றார். பின்னர் இந்திய இராணுவத்தை அனுப்பி தனித் தமிழீழத்தை நிர்மாணிப்பேன் என்றார். அவர் இப்படிப் பேசியதால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நான் கூறவில்லை. அதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் ஜெயலலிதா தான் பிரதமராகத் தகுதியானவர் என்று கூறினேன்.

உலகத் தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் பிரகடனம் இருளின் மத்தியில் வெளிச்சம் ஏற்பட்டதைப்போல் உள்ளது. இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக செய்தி வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதன் மூலம், இலங்கை அரசுடன் இணைந்து காங்கிரசும் படுகொலையை நடத்துகிறது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

பிரபாகரனை அழிப்பதற்காக ஆயுதம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் கோவையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதை பெரியார் தி.கவினரும் மதிமுகவினரும் தான் செய்தனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இலங்கை படுகொலைத் துயரங்களைக் குறுந்தகடாக வெளியிடக்கூடாது என்றும், துண்டு பிரசுரங்களாக கொடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது என்ன ஹிட்லர் நாடா?

குறுந்தகடு, துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதைப் பொலிஸார் தடுக்கலாம். அதனால் அதனை வீடு, வீடாக காலை 5.00 மணிக்குள் கொடுங்கள். பொலிஸாரும் அந்த குறுந்தகடை வாங்கிப் போட்டு பார்க்கட்டும். அப்போதுதான் இலங்கைத் தமிழர்களின் நிலை புரியும். இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக இந்தியாவில் இருந்து ஆயுதம் கொண்டு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும். அதற்கு என் முழு ஆதரவு உண்டு” என அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வைகோ போன்றவர்கள் புலிகளின் பாசிசத்தை தமிழ் நாட்டிலும் பரப்பி அரசியல் இலாபம் அடையத் துடிக்கின்றார்கள். இதனை ஒவ்வொரு தமிழ் நாட்டுத் தமிழர்களும் புரிந்து கொண்டு இவர்களை அரசியலிலிருந்தே ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.

    Reply