பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று இன்று திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.
palli
இன்று இலங்கை வருகை என்பார்கள். இன்று இலங்கையில் இருந்து லண்டன் திரும்புகிறார்கள் என எழுதுவார்கள். இடையில் எதுவும் செயல்பட்டதாக தெரியவில்லை. இவர்கள் கேக்கவில்லையா? அல்லது இலங்கை அரசு செவிமடுக்க வில்லையா என்பது பாப்பையாவின் பட்டிமன்றத்தில்தான் முடிவாக வேண்டும் போல் உள்ளது.
பார்த்திபன்
பல்லி, ஒருவேளை இவர்கள் பிரித்தானிய அரசிற்கு பங்கர் தலைவர் வழங்கும் “நாட்டுப்பற்றாளர்” விருதை பெற்றுச் செல்ல வந்திருப்பார்கள்.
jimmy
அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை. லொண்டனில இருக்கிற அகதிகள் தொகையை தொல்லையை கொஞ்சம் குறைக்கிறதுக்கு டீல் போட்டிருப்பாங்கள்.