தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னபோர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. அப்போது அவர் கூறுகையில்; திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத்துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.
இந்த தேர்தல் பிரசாரத்தில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உட்பட ஏராளமான இணை,துணை உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் திங்கட்கிழமை எங்களது பிரசார பயணத்தை தொடங்குகிறோம்.
உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைத் தட்டிக்கேட்கவும் தோள் கொடுக்கவும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம்.தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம் .விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவுதரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்கமுடியாது.
தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விடமோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11 ஆம் திகதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்டவேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார்.
palli
இதுதான் சொல்லுறது இயக்குனர் எல்லாம் அரசியல் பேச கூடது என. ஜயா நாம் அனுபவத்தில் சொல்லுகிறோம். அடக்கி வாசியுங்கோ. இல்லாவிட்டால் எம்மை போல் தாங்களும் அகதியாக நாடுநாடாய் திரிய வேண்டும். உங்கள் வன்முறை சினிமாவுடன் நிற்ப்பது அனைத்து தமிழருக்கும் நல்லது. தாங்கள் இதுவரை ஈழ அகதிகளுக்கு(இந்தியாவில்) செய்த நலன் நாம் அறிவோம். ஆகவே தாங்கள் ஏதோ ஒரு காரனத்துக்கு அரசுடன் முட்டி மோதி அந்த அகதிகளின் ஒரு நேர சாப்பாட்டிலும் விஸத்தை கலந்து விட வேண்டாமே. தாங்கள் சினிமாவில் வில்லனாக நடித்ததையே உங்க பிரபாகரன் விரும்பவில்லையென தாங்கள் ஒரு பத்திரிகையில் சொல்லியது பல்லிக்கு நினைவு உள்ளது. ஆகவே இப்படி நிஜத்தில் வில்லனாய் மாறுவது நியாயமா?? தர்மமா? அல்லது தமிழகம் தான் தாங்குமா???
நண்பன்
பாராதிராஜா, பிரபாகரனை பார்த்ததன் விளைவு. நன்றிக் கடன். அதற்காக பாரதிராஜா செய்வது ஓவர் அக்ட். சொன்னா புரியாது. பட்டாத்தான் புரியும். இவர்களது ஆதரவு இல்லாமல் ராஜீவ் கொலை ஒன்றுதான் விழுந்தது. இனி பல விழும். வன்னி போரின் இறுதி நேரம் இது. முடிவு இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம் அங்குள்ளவர்களுக்கு நிலவரம் தெரியும். தமிழ்நாட்டிலும் புலத்திலும் பெரும் தாக்கம் ஒன்று ஏற்படும். அது தமிழரின் மாபெரும் அழிவுக்கு நிச்சயம் வித்திடும்.காரணம் இவர்கள் உண்மை அறியாதவர்கள். உணர்ச்சிகளால் உந்தப்பட்டவர்கள்.
thurai
தமிழ் உணர்வாளர்களே உங்கள் உள்ளத்தை தொட்டு கேளுங்கள்.
தமிழனாகப் பிறந்த யாவரையும் நீங்கள் தமிழராக மதிக்கிறீர்களா?
ஒவ்வொரு தமிழனின் துயரிலும் அக்கறையுடையவரா?
தமிழனையே மனிதனாக மதிக்காமல் நடக்கும் யாரையாவது
பார்த்து ஏன் என்று கேட்டீர்களா?
தமிழனென்ற உணர்ச்சியைக் கிளப்பி கோடீஸ்வரராக பலர் வந்துவிட்டார்கள். இனிமேலும் மக்களை ஏமாற்ரமுடியாது.
மக்களை பலிக்கடாக்களாக்கவே மட்டுமே முடியும்.
துரை
பார்த்திபன்
ஆமா “உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைத் தட்டிக்கேட்கவும் தோள் கொடுக்கவும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம்” என்று கூறும் பாராதிராஜா, முன்பு பக்கத்து மாநிலம் கர்நாடகத்தில் தமிழ் நாட்டுத் தமிழர்களை அடித்து விரட்டிய போது எங்கு போய் ஒளித்துக் கொண்டார். அப்போ எங்கு போனது இவரது வீரம். வீரவசனங்களை மட்டும் அப்பப்போ எடுத்துவிட இது ஒன்றும் திரைப்படங்கள் இல்லை.
புளியந்தீவான்
ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே! அட பாரதிராசா பாரதிராசா!!¨
//உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைத் தட்டிக்கேட்கவும் தோள் கொடுக்கவும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம்// இயக்குநர் பாரதிராசா.
//உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது நானும் இருந்திருப்பேன்// வாழ்நாள் சாதனையாளரரும் இயக்குனரும் சிறந்த நடிகருமான பெரியவர் ஐயா கருணாநிதி.
//பங்களாதேசுக்கு இந்திரா காந்தி படை அனுப்பிய தர்மத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நான் படை அனுப்பி ஈழம் அமைப்பேன்!// மீண்டும் வலியுறுத்துகின்றார் ஜெயலலிதா இவர் முன்நாள் நடிகை.
ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே! அட என்னமோ நடக்குது……..
போற போக்கப்பாத்தா தமிழ்நாட்ல இருந்து கொஞ்சப்பேர் அசில்அடிக்க ஐரோப்பாவ நோக்கி வரப்போறானுகள் போல இரிக்கி. ஏதோ வந்த காக்கா இருந்த காக்காய தெரத்தாம இருந்தா சரி.
புளியந்தீவான்
நண்பன்
ஜெயலலிதா தமிழ் நாட்டை இதுதான்டா தமிழீழம் வந்து இருங்கடா என்று சொன்னாலும் சொல்லி போயஸ் கார்டனுக்குள் போவார் போல இருக்கு.
msri
காஙகிரசு தமிழ்மக்கள எதிரி! கலைஞர் சூழ்நிலைக் கைதி! இதுவே நடிகர் சங்கத்தின் தேர்தல் பிரச்சார தலைப்பு! அதுவும் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளல் பிரச்சாரம் இல்லை! காங்கிரசு போட்டியிடும் தொகுதிகளில மட்டுமே! இதை கலைஞரும் உள்ஊர விரும்புகின்றார்! போலுள்ளது!
msri
நல்லவேளை துரோகிகளின் பட்டியலில் இருந்து (தனிஈழத்தடன்) செல்வி தப்பிவிட்டார்! சோ-சுப்பிரமணியசவாமி இந்து ராம் பொன்றவர்களின் நிலையென்ன? தமிழகத்தை விட்டு துரத்தப்படுவார்களா?