இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சட்டம் பிள்ளை
வணங்கா மண்ணின் அடுத்த கட்டமா?
மாயா
புலிகள் பதுக்கி வைத்துள்ள உணவே பல வருடத்துக்கு சாப்பிட போதுமானதே?
accu
இங்கிலாந்தில் வணங்காமண் சுருட்டி முடிந்தாயிற்று. அடுத்தென்ன அமெரிக்காவில் அடங்காவிண் என்ற பெயரில் சுருட்டத்தொடங்க வேண்டியதுதானே!
வன்னிமக்களின் நலனில் இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஒரு படித்த கோணங்கிக்கும் புலிகளிடம் கடைசி குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்களையாவது வெளியேறவிடுங்கள் என்று கோரிக்கை விடுமளவு குறைந்தளவான மனிதநேயமும் காணமுடியவில்லை. உங்கள் கல்வித் தகமைகளை தூக்கிக் குப்பையில் போடுங்கள். உங்களை எண்ணி வெட்கப்படுகிறோம்.
chandran.raja
வன்னிமக்களுக்கு உணவு கிடைப்பதிலோ கொடுப்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அது புலிகளின் கைக்கு கிடைக்கும்மாக இருந்தால் மக்கள் வயிற்றுக்கு போய்சேராது. போவதாகயிருந்தாலும் ஆனைவிலை குதிரைவிலை பவுண்விலையே!
வானத்தில்லிருந்து போடுவதாக இருந்தால் அதுமக்களின் வயிற்றுக்கு பசியைத் தீர்பதாக இருந்தால் புலி-அகோரிகளுக்கு நடவடிக்கைகளை கருதி சமைத்தஉணவே (விரைவில் பழுதடையக்கூடியது) சிறந்தது. இதுவே அகோரிகளின் கையில் இருந்து தப்புவதற்கான வழி. இதெல்லாம் சாத்தியமா ?.
மாயா
குண்டைத் தவிர வேற எதுவும் மேல இருந்து அங்கு போட முடியாது. மகிந்த இராணுவ பிரதேசத்துக்கு வாங்கோ எண்டு வானத்திலிருந்து போட்ட லவ் லெட்டர்கள் கூட காற்றிலதான் பறந்ததாம். தாழப் பறந்தால் விமானம் திரும்பி கட்டுநாயக்கா திரும்பாதாம்.
அடங்காவிண் ( நல்ல பேர்) மேலயிருந்து சாப்பாடு போட கீழ இருக்கிற சனம் அதிலயும் அமுங்கு பட்டு செத்துப் போகும். முடிஞ்சா தலைவர் மேல போடுங்கோ. அவர் பிடிச்சு அடுத்தவங்களுக்கு குடுத்திடுவார்.