தமிழ் மக்களின் எதிர்கால நலன்களுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமே தவிர பிரபாகரனைப் பாதுகாக்க முயற்சித்தால் அந்த முயற்சி வெரும் பகற்கனவாகவே அமையுமென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்படும் மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமானதாக்க சகல சர்வதேச நாடுகளும் உதவுவதுடன் யுத்தத்தினால் அழிந்து போயுள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-சர்வதேச சமூகம் யுத்த நிறுத்தமொன்றைக் கோருகிறது. பிரிட்டிஷ், அமெரிக்க படைகள் ஈராக்கில் யுத்தம் புரிந்த போதும் ஆப்கானிஸ்தானில் படைகள் போராடிய போதும் சர்வதேச சமூகம் அது மனிதாபிமான நடவடிக்கை என்கிறது. அப்படியானால் இன்று வன்னியில் மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையே நடைபெறுகிறது.
பிரபாகரனிடமிருந்து எஞ்சிய மக்களையும் மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை இடம்பெறுகிறது. இந்த இராணுவ நடவடிக்கை மிகவும் தேவையானது. இதை உணராது சர்வதேச சமூகம் யுத்த நிறுத்தம் கோருவது தவறானது எனெவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
palli
உங்கள் இறுதி காலம் மகிந்தாவுடன் தான் என முடிவு பண்ணியாச்சா. லணடன் காரன் அன்று சுகந்திரம் கொடுப்பதில் தவறு விட்டான். அதே லண்டன் காரன் உம்மை விடுதலை செய்து மீண்டும் தமிழருக்கு தவறு செய்து விட்டனர்.
மாயா
ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு மூன்றாவது தரப்பு ஒன்றின் மூலம் பிரபாகரன் மற்றும் குழுவினர் சரணடைய தயாராக இருப்பதாக கேபீ எனப்படும் குமரன் பத்மநாதன் மூலம் திரை மறைவு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.
இது குறித்த மின் அஞ்சல் ஒன்று பாதுகாப்புத் துறையிடம் சிக்கியுள்ளது. நோர்வே போன்ற ஒரு நாட்டினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய அவர்கள் முயற்சிப்பதாகவும் , அதை அரசு ஏற்கப் போவதில்லை என முக்கிய இராணுவ பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பிசாசு
யார் எதை எதை சொல்வது என்று விவஸ்தை கெட்டு போனதுக்கு இது நல்ல உதாரணம்
ashmitha
I think MAYA is making funny gossip. PIRABAKARAN is not KARUNA.
Kullan
குழந்கைக் கடத்தல் கம்பம் கேட்டல் போன்ற கிழக்கு விடிவெள்ளிகளை நாம் இன்று பார்க்கிறோம். புலியின் வழிநடத்தல் பிழைத்தது என்னவோ உண்மைதான் ஆனால் நீங்கள் பிள்ளையான் போன்றவர்கள் எந்தவிதத்திலும் சரியானவர்கள் இல்லை. எமக்கு மக்களை உண்மையாக அர்த்தரீதியாக நேசிக்கும் தலைமை தேவை. அதை மக்கள் தீர்மானிப்பார்கள். உங்கள நினைக்கும் போது புலிகளை விட அருவெருப்பாக இருக்கிறது. என்ன மனிதர்களப்பா நீங்கள். புலிப்பணத்தில் உடம்பு வளர்த்து எதிரிக்கு உழைத்துக் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள். நீங்கள் செய்த துரோகத்துக்கு உங்கள்கு பிள்ளையான் வைத்தான் ஆப்பு. உங்கள் இருவருக்கும் எங்கள் பாணியிலேயே வாழ்வு முடியும். பொல்லெடுத்தவன் பொல்லாலும் கத்தியெடுத்தவன் கத்தியாலும் சாவான் என்பதுபோல் திருநாவுக்கரசர் சொன்னார் தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்படம் வீட்டைச் சுடும் என்பது போல்தான் எல்லாம் நடக்கும் இருந்து பார்ப்போமே