இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது: வைகோ

vaiko00001.jpgவிருது நகர் தொகுதி வேட்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தனது தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது. இந்திய அரசாங்கம் கொடுத்த ஆயுதங்களால் காங்கிரஸ் கொடுத்த ஆயுதங்களால் அங்கு தமிழர்கள் படுகொலை நடந்து வருகிறது. கலைஞர் கருணாநிதிக்கும் இது தெரியும். அவரது குடும்ப நலனுக்காக, பிள்ளைகள் நலனுக்காக தமிழர்களை காவு கொடுத்து உள்ளார்.
 
விருதுநகர் தொகுதிக்கு பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வருகிறார் என அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. வைகோ பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதில் அவர்களுக்கு அவ்வளவு அக்கறை. உங்கள் சகோதரனை பாராளுமன்றத்தில் நுழைந்து விடக்கூடாது என்பதற்கு அவ்வளவு முயற்சி. நான் விருதுநகர் தொகுதியில் உங்களது எம்.பி.யாக 2 முறை இருந்துள்ளேன்.
 
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பார். அவர் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் ஏற்படுத்துவேன் என்று அறிவித்து உள்ளார். அவருக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன். மெத்த படித்த காங்கிரஸ் மேதாவிகள் ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது என்று கூறுகின்றனர். எந்த சட்டத்தை வைத்து கிழக்கு பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கினீர்கள். அதே சட்டத்தை வைத்துதான் ஜெயலலிதாவும் ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் உருவாக்குவார். அப்போதும் இந்த வைகோவும் உடன் இருப்பார் என்றார்.

Show More
Leave a Reply to Kullan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kullan
    Kullan

    இலங்கை தமிழர்கள் சிந்தும் ரத்தம் வீண் போகாது//
    உண்மைதான் நாம் சிந்தும் இரத்தங்கள் ஜெயலலிதா அம்மையை வெல்லச்செய்யப்போகிறதே. கருணாநிதியைப்பழிவாங்க ஈழத்தமிழர் இரத்தம். எங்கள் பிணங்களில் ஜெயலலிதாவுக்கு வைகோ அரசியல் மேடை போடுகிறார். இந்திய அரசியல் இன்று ஒரு பிணவியாபாரம் தான்

    Reply
  • palli
    palli

    அது உன்மைதான் உன்மைதான்
    எப்படி வீண்போகும் அதுதான் தமிழகத்தில் கட்ச்சி வேறு பாடின்றி பயன்படுகிறதே சாமி.

    Reply
  • மாயா
    மாயா

    உரமாகும் என்கிறீரோ?

    Reply