பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், இனவாதம் குறித்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் விவாதம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் அசோக ரங்வல இதனை தெரிவித்தார்.
“ஒரு தனிநபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது.அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகவும் தெளிவானது.
இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்காக இருக்கலாம், நல்லிணக்கத்துடன் நாட்டை அபிவிருத்தி செய்ய தலையிடுவார்கள் என அனைத்து மக்களும் நம்புகின்றனர்.இது ஒரு தனி நபரால் செய்யப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும்.
அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து முகநூல் கணக்குகளையும் சரிபார்த்தோம்.நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம் என்றார்.
வடக்கு கிழக்கு மக்கள் கூட்டாக இணைந்து இனவாதமற்ற இலங்கை என்ற கருத்தியலில் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளிக்க மருத்துவ மாபியாக்களையும் – மருத்துவ சீர்கேடுகளையும் பகிரங்கப்படுத்திய ஊசி அர்ச்சுனாவையும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தான் எதற்காக தெரிவு செய்யப்பட்டோம் என்பது பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் மேலும் மேலும் தன்னை ஓர் ஒப்புயர்வற்ற நபர் என கருதி செயற்பட்டு வரும் ஊசி அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வைத்து விடுதலை புலிகள், பிரபாகரன் என்றெல்லாம் பேஸ்புக் நேரலையில் வெடித்து தள்ளுகிறார். இந்த நிலையில் அவர் மீது சி.ஐ.டியில் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரங்வல, ஊசி அர்ச்சுனாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது. அவர் முன்வைத்த பிரிவினைவாத கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகிறது. இருந்தாலும் தனது முகநூல் கணக்கில் உள்ள தொண்ணூறாயிரம் பின்தொடர்பவர்களுக்கு புதிதாக என்ன கதையை ஊசி அர்ச்சுனா அடித்து விடப்போகிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.