தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள மடல்

Wanni_War_Bombed_Safe-Zone01.05.2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்

இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை தப்பாக என்றும் நான் வழி நடத்தவில்லை. நான் ஆதாரமற்று கேள்விப்படுவனவற்றையோ, அல்லது பிறர் கூறும் அனைத்தையுமோ முற்று முழுதாக நம்புகிறவன் அல்ல.

இன்றும் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கு மேல் இருக்கின்றனர் என்று நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்ற போதும் நிச்சயமாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் நம்புகின்றேன். முன்பு ஒரு சந்தர்பத்தில் எனது எண்ணிக்கை சரியானதென நிரூபணமானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். துரதிஷ்டவசமாக விமானத்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து செல், ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்கின்றன. அவற்றை உடன் நிறுத்தி அப்பாவி பொது மக்களை காப்பாற்றுங்கள்.

நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு விடயம் யாதெனில் யுத்த நடவடிக்கைகள் பல இடம்பெயர்ந்தோரை கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அதேவேளையில் நலன்புரி நிலையங்களுக்கு தப்பி வந்துள்ளவர்களை பெரும் பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்குவதோடு அவர்களின் உறவுகள் பலர் இன்னும் வன்னியில் இருப்பதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். ஓவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கதால் அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை தங்களுக்குண்டு. நான் முன்பு தங்களுக்கு எழுதியது போல சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்.

வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் 2ம் திகதி 1100 மெற்றிக் தொன் உணவு அங்கே அனுப்பப்பட்டதன் பின் 28ம், 29ம் திகதிகளில் தினம் 30 மெற்றிக் தொன் உணவே சென்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு தினம் கிடைத்துள்ள சீனி 1000 கிலோ கிறாம் மட்டுமே. ஆகவே தயது செய்து உடன் தேவைப்படும் உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இக் கடைசி நேரத்திலும் கூட நான் கூறும் ஆலோசனை தங்களுக்கு ஏற்புடையதாயின் அதை அமுல்ப்படுத்த முயற்சியுங்கள். எனது ஆலோசனை யாதெனில் அரசுக்கு ஏற்புடையதான ஓர் சர்வதேச அமைப்பை வன்னிக்கு அனுப்பி மக்களை விடுவிக்குமாறும், ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாகவும் கூறி அனுப்பி வையுங்கள். இதற்குத் தேவையான இருவார காலக்கெடுவும் கொடுக்கலாம். பொது மக்களை வெளியில் கொண்டுவர அத்தகையதோர் ஏற்பாடு செய்யத் தவறின் முடிவில் நாட்டின் நற்பெயரை நாசம் செய்யும் ஓர் பாரிய அனர்த்தம் தேசிய ரீதியில் ஏற்படவும் கூடும்

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Rohan
    Rohan

    கறி வேப்பிலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா, ஐயா? தேவையான போது பயன்படுத்தி விட்டு வீசி எறிகிற சாமான் அது. இலங்கை அரசுக்கு உங்கள் சின்னச் சின்னத் தேவைகளை நீங்கள் தீர்த்து வைத்தீர்கள். ஆனால் அரசு உங்களுக்குச் சாத்தியது என்னவோ பெரும் பட்டை நாமம் தான்.
    தங்கள் கடிதத்துக்கு அது எழுதப்பட்ட தாளின் மதிப்புக் கூட இருக்காது என்று நான் சொல்கிறேன். இல்லை என்று சொல்ல வருவீர்களா?

    Reply
  • tax
    tax

    இவர்களுக்கு தலைமை தாங்கும் கொலைகாரன் எப்படி கொக்கரிக்கின்றார் என்று பாருங்கள் ‘ஈராக் எவ்வாறு குண்டு வீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்” என்கின்றான். ஈராக், ஆப்கானிஸ்தானில் கொலை வெறியாட்டத்தை நடத்திய போது, இதற்கு உதவி செய்தவர்கள், இன்று நாங்கள் அது போல் கொல்லும் போது ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். நீங்கள் கொல்லும் போது, நாங்கள் உங்களை ஆதரிக்கவில்லையா என்பது தான், இந்த பாசிட்டின் தர்க்கமும், அங்கலாய்ப்பும்.

    இப்படி திமிரெடுத்து வீரம் பேசும் பேரினவாத பாசிட், தமிழ் மக்களை வேண்டிய மட்டும் நாங்கள் கொல்வோம் என்று வெளிப்படையாகவே இன்று கொக்கரிக்கின்றார். இதைத்தான் நாட்டின் இறைமை, பயங்கரவாத ஒழிப்பு என்கின்றார். நீங்கள் ஈராக், ஆப்கானிஸ்தானில் எதை பயங்கரவாத ஒழிப்பு என்று கூறி மக்களை கொன்றீர்களோ, அதைத்தான் நாங்கள் செய்கின்றோம் என்கின்றார்.

    நீங்கள் செய்தது சரி என்றால், நாங்கள் செய்வதும் சரி. இதுதான் இந்த தர்க்கத்தின் அடிப்படை. இப்படி பயங்கரவாதத்தின் பெயரில், தமிழ்மக்களை கொல்லும் உரிமைதான், நாட்டின் இறைமை ஜனநாயகம் என பிரகடனம் செய்கின்றார்.

    செஞ்சிலுவைச் சங்கம் ஏற்றி இறக்கிய 15000 பேரை யார் காயப்படுத்தினர், அங்கவீனப்படுத்தினர். நீங்கள் தானே. இதையா!, உங்கள் ‘மனிதாபிமான” செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சியாக காட்டுகின்றீர்கள். உங்கள் படையினர் கொன்று குவித்ததை காட்டாத நீங்கள், பிரச்சாரத்துக்காக தயாரித்ததை மட்டும் உலகம் நம்பிவிடுமா!? பாசிட்டுகள் எப்போதும் மற்றவனை முட்டாளாக கருதி, முட்டாளாகவே எப்போதும் செயல்படுவார்கள்.

    கடந்த நூறு நாட்கள் 5000 பேரை குண்டு போட்டுக் கொன்ற நீங்கள், 15000 மக்களை காயப்படுத்திய நீங்கள், அதை கப்பல் கப்பலாக இறக்குமதி செய்த நீங்கள், இவை அனைத்தையும் உங்கள் தொலைக் காட்சி ஏன் காட்டவில்லை. ஏன் இப்படி படுகொலை செய்ததைக் கூட, என் உங்கள் கொலைகார கும்பல் உட்பட நீங்கள் எற்றுக்கொண்டது கிடையாது. ஏன் உங்கள் தமிழ் ஆதரவு அமைப்புக்கள் கூட இதைக் கண்டு மகிழ்சியுடன், இதற்கு பின்னால் சலசலக்கின்றனர்.

    Reply
  • sangu
    sangu

    மகிந்த அரசின் கொலைகள் கண்டிக்கப்பட வேண்டும்.கண்டியுங்கோ. கையோட சொந்தப் பல்லுக்கை இருக்கிற சூத்தையையும் துப்பரவு பண்ணிக் கொண்டு… கண்டியுங்கோ.

    Reply
  • msri
    msri

    சங்கரியாரின் கடிதம் மகிந்தாவின் குப்பைக் கூடைக்குள் (அவரைப்போல்) இருக்கும்! கடிதம்உடைக்காமலே> போடப்பட்டிருக்கும்!

    Reply