காணமல் போன மாணவியை விடுவிக்க கோரி இன்று இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

thinu.jpgமட்டக்களப்பு நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்படடிருந்தால் அவரை விடுதலை செய்யக் கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆம் வகுப்பு மாணவியான சதீஸ்குமார் தினுஸிக்கா (வயது 8 ) என்ற மாணவி நேற்று முன்தினம் பாடசாலைக்கு சென்றிருந்தவேளை காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் புகார் செய்திருந்தனர்.

இம்மாணவி பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார் என்பதை பொலிசார் பாடசாலை வரவு இடாப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். பாடசாலை முன்பாகக் கூடிய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இம்மாணவி காணாமல் போயுள்ள சம்பவத்தைக் கண்டித்தும், கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலைக்கு அண்மித்த வீதிகள் வழியாக இன்று பேரணியொன்றையும் நடத்தினர்.

காணமல் போன மாணவிக்கு என்ன நடந்தது என்பது குறித்து தங்களால் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கிழக்கில் இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பது நல்லதல்ல. உடனடியாக இந்தச் சிறுமியையாவது உயிருடன் மீட்க உரிய நடவடிக்கையை பொறுப்பிலுள்ளவர்கள் செய்ய வேண்டும். இல்லையேல் கிழக்கு மாகாண அரசு தமது பதவிகளை துறந்து வெளியேறுவது சிறந்தது.

    Reply