மத்திய காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்குப் புகலிடமாக பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது (13.10.2024) காசாவின் நுசிராத் முகாமில் உள்ள தளம் மீதே நடாத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் மற்றும் ஹைஃபா இடையே அமைந்துள்ள பகுதியில் உள்ள இஸ்ரேலிய தற்காப்புப் படைகளின் கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக் குழுவின் ஊடக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.